Main News
பாண் விலை அதிகரிப்பு
அனைத்து பேக்கரி உற்பத்தி விலைகளையும் அதிகரித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஒரு இறாத்தல் பாணின் விலையும் பனிஸ் ஒன்றின் விலையும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருக்கு பிணை
முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சரத் ஆப்றூவை ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வந்தார்
– K.Kapila – இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சற்று முன்னர் (12) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நா. அதிகாரிக்கு முன், துணிச்சலை வெளிப்படுத்திய றிஷாத்
இலங்கை முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயகத்தில் நாட்டம் கொண்டவர்கள் என்றும், தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஆயுதப் போராட்டம் தலைதூக்கி நாட்டை சீரழித்த காலத்தில் கூட அவர்கள் எந்தப் பக்கமும் சாராது, ஜனநாயக விழுமியங்களை பேணிப் பாதுகாத்தவர்கள் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார். மனிதாபிமான விவகாரங்களுக்கான இலங்கையின் ஐ.நா வதிவிட இணைப்பாளர் சுபினே நந்தி தனது பதவிக் காலத்தை முடித்துவிட்டு, ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்றுச் செல்வதை…
ஹிருணிகா பிணை பெறுவதில் கின்னஸ் சாதனை
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறுகிய கால இடைவௌியில் பினையில் விடுவிக்கப்பட்டமையானது, புதிய கின்னஸ் சாதனை என, உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். “ஹிருணிகா விரைவாக சிறை சென்று விரைவாக வௌியே வருவார்” என தான் முன்னரே கூறியதாகவும், அது தற்போது நடைபெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், பேராசிரியர் நாலக கோடஹேன பல நாட்களாக சிறையில் இருக்கையில், ஹிருணிகா குறுகிய காலத்தில் பிணையில் விடுவிக்கப்பட்டமை கின்னஸ் சாதனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று (11)…
வெளிவிவகார செயலர் நாளை இலங்கை வருகை
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் ஜெயசங்கர் நாளை இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அவர் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி வாகீஸ்வரன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உட்பட பல முக்கிய அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாந்துவிடக்கூடாது!
புதிய அரசியலமைப்பினால் இலங்கையில் பௌத்த தர்மத்திற்கு வழங்கப்பட்டுள்ள முதலிடமோ ஒற்றையாட்சிக்கோ எதுவிதமான பாதிப்பும் ஏற்படாது. இலங்கை வரலாற்றில சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள முதலாவது புதிய அரசியலமைப்பாக இது அமையும் என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. பிட்டகோட்டேயிலுள்ள ஐ.தே.கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சபை முதல்வரும் நெடுஞ்சாலைகள் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்; அரசாங்கம் தற்போது புதிய அரசியல…
முஸ்லிம்களை புறக்கணித்தால் நெருக்கடி ஏற்படும்: சம்பிக்க
அனைத்து தரப்பினதும் ஒத்துழைப்பின் பிரகாரமே அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும். தமிழ் முஸ்லிம் மக்களை புறக்கணிக்கும் வகையில் இனியும் செயற்பட முடியாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். இனவாத அடிப்படையில் தொடர்ந்தும் செயற்பட்டால் மீண்டும் நாட்டில் உரிமைக்கான போராட்டம் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசியலமைப்பு தொடர்பில் எவ்வாறான யோசனைகளை ஜாதிக ஹெல உறுமய கட்சி முன்வைக்கும் என வினவியபோதே அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், கடந்த…
மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது!- நீதி அமைச்சர்
wrவின் கோரிக்கைக்கு அமைய மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். யார் யாராவது கோருவதற்காகவோ அல்லது யார் யாராவது தீர்மானம் நிறைவேற்றுவதற்காகவே நாட்டின் சட்டங்களில் மாற்றம் செய்யப்பட முடியாது. சட்டங்களை இயற்றும் பூரண அதிகாரம் நாடாளுமன்றிற்கு காணப்படுகின்றது. மரண தண்டனை தொடர்பில் ஜனாதிபதி நாடாளுமன்றின் கருத்தை கோரியிருந்தார். இது தொடர்பில் நாடாளுமன்றில் ஒரு நாள் விவாதம் நடத்தப்பட்டிருந்தது. எனினும், மரண தண்டனை குறித்து இந்த விவாதங்களின் போது தீர்மானம்…
தாக்கப்பட்ட நவமணி பத்திரிகை அலுவலகம்!
களுபோவில, வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள நவமணி அலுவலகம் நேற்று முன்தினம் (09) இரவு இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது. இது குறித்து கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை விடுமுறை என்பதனால் அலுவலகம் மூடப்பட்டிருந்தது இந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த மர்மநபர் சி.சி.டி.வி.யின் இணைப்பை துண்டித்துவிட்டு, அலுவலகத்தின் பூட்டை உடைப்பதற்கு முயற்சித்துள்ளதாகவும் பூட்டின் உறுதித்தன்மை காரணமாக முயற்சி கைவிடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மர்மநபர் முகத்தை மூடிக்கொண்டு சி.சி.டி.வி.யின் இணைப்பை துண்டித்துள்ளதால் குறித்த நபரை அடையாளம் காணமுடியவில்லை. இதனை…
அரசியல் வேண்டாம், பௌத்த பிக்குவாக இருந்தால் போதும்! ஞானசார தேரர்
எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கை எதிலும் ஈடுபடப் போவதில்லை என பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். அத்துடன் பொதுபல சேனா அமைப்பும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் தாம் ஒரு பௌத்த பிக்கு என குறிப்பிட்ட அவர் இனியும் தமக்கு அரசியல் தேவையில்லை எனவும் கூறியுள்ளார். எனினும் பொதுபலஜன பெரமுன அமைப்பு தமது கொள்கைகளை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்லும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை கடந்த…
ஹிருணிகா ஓர் அப்பாவி! சுமணா பிரேமச்சந்திர
தனது மகள் ஹிருணிகா அடாவடித்தனங்கள் தெரியாத ஒரு அப்பாவி என்று பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமணா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். தெமட்டகொடை வாலிபர் ஒருவர் டிபெண்டர் வாகனத்தில் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் ஹிருணிக்கா கைது செய்யபட்டு தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் ஹிருணிக்கா குறித்து அவரது தாயார் சிங்கள ஊடகமொன்றுக்கு பேட்டியொன்றை வழங்கியுள்ளார். அதில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குறித்த கடத்தல் சம்பவத்துடன் ஹிருணிக்கா எவ்வகையிலும் தொடர்பற்றவர். அவரது எதிரிகளே இந்தச் சம்பவத்துடன் அவரது பெயரைத் தொடர்புபடுத்தியுள்ளனர்….
