Main News
மருந்து முன்னேற்றம் குறித்து ஆராய குழு நியமிப்பு
நாடு பூராகவும் உள்ள மருந்து களஞ்சியசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகளை தட்டுப்பாடின்றி வழங்குவதற்காக மருந்து முன்னேற்றம் குறித்த பரிசீலனை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் ஆலோசனைப்படி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபாலவின் தலைமையிலான குழு அமைக்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், அரச மருந்தக உற்பத்தி கூட்டுத்தாபனம், மருந்து விநியோக பிரிவு, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் குறித்த குழுவில்…
சதொசவில் ஊழல் நடைபெற்றதாக கூறுப்படுவது அப்பட்டமான பொய் – டாக்டர் ரொஹாந்த
கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாத் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்றதன் பின்னர் ஊழல்களும் மோசடிகளும் இடம்பெற்றதாக கூறப்படுவது ஓர் அப்பட்டமான பொய்யென்று சதொச நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ரொஹாந்த அத்துக்கோரள அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சதொச நிறுவனத்தை பொறுப்பேற்ற போது ரூபா 15 கோடி நஷ்டத்தில் அந்த நிறுவனம் இயங்கிக்கொண்டிருந்தது. அதனால் அந்த நிறுவனத்தின் தொழிற்பாடுகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக KPMG நிறுவனம் பணிக்கமர்த்தப்பட்டது. அந்த நிறுவனம்…
“குளுகோமாவை தோற்கடிப்போம்”
உலக குளுகோமா வாரத்தை முன்னிட்டு ”குளுகோமாவை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த பாதயாத்திரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (11) முற்பகல் இடம்பெற்றது. கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இப்பாதயாத்திரை விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பமாகி தேசிய கண் வைத்தியசாலை வரை இடம்பெற்றது. A walk organized to mark the World Glaucoma Week under the theme “Beat Invisible Glaucoma” held under the patronage of President Maithripala…
கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தீவிர மோசடி மற்றும் ஊழல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(11) காலை முன்னிலையானார். அது , ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காகவே இவ்வாறு ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார். இன்று காலை 8.45 மணியளவில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆணையத்திற்கு வந்ததாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
மஹிந்தவிற்கு எதிரான வழக்கு…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 23ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களுக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு 142 மில்லியன் ரூபா கட்டணம் செலுத்த வேண்டியிருப்பதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கட்டணத்தைச் செலுத்துமாறு கோரி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு இலங்கை போக்குவரத்துச் சபை வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்த…
குற்றத்தை ஒப்புக்கொண்டார் துமிந்த
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான சொத்துக்களை வெளிப்படுத்தவில்லை என்று, அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில், குற்றங்களை ஒப்புக்கொண்டார். அத்துடன், இது தொடர்பாக தொடுக்கப்பட்டுள்ள மூன்று வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவருவதற்கும் அவர் இன்று (11), கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இணக்கம் தெரிவித்தார்.
யோஷிதவுக்கு எதிரான ஆதாரங்கள் அழிப்பு
சி.எஸ்.என். தொலைக்காட்சி மூலம் பொதுச்சொத்து துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மகன் லெப்.யோஷித ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிரான இணைய ஆதாரங்கள் சில வெளிநாட்டில் இருந்து செயற்படும் அடையாளம் தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்டுள்ளன. கனடா, அவுஸ்திரேலியாவில் இருந்தே இவ்வாறு அந்த சான்றுகள் அழிக்கப்பட்டுள்ளமை கணினி அவசர நிலைமைகள் தொடர்பிலான ஆய்வகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த நடவடிக்கைக்காக சி.எஸ்.என். நிறுவனத்தின் முன்னாள் தகவல் தொழில் நுட்ப முகாமையாளரின் மின்னஞ்சலே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நிதிக் குற்றப்…
நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் தீவிரம்!
பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு அரசாங்கத்துடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்து 307 மில்லியன் ரூபாக்களை சம்பாதித்தமை தொடர்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கொழும்பு 5ல் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமானது என கருதப்படும் என்.ஆர். கண்சல்டன்ஸ் மற்றும் க்வர்ஸ் ஹோல்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமைந்துள்ள அலுவலகங்களில் இருந்து கடுவலை நீதிவானின் உத்தரவுக்கு அமைய 12 ஆவணங்களும் 4 கணினிகளும் புலனாய்வாளர்களால் கைப்பற்றப்பட்டு தீவிர விசாரணைகள்…
தம்மாலோக தேரரின் பிணை மனு மீது இன்று விசாரணை!
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் உடுவே தம்மாலோக தேரரை பிணையில் விடுவிக்குமாறு கேட்டு முன்வைக்கப்பட்டுள்ள மனு இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. சட்ட ரீதியான அத்தாட்சிப் பத்திரம் இன்றி யானையொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலஞ் சென்ற அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகளில் சந்தேகநபரான உடவே தம்மாலோக தேரரை சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் கலந்து கொள்ள அனுமதிக்குமாறும் கொழும்பு மேலதிக மஜிஸ்ட்ரேட் நீதவான்…
வீரவன்ச மகனின் வெளிநாட்டு விஜயம்: பாராளுமன்றத்தில் சர்ச்சை
– ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம் – 2014 ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற உலக நகர மகாநாட்டில் விமல் வீரவன்சவின் புதல்வரான விபூதி விஸ்வஜித் வீரவன்ஸ எந்த அடிப்படையில் பங்கேற்றார். தந்தை பாசம் தான் காரணமா என ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினரான நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வியெழுப்பியுள்ளார். இன்று வியாழக்கிழமை பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால தலைமையில் முற்பகல் 10.30க்கு பாராளுமன்றம் கூடியது. இதன்போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜே.வி.பி. எம்.பி.யான நளிந்த ஜயதிஸ்ஸ வீடமைப்பு,…
அத்ததஸ்ஸி தேரரின் மறைவுக்கு சீனத்தூதரகம் அனுதாபம்
அஸ்கிரியபீட மகாநாயக்க கலகம அத்ததஸ்ஸி தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 13ம் திகதி இடம்பெறவுள்ளன. இதனையடுத்து அன்றைய தினத்தை உள்விவகார அமைச்சு தேசிய துக்க தினமாக அறிவித்துள்ளது. அன்னாரது இறுதிக் கிரியைகளை எதிர்வரும் 13ஆம் திகதி பிற்பகல் 02.30க்கு கண்டியிலுள்ள பொலிஸ் விளையாட்டரங்களில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கலகம அத்ததஸ்ஸி தேரர் காலமாகியதை அடுத்து கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளது. சீனா – ஸ்ரீலங்காவிற்கு இடையில் பௌத்த தர்மத்திற்கு கலகம அத்ததஸ்ஸி தேரரின் பங்களிப்பு அளப்பரியதாகும் என்று…
அரசியல் எதிர்காலமற்றவர்களே மஹிந்த அணியில்..!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் ஒன்றிணைந்துள்ள அதேவேளை விமல் வீரவன்ச, பந்துல குணவர்தன போன்ற ஒரு சிலரே அரசியல் எதிர்காலம் அற்ற மக்களால் வெறுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் புதிய கட்சியொன்றை அமைக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பீ.ஹரிசன் தெரிவித்தார்.
