Main News
மஹிந்த தலைமையில் இன்று போராட்டம் வெடிக்கும்
நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் பல இலட்சம் பேரின் பங்குபற்றலுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையில் இடம்பெறும். எமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தால் அதனை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம். எனவே, அச்சமின்றி அனைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இன்றைய எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துண்டாட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. ஏனெனில், உண்மையான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கூட்டு எதிர்…
நீரை விநியோகிப்பதில் சிக்கல்
மின் தடை அதிகரித்த வீதத்தில் இடம்பெறுவதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக நீரை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உரியவாறு மின்சாரம் கிடைக்காமையே இதற்குக் காரணமாகும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்தார். எனினும், கொழும்பு, காலி, மாத்தறை, நீர்கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களுக்கான நீரை விநியோகிக்கும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியாலமும் மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக…
மின் தடை: பியகம மின்மாற்றி 30 வருடங்கள் பழமையானது
பியகம மின் விநியோக நிலையத்தில் காணப்படும் மின்மாற்றி வெடிப்புக்கு உள்ளானமையினாலேயே இந்த மின்தடை ஏற்பட்டதென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மின்சாரத் தடை தொடர்பில் மின்சக்தி மற்றும் சக்தி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று காலை கையளிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் பேராசிரியர் சுரேன் பட்டகொடவினால் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையை, விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் கைச்சாத்துடன், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், பியகம மின் விநியோக நிலையத்தில் காணப்படும் மின்மாற்றி சுமார் 30 வருடங்கள்…
பிரதமருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்: சஜித்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆசியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளும் முயற்சிக்கு சகலரது ஒத்துழைப்புகளும் அவசியம் என ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற அரசாங்கத்திற்கு ஆதரவான பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மக்களின் நிலைப்பாடுகளை மதித்து நாட்டை அபிவிருத்தி செய்ய இடமளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். ராஜபக்சவினரும், அவரை சுற்றியிருப்பவர்களும் தற்போதை அரசாங்கம் நாட்டில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி…
நாடு திரும்புகிறார் ராஜித
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (16) நாடு திரும்புகிறார். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபத் மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்காக சென்றிருந்த ராஜித சேனாரத்ன சிகிச்சை வெற்றியளித்த நிலையில் இன்று நாடு திரும்பவுள்ளதாக அமைச்சரவை தரப்புக்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடந்த மாதம் 19ஆம் திகதி திடீரென்று மாரடைப்புக்குள்ளான சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன விஷேட விமானம் மூலம் சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமைச்சர் நாடு திரும்பிய உடன் அரசியல் நடவடிக்கைகளிலும், தமது அமைச்சு வேலைத்திட்டங்களிலும்…
“சவால்களை எவ்வாறு சமாளிப்பது”
உலக வர்த்தக அமையத்தின் வர்த்தக ஒப்பந்தங்களை தாண்டி ட்ரான்ஸ் – பசுபிக் நாடுகளின் வர்த்தக ஒப்பந்தங்கள் போன்றவற்றால் இலங்கை போன்ற பல்வேறு நாடுகள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பிலான பட்டறை இன்று (16/03/2016) கொழும்பு, கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்ற கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், இவ்வாறான ஒப்பந்தங்களால் இலங்கை போன்ற நாடுகள் எவ்வாறு பாதிக்கப்படப் போகின்றன என்பது குறித்து ஆராயப்படுவது வரவேற்கப்பட வேண்டியது…
தெஹிவளையில் வீடு எரிந்து நான்கு பேர் வபாத்
தெஹிவளை கவ்தான வீதியில் உள்ள முஸ்லிம் வீடொன்றில் இன்று (16) அதிகாலை தீப்பிடித்ததில் அவ்வீட்டில் இருந்த தாய் இரு மகள்கள் மற்றும் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இன்று அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்ற போதும், காலையிலேயே மற்றவர்களுக்கு தெரிய வந்து பொலிசாருக்கு அறிவித்துள்ளனர். குறிப்பிட்ட குடும்பம் ஓட்டமாவடி அல்லது வெலிகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கேஸ் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கபட்டாலும் இது…
மியன்மாரில் 50 வருடத்திற்கு பின்னர் முதலாவது ஜனாதிபதி நியமிக்கபட்டார்
மியன்மாரில் 50 வருடத்திற்கும் மேற்பட்ட இராணுவ ஆட்சியையடுத்து முதலாவது சிவிலியன் ஜனாதிபதியாக ஹதீன் கயாவ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் நவம்பர் மாதம் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்ற தேசிய ஜனநாயக லீக் கட்சியின் தலைவரான ஆங் சான் சூகியின் நெருங்கிய உதவியாளரான ஹதீன் கயாவ் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதையடுத்து உரையாற்றுகையில், இது ஆங் சான் சூகியின் வெற்றி எனக் குறிப்பிட்டுள்ளார். “இந்த வெற்றி எனது சகோதரி ஆங் சான் சூகியின் வெற்றியாகும். அவருக்கு…
பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பு; நீதிபதி அறிவுரை
‘உங்கள் இருவரின் நடவடிக்கைகளும் பெற்றோர் ஒருவருக்குரிய நடவடிக்கைகளாக நான் காணவில்லை. உங்களின் பராமுகம் குற்றவாளிக்கு அத்தகைய குற்றத்தை செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. எனவே பிள்ளைகளின் பாதுகாப்புக்கு பெற்றோரே பொறுப்பு. நடந்த இந்த கொடூரத்துக்கு நீங்களும் பதில் சொல்ல வேண்டும்.’ என நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, சம்பா ஜானகீ ராஜரத்ன கொலைச் எய்யப்பட்ட சேயாவின் பெற்றோரை நோக்கி தெரிவித்தார். அத்துடன் முழு பெற்றோர் சமூகத்தையும் விழித்த அவர் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விஷேட அறிவுரையினையும்…
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றால் எம்.பி. பதவி பறிபோகும்
ஊழல் மோசடிகளை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மஹிந்த ராஜபக் ஷவின் சகோதரர்களை விசாரிப்பதை தொடர்வதா? கைவிடுவதா? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டை விடுதலை புலிகளுக்கு காட்டிக் கொடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவுபடுத்தி ஜனாதிபதியை பலவீனப்படுத்துவதற்காகவே 17 ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை சூழ்ச்சிக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்….
மின்தடையால் பங்குச் சந்தை நடவடிக்கைகள் பாதிப்பு
கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனை நிலையம் அறிவித்துள்ளது. மின்சார விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடை காரணமாகவே பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பங்குப்பரிவர்த்தனை நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பதவி நீக்கம்
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் குணபால நாணயக்கார உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியிலிருந்து நீக்க கல்வி அமைச்சர் விராஜ் காரியவசம் நடவடிக்கை எடுத்துள்ளார். கல்வி அமைச்சின் செயலாளருக்கு எதிராக குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் நேற்று முன்தினம் (14) மேற்கொண்ட ஆர்ப்பாடத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அசாதாரண தீர்மானம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெரியப்படுத்துவதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவில் நியாயமான தீர்ப்பு வழங்குமாறு கோரி முறையிடுவதாகவும் தேசிய…
