Main News
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸிகா வைரஸ் பரிசோதனை
இலங்கைக்கு வரும் பயணிகள் ஸிகா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார்களா என்பது தொடர்பில் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள, கட்டுநாயக்க விமான நிலையத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்குள் வருபவர்களை பரிசோதிக்க கண்காணிப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக அமெரிக்க மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருபவர்களை கூடுதல் பரிசோதனைக்கு உட்படுத்த உத்தேசித்துள்ளதாகவும் மேலும் ,இதுவரை நாட்டுக்கு அது தொடர்பில் எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை எனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஸிகா என்ற வைரஸ் தற்போது வெளிநாடுகளில் பரவி வருகிறன்றமை…
இனவாத சுவரொட்டிகளை அகற்ற ஒரு வாரகால அவகாசம்
இனவாதத்தை தூண்டும் வகையிலான சுவரொட்களை அகற்றுவதற்கு பஸ் உரிமையாளர்களுக்கு ஒரு வாரக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேயரட்ன தெரிவித்துள்ளார். இந்த சுவரொட்டிகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்தநிலையில் சட்டப்படி பஸ் உரிமையாளர்கள், இவ்வாறான சுவரொட்டிகளை தமது பஸ்களில் ஒட்டுவதற்கு இடமளிக்கக்கூடாது என்று கெமுனு கோரியுள்ளார். ஏற்கனவே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் பொதுத்தேர்தலின் போதும் அரசியல் சுவரொட்டிகளை பஸ்களில் ஒட்டுவதற்கு இடமளிக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் தனியார்…
ஹோமாகமயில் பிக்குமார் “காட்டு தர்பார்” – புத்திஜீவிகள் கடும் கண்டனம்
ஹோமாகம நீதிமன்ற அருகில் பிக்குமார் கலகம் புரிந்து சட்டத்தை அவமதித்ததைக் கண்டித்து சட்டத்துறை அறிஞர்கள், புத்திஜீவிகள் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட பலரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். பொதுவில் இந்தச் செயற்பாடு பௌத்த பிக்குமார்கள் அனைவருக்கும் அபகீர்த்தி விளைவிக்கும் ஒரு விடயமாகி விட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். கொழும்பு முன்னாள் பிரதம மஜிஸ்ரேட்டும், நீதிச்சேவை அதிகாரிகள் சங்கத்தின் முன்னாள் பிரதம செயலாளருமான ஜீ.டீ. குலதிலக்க கருத்துத் தெரிவிக்கையில், நாட்டின் சட்டத்தை நீதிமன்றம் அமுலாக்கும் போது அதற்கு தடை ஏற்படுத்தி ஆஜராகும்…
இலங்கைக்கு துருக்கி நாட்டுத் தூதுவர் எச்சரிக்கை
ஐ.எஸ் இயக்கத்துடன் இணைந்துள்ளதாகக் கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த சில தனிப்பட்டவர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் காரணம் காண்பித்து இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுமானால் அது மிகப் பெரிய தவறாகிவிடும் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டுன்ஜயா ஒகசுகதார் இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நான்கு இலட்சத்து எழுபத்தியோராயிரத்திற்கு மேற்பட்ட படைப்பலத்துடன் உலகின் 10வது மிகப் பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளதும் உலகின் 17ஆவது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளதுமான துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்கான பிரத்தியேக…
ஞானசார தேரருக்கு பிணை வழங்க மறுப்பு
பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (28) காலை ஞானசார தேரரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஹோமாகம நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரங்க திஸாநாயக்க பிணை மனுவை நிராகரித்தள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் வைத்து திட்டிய குற்றஞ்சாட்டின் அடிப்படையில் ஞானசார…
டின் மீன்களுக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு
தகரத்தில் அடைக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ டின் மீனுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். முன்னதாக 50 ரூபாவாக இருந்த இந்த வரியை தற்போது 100 ரூபா வரை அதிகரிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஞானசாரருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கை, மேற்கொள்ள சட்டத்தரணிகள் ஆர்வம்
நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் விசேட அவதானம் செலுத்தியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜெப்ரி அழகரட்னத்தை நேரில் சந்தித்து தான் கலந்துரையாடியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் மேலும்…
“சிக்கா” தொடர்பில் அவதானத்துடன் செயற்பட, இலங்கையர்களுக்கு கோரிக்கை
சிக்கா வைரஸ் தொற்று பரவும் நாடுகளுக்கு பயணிக்கும் இலங்கை சுற்றுலா பிரயாணிகளை அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ம்ககளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறித்த வைரஸ் தொற்று இலங்கையில் இது வரையில் கண்டறியப்படவில்லை என அமைச்சின் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த அமரசிங்க தெரிவித்துள்ளார். எனினும் லத்தீன் அமெரிக்கா வலயத்தின் பிரேசில், கொலம்பியா உள்ளிட்ட 28 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டெங்கு…
ஹோமாகம நீதிமன்றின் முன் ஆர்பாட்டம் செய்த மூன்று பேர் கைது
ஹோமாகம நீதிமன்றத்தில் நுழைந்து நீதிமன்றை அவமதிக்கும் வித்தில் நடந்துகொண்ட ஞானசார தேரர் அக் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றையதினம் (25) நீதிமன்றின் முன்னால் அத்துமீறிய செயற்பாடுகளில் ஈடுபட்டோரை கைது செய்து அடுத்த வழக்கு தினத்தில் மன்றில் சமர்ப்பிக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் நேற்று (27) உத்தரவிட்டிருந்து. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட மூவர் இன்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வெல்பவர்களுக்கு பணப்பரிசு
– எஸ்.ஜே.பிரசாத் – தெற்காசிய விளையாட்டு விழாவில் பதக்கங்கள் வென்றெடுக்கும் இலங்கை வீர, வீராங்கனைகளுக்கு பணப்பரிசு வழங்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தங்கப் பதக்கத்திற்கு 5 இலட்சம் ரூபாவும் வெள்ளிப் பதக்கத்திற்கு 3 இலட்சம் ரூபாவும் வெண்கலப் பதக்கத்துக்கு ஒரு இலட்சம் ரூபாவும் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழா அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை இந்தியாவின் அசாம் மாநிலத்தில் நடைபெறுகிறது. இந்த விளையாட்டுப்…
திலங்கவிடம் 1000 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரும் அர்ஜூன
பிரதிசபாநாயகரும் ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் தலைவருமான திலங்க சுமதிபாலவிடம் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி அமைச்சர் அர்ஜூன ரணதுங்க சட்டக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தமக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறியே இந்த நட்டஈடு கோரப்பட்டுள்ளது. இந்த மாத முதல்பகுதியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா கிரிக்கட்டுக்கான தேர்தலில் திலங்க சுமதிபால வெற்றி பெற்றார். இதனையடுத்து போட்டியில் தோல்வியடைந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கட் வியாபார மாபியாவின் கைகளுக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டார். இதனையடுத்து திலங்க சுமதிபால தெரிவித்த…
ஞானசாரவின் கைது தொடர்பில், மஹிந்த வாய் திறந்தார்..! (வீடியோ)
நாட்டின் சட்டம் வெவ்வேறு முறைகளில் செயற்படுத்தப்படுவது தொடர்பாக மக்கள் திருப்தி அடையவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஞானசாரவின் கைது தொடர்பில் தெரிவித்துள்ளார். நேற்று (27) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.
