Main News
அவசரமாகக் கூடுகிறது பொருளாதாரக் குழு!
அரசாங்கத்தின் பொருளாதாரக் குழு அவசரமாக இன்று (16) கூடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பொருளாதாரக் குழுவில் மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் அங்கம் வகிக்காத நிலையிலும், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்தடை உள்ளிட்ட நெருக்கடிகள் குறித்து ஆராயும் நோக்கில், மின்வலு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோருக்கும் பொருளாதாரக் குழு அழைப்பு…
2020இல் புகைப்பிடித்தல் முற்றாகத் தடை
2020ஆம் ஆண்டில் புகைப்பிடித்தலை முற்று முழுதாகத் தடை செய்ய சுகாதார சுதேச வைத்திய மற்றும் போசாக்கு அமைச்சு தீர்மானித்துள்ளது. கொழும்பு சுகாதார கல்விக் காரியாலயத்தில் நேற்று (15) நடைபெற்ற உடகவியலாளர் சந்திப்பின் போது,சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித மஹிபால இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். தொற்றா நோய்கள் இலங்கையில் துரித கதியில் அதிகரித்துள்ளது.இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புகைப்பிடித்தலுக்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இருதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு தொற்றாத நோய்கள்…
முஸ்லிம்களுக்கு ஒரு அங்கல இடமும் கிடையாது – சிங்கள ராவய
கூரகலயில் ஜெய்லானி பள்ளிவாசல் அமைந்துள்ள பிரதேசம் பௌத்தர்களின் புனிதபூமியாகும். இது எமது பூர்வீக தொல்பொருள் பிரதேசமாகும். நாட்டிலுள்ள தொல்பொருள் சட்டத்தைப் பயன்படுத்தி கூரகலயில் முஸ்லிம்களின் வணக்கஸ்தலம் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார். கூரகல விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் ‘கூரகலயில் அமைந்துள்ள முஸ்லிம்களின் வணக்க ஸ்தலம் இன்னும் இயங்கிவருகிறது. அப்பகுதியிலுள்ள சட்டவிரோத கட்டடங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டன. முஸ்லிம்களின்…
தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்தும் பொறுப்பு என்னுடையதாகும் –
அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களில் தேசிய மரபுரிமைகளைப் பாதுகாத்து தேசிய தொழின்முயற்சியாளர்களைப் பலப்படுத்தும் பொறுப்பை தனிப்பட்ட முறையில் தான் ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தேசிய தொழின்முயற்சியாளர்களைப் பலவீனப்படுத்தும் எந்தவொரு கொள்கையையும் அரசாங்கம் ஒருபோதும் நடைமுறைப்படுத்தாது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். அண்மையில் (11) பிற்பகல் கொழும்பில் நடைபெற்ற இளம் தொழின்முயற்சியாளர்கள் சங்கத்தின் 17 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஆயிரம் கருத்துக்கள் உருவாகும் இடத்தில் மிகவும் சரியான…
நான் குற்றவாளி என்றால், தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயார் – றிஷாத்
வில்பத்து பிரதேசத்தில் எமது மக்களோ நானோ காடுகளை அழிக்கவில்லை. யானைகளையோ மிருகங்களையோ கொல்லவில்லை. ராவணா பலய அமைப்பின் செயலாளர் என்னைத் தூக்கிலிட வேண்டுமென கருத்து வெளியிட்டுள்ளமை இனவாதத்தின் வெளிப்பாடாகும் என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். ராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வில்பத்து வன பிரதேசத்திலுள்ள காடுகளை அழித்து அங்குள்ள யானைகளை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு…
நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு
சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர், நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மேலும், யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி…
இலங்கையின் அரசியல் நடைமுறை குறித்து இந்தியா மகிழ்ச்சி
இலங்கையின் நடைமுறை அரசியல் நிலை குறித்து இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, புதுடில்லி விஜயத்தின் போது பிரணாப் முகர்ஜியை சந்தித்துள்ளார். இதன்போது தாம் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய உத்தேசித்துள்ளதாக முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதன்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரம் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. பிராந்தியத்தில் பலமிக்க நாடு என்ற வகையில் இந்தியா தமது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்துக்கொள்ள தயாராக உள்ளதாகவும் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். புதுடில்லியில் மார்ச் 11…
மின்சாரத் தடையில் நாச வேலை!
நாச வேலை காரணமாக நாட்டில் மின்சாரத் தடை ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என மீள் சுழற்சி சக்தி மற்றும் மின்வலு பிரதி அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார். மின்சாரம் தடைப்பட்டது தொடர்பில் வெளிப்படையாக தெரியும் காரணிகள் மிகவும் அசாதாரணமானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு அப்பாலான காரணிகளின் அடிப்படையில் மின்சாரம் தடைப்பட்டதா என்பதனை தெரிந்து கொள்ள வேண்டும் எனவும்,இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவும் இவ்வாறு மின்சாரம் தடைபட்டிருந்தமை, நாச வேலையாக இருக்குமோ என சந்தேகிக்க போதியளவு…
மின்சார நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு – ஜனாதிபதி உத்தரவு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மின்சார நிலையங்களுக்கும் பாதுகாப்பு வழங்குமாறு இராணுவத்திற்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேற்று நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்சார தடைக்கு நாசகார செயல்கள் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டு வந்தவேளையில் ஜனாதிபதி இந்த திடீர் உத்தரவை பிறப்பித்தள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மின்சார தடை தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்றையும் ஏற்பாடு செய்தள்ளார். மின்சார தடை தொடர்பில் பல பக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 21 வருடங்களுக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட…
யோஷிதவுக்கு பிணை
– அலுவலக செய்தியாளர் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு பிணை வழங்கப் பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (14) இந்த நால்வருக்கும் பிணை வழங்கியுள்ளது.
இலங்கை தேசிய கூட்டுறவு ஆணைக்குழுவின் தலைவராக அலிகான் ஷரீப் நியமனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ றிஷாத் பதியுதீன் அவர்களால் இலங்கை தேசிய கூட்டுறவு ஆணைக்குழுவின் தலைவராக அல்ஹாஜ் அலிகான் ஷரீப் அவர்கள் உடனடியாக செயற்படும் வண்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரின் செயலாளரும், பிரதிக்கல்விப்பணிப்பாளரும், மீள்குடியேற்றத்திற்கான அமைச்சு மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு மற்றும் ,கைத்தொழில் வர்த்தக அமைச்சு ஆகியவற்றின் இணைப்புச் செயளாலருமாக கடமையாற்றியுள்ளதுடன், மீள் குடியேற்ற அதிகார சபை இலங்கை…
தனியார் துறையினருக்கு இரு கட்டங்களில் சம்பள அதிகரிப்பு
– அழகன் கனகராஜ் – சேவையாளர்களின் வரவு – செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவு தொடர்பிலான சட்ட மூலத்தின் ஊடாக தனியார் துறையினருக்கான சம்பள அதிகரிப்பு இரண்டு கட்டங்களில் அதிகரிக்கப்படும் என்று தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார். வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் சட்ட மூலத்தை நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (11) சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
