Main News
ராஜபக்ஸகளின் கண்ணீர் தொடர்பில் அப்சரா பொன்சேகாவின் கருத்து
எங்கள் குடும்பம் எப்படி துயரடைந்தோம், தாஜூடீனின் பெற்றோர் எவ்வாறு துயரடைந்திருப்பர், பிரகீத் குடும்பம் எவ்வாறு துயரடைந்திருக்கும் என்பதை நாமல் உணரட்டும், இந்த கணமே அவரது குடும்பத்தினர் அவர்களிற்கு துணிச்சலிருந்தால் கடந்த காலங்கள் குறித்து உணரும் தருணமாக அமையட்டும் என்று முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மகள் அப்சரா பொன்சேகா தனது முகப்புத்தகத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வர் நாமல் ராஜபக்ச தனது பெற்றோர்கள் கண்ணீர் விடுவதை…
மின்னஞ்சலை மையப்படுத்திய விசாரணையிலேயே யோஷித்த சிக்கினார்
சி.எஸ்.என். தொலைக்காட்சி அலைவரிசை ஊடாக முன்னெடுக்கப்பட்ட கறுப்புப் பணம் சுத்திகரித்தல் சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் லெப்டினன் யோஷித்த ராஜபக்ஷவை கைது செய்ய குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மின்னஞ்சல் ஆதாரங்களே பிரதானமாக இருந்ததாக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார். சி.எஸ்.என். நிறுவனத்தின் தீர்மானங்கள் எடுக்கும் ஏக நபராகவும் தலைவராகவும் யோஷித்த ராஜபக்ஷவே செயற்பட்டுள்ளார் என்பதை அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மின்னஞ்சலை விஷேட ஆய்வுகளுக்கு உட்படுத்திய போதே…
சிறைச்சாலை உணவை மறுத்த யோஷித
சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வரும் சிறைச்சாலை உணவுகளை உட்கொள்ள மறுப்புத் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (1) முதல் மூன்று வேளை உணவுகளையும் வீட்டில் இருந்து பெற்றுக் கொள்வதற்கு அனுமதி கேட்டுள்ளதாகவும் அவர்களின் கோரிக்கை படி வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார்.
பாகிஸ்தான் – இலங்கை உறவு மிகச் சிறந்த வகையில் உள்ளது
இலங்கையுடனான உறவுகள் மிகச் சிறந்த வகையில் காணப்படுவதாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சயிட் சகீல் ஹூசைன், இரு நாடுகளுக்கும் இடையில் மிகச் சிறந்த உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தி மேம்படுத்திக் கொள்ள இரு தரப்பும் அதிக ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் புத்திஜீவிகள் குழுவொன்று தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது. இவ்வாறான இரு தரப்பு விஜயங்கள் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர புரிந்துணர்வை…
தவறை உணர்ந்த மஹிந்த!
தனது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்ட ஏற்பாடுகளுக்கு அமையவே, தனது மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கண்டியில் வைத்து நேற்று முன்தினம் (31) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, ‘பணச் சலவை சட்டத்தின் கீழேயே யோஷிதவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் பணம், இலங்கையில் முதலிடுவதற்கு தடை விதிக்கும் வகையிலேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் 7 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன….
ஐ.எஸ் களைக் காட்டி இந்நாட்டு முஸ்லிம்களை பயங்காட்ட முயற்சி
வடக்கில் புலிகளைக் காட்டி தெற்கிலுள்ளவர்களை தூண்டிவிடுவதற்கும், வெளிநாட்டிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளைக் காட்டி இந்நாட்டு முஸ்லிம்களை அச்சமூட்ட முனைவதற்கும் சிலர் முயற்சித்து வருகின்றனர் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். “சலகுன” எனும் தனியார் தொலைக்காட்சி உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். இந்த நாட்டை சமஸ்டியாக மாற்றுவதற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டோம். வடக்கிலுள்ள தமிழர்கள் தெற்கிலுள்ள சிங்களவர்களை ஒதுக்கி தனியாக பிரிந்து நின்று வாழ்வதற்கு…
ஞானசாரரின் தேரர் அந்தஸ்து பறிக்கப்பட வேண்டும்! தம்பர அமில தேரர்
பிக்குகளுக்கான காவியுடை அணிந்து கொண்டு அடாவடியாக செயற்படும் ஒரு சிலரின் நடவடிக்கை காரணமாக பௌத்தமதம் அவமதிக்கப்படுவதாக தம்பர அமில தேரர் விமர்சித்துள்ளார். பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் மற்றும் ஹோமாகமை நீதிமன்றத்தில் பிக்குகள் மேற்கொண்ட அடாவடிகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான தம்பர அமில தேரர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், காவியுடை தரித்துக் கொண்டு பௌத்தள பிக்குகளாக…
பிரதமரின் கருத்துக்கு மஹிந்த வருத்தம்
ஊடகவியலாளர்கள் பற்றி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று (28) தெரிவித்த கருத்து தொடர்பில் வருத்தமடைவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய இலஞ்ச ஊழல்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று காலை ஆஜராகினார். அதன்போது ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார். ஜனாதிபதி தேர்தலின்போது சுயாதீன தொலைக்காட்சி சேவையில் பிரசாரம் செய்ததுக்கான பணத்தை வழங்காமல் மோசடி செய்யதாகக் கூறப்படும்…
பீகொக் மாளிகையின் நீச்சல் தடாக மண் அகற்றும் நடவடிக்கை
பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் நிரப்பப்பட்டுள்ள மணல் இன்று அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளின் மேற்பார்வையில் இத் தடாகத்தில் உள்ள மணல் அகற்றப்படவுள்ளது. பீகொக் மாளிகையின் நீச்சல் தடாகத்தில் முன்னாள் ஜனாதிபதியின் தங்கம் உள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில் இந்த மணல் அகற்றப்படவுள்ளது. இது குறித்து பிரபல வர்த்தகரும் தொழிலதிபருமான ஏ.எஸ்.பி. லியனகே பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார். இந்த தடாகத்தில் தங்கம் உள்ளதா என்பது குறித்து எதிர்வரும் முதலாம்…
ஞானசாரருக்கு நிதி எங்கிருந்து கிடைக்கின்றன: விசாரணைகள் ஆரம்பம்
பொதுபலசேனா பொதுச்செயலர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு நிதி கிடைக்கும் வழிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஞானசாரருக்கு எங்கிருந்து நிதிக்கிடைக்கின்றது. அவர் பயன்படுத்தும் வாகனம் எவ்வாறு கிடைத்தது என்ற விடயங்கள் குறித்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் கோத்தபாயவின் ஆதரவுடனேயே ஞானசார தேரர் செயற்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது ஞானசாரர் மஹிந்தவுக்கே ஆதரவை வழங்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய ஊழல் மோசடி விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே இங்கு ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் விலை தொடர்பில் பேச்சு : பிரதமர்
எரிபொருள் விலை தொடர்பில் திறைசேரி மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சு நடத்த நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறி்ப்பிட்டுள்ளார். உலக பொருளாதார நிலை, எமது பொருளாதாரத் திட்டங்கள் என்பவற்றைக் கருத்தில் கொண்டே இது தொடர்பில் ஆராய வேண்டுமென குறிப்பிட்ட அவர் எரிபொருள் விலை தொடர்பில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்தவுள்ளதாகவும்…
