Main News
மின்சார விநியோகத் தடை இனி இல்லை!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா
நுரைச்சோலை அனல் மின்சார மைய திருத்தப் பணிகள் நிறைவடைந்துள்ளமையால் இனிமேல் மின்சார விநியோக தடையிருக்காது என்று மின்சக்தித்துறை பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். இதன்படி நுரைச்சோலையில் இருந்து முழுமையான 900 மெகாவோட்ஸ் மின்சார அலகையும் நேற்று நள்ளிரவுடன் தேசிய மின்சார விநியோகத்துக்கு வழங்கக்கூடியதாக இருக்கும் என்று அவர் நேற்று மாலை வெளியிட்ட தகவல் ஒன்றில் தெரிவிக்கிறார். எனவே அமைச்சரின் கருத்துப்படி இன்று முதல் மின்சார விநியோகத்தடை இருக்காது என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேவேளை நாட்டின் மின்சார…
விக்டோரியா நீர்மின் நிலைய இயந்திரங்களும் பழையவை
விக்டோரியா மின்நிலையத்தில் 3 மின்னுற்பத்தி இயந்திரங்கள் செயற்பட்டு வருகின்ற நிலையில், இவ்வியந்திரங்கள் 30 வருடங்களுக்கு மேல் பழைமையானவை என்றும் அவற்றிலிருந்து உயரிய பயனைப் பெற வேண்டுமாயின் அவற்றை உடனடியாக பழுதுபார்க்க வேண்டும் என தொழில்நுட்ப நிபுணர்கள் அறிவித்துள்ளனர்.
இன்னும் இரண்டு மாதங்களில் மினி பட்ஜெட்
நடப்பாண்டு வரவு செலவுத்திட்டத்தில் திருத்தம் செய்து மினி பட்ஜெட் இன்னும் இரண்டு மாதங்களில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தினால் எந்தநேரமும் சலுகைகளை வழங்க முடியாது. சலுகை வழங்குவது மாத்திரமே அரசாங்கத்தி வேலை கிடையாது. சர்வதேச நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள தருவாயில் பல்வேறுபட்ட திருத்தம் செய்யவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
G7 மாநாடு: இலங்கை ஜனாதிபதிக்கு முதன்முறையாக அழைப்பு
G7 மாநாட்டில் பங்கேற்பதற்கு இலங்கை ஜனாதிபதி ஒருவருக்கு முதன்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேர்மனியில் எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளதாக பிரதி அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (17) கொழும்பு அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே G7 மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ.ம.சு.முன்னணியை மகிந்த அமரவீர பலப்படுத்துவார்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினை சக்திமிக்க கட்சியாக மாற்றுவதற்கு செயலாளர் மகிந்த அமரவீர அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர் மகிந்த அமரவீர, நேற்று (16) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், எமது முன்னாள் செயலாளர் விஷ்வ வர்ணபால…
வெளிநாடு செல்லும் பணிப்பெண்களின் வயதெல்லையில் திருத்தம்
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்லும் இலங்கைப் பணிப்பெண்களின் வயதெல்லையில் திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது. இதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வயதெல்லையானது மத்திய கிழக்கு நாடுகளுக்கும், மத்திய கிழக்கு நாடுகள் அல்லாத நாடுகளுக்கும் செல்லும் பணிப்பெண்களுக்காக நடைமுறைப்படுத்தபடவுள்ளது. இதேவேளை, சவுதி அரேபியாவிற்கு செல்லும் பணிப்பெண்களுக்கான வயதெல்லை 25 குவைட், ஜோர்தான், டுபாய், லெபனான், கட்டார், பஹரேன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கான வயதெல்லை 23 இவையே தற்போது நடைமுறையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய…
பேஸ்புக்கில் அவதூறு ஏற்படுத்தும் கும்பல் தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும்
அரசியல்வாதிகள் தொடர்பில் பேஸ்புக் மூலம் அவதூறு பரப்பும் கும்பல் தொடர்பில் இன்னும் சில நாட்களில் தகவல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (16) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த அமரவீர இந்த விடயம் தொடர்பில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பேஸ்புக் கும்பலில் 40 தொடக்கம் 50 வரையான நபர்கள் இருப்பதாகவும், இவர்களுக்கான பணம் வழங்குவதெற்கென சிலர் இருப்பதாகவும்…
கொழும்பு பங்குச் சந்தை 17 நிமிடங்களுக்கு ஸ்தம்பிதம்
கொழும்பு பங்குச் சந்தை 17 நிமிடங்களுக்கு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மின்சாரத் தடை காரணமாக நேற்று 17 நிமிடங்களுக்கு கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. இதன்படி, நேற்று (16) காலை 9.58 முதல் 10.15 மணி வரையில் 17 நிமிடங்கள் பங்குச் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. இந்த 17 நிமிடங்களைத் தவிர்ந்த ஏனைய நேரங்களில் எவ்வித தடையும் இன்றி பங்குச் சந்தை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஹைட் மைதானத்துக்கு நானும் செல்வேன்: மஹிந்த
கூட்டு எதிரணியினரால் கொழும்பு, இப்பன்வெல ஹைட் மைதானத்தில் இன்று நடத்தப்படவுள்ள கூட்டத்தில், தான் கலந்துகொள்ளப்போவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளார். ‘பொய்ப் பிரசாரங்களை நம்பி ஏமாராதீர்கள். நான் ஹைட் மைதானத்துக்குச் செல்வேன்’ என்று அவர் அந்த வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஹைட் மைதானத்தில் இன்று (17) நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க, அறிவித்துள்ளமை…
கொலை செய்ய வந்தவரை விடுவியுங்கள்
‘என்னைக் கொலை செய்ய வந்தவருக்கு பொதுமன்னிப்பளித்து விடுவிக்க வேண்டும்’ என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மின்சார தடைக்கான காரணம் கசிந்தது
– எம்.ஆர்.எம்.வஸீம் – மின்சார தடையானது அரசாங்கத்தின் சதியல்ல. மின்சார பொறியியலாளர்களின் அரசியல் சதிநடவடிக்கையாகும் என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் இயக்கம் இன்று (17) கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார தடை குழப்பத்துக்கு அரசாங்கத்தின் சதிநடவடிக்கையென எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. அரசாங்கம் இவ்வாறான செயலை மேற்கொண்டு மக்களை ஒருபோதும் அசௌகரியத்துக்கு…
மைத்திரியை எவருக்கும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை
2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட புரட்சியிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியிலும் 90 வீதமான பங்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்களுடையது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மால் தெரிவுசெய்யப்பட்டவர். அவர் எமது கட்சிக்கு உரித்துடையவர் என்ற வகையில் அவரை விட்டுக்கொடுக்கப்போவதில்லை. எவருக்கும் அவரை சொந்தம் கொண்டாடும் அதிகாரமும் இல்லை என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தின் இருப்பை தக்க வைக்குமாறு வலியுறுத்தி ஐக்கிய தேசிய கட்சி…
