Headlines

நீரை விநியோகிப்பதில் சிக்கல்




மின் தடை அதிகரித்த வீதத்தில் இடம்பெறுவதால் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு தொடர்ச்சியாக நீரை  விநியோகிப்பதில்  சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு உரியவாறு மின்சாரம் கிடைக்காமையே இதற்குக் காரணமாகும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்தார்.
எனினும், கொழும்பு, காலி, மாத்தறை, நீர்கொழும்பு, கண்டி போன்ற பிரதேசங்களுக்கான நீரை விநியோகிக்கும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியாலமும் மின்சாரத்தை வழங்குவதற்கு மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஏனைய பிரதேசங்களுக்கான நீரை விநியோகிக்கும் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகளுக்கு தேவையான மின்சாரம் துண்டிக்கப்படுவதால் நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படுவதாக அவர்  சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரத்திற்கு முன்னதாக அது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *