Main News
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி!
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்கான சரியான வழியில் இலங்கை பயணித்து கொண்டிருக்கிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைத் தூதுவர் டேவிட் டெலி தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் தொடர்பில் 58 விடயங்கள் தொடர்பில் ஐரொப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தியுள்ளது. இதில் மனித உரிமை விடயங்களே பிரதானமானவையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரையில் அது எந்த நாட்டுக்கும் வாழ்க்கை தர உயர்வுக்காக அழுத்தம் கொடுக்காது….
இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பிரித்தானியா பாராட்டு!
ஊழலற்ற நல்லாட்சிக்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு பிரித்தானியா பாராட்டு தெரிவித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூன் இதனை தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனை சந்தித்து கலந்துரையாடியிருந்தார் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது பிரித்தானியப் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வரவேற்பு அளித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையில்…
பரஸ்பர வர்த்தக உறவுகள் மேம்படும் – சீனத் தூதுக்குழுவினரிடம் அமைச்சர் றிஷாத் தெரிவிப்பு
சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையே விரைவில் கைச்சாத்தாகவிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பின்னர், இரண்டு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார வர்த்தக உறவுகள், மேலும் மேம்படுமென அமைச்சர் றிசாத் தெரிவித்தார். சீனாவின் கனியவள நிறுவனத்தின் பிரதிநிதிகள், அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சின் அலுவலகத்தில் இன்று (12/05/2016) சந்தித்து, இலங்கையின் கனியவளத் துறையில் சீன நிறுவனங்களின் முதலீடு தொடர்பாக பேச்சு நடத்தினர். இந்த சந்திப்பில் கலந்துகொண்ட சீனப் பிரதிநிதிகள், இந்தத் துறையில் தாங்கள் கொண்டுள்ள ஆர்வத்தையும், இலங்கையின் பூகோள நிலைமை கனிய…
இன்று சர்வதேச தாதியர் தினம்!
உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் மே 12 ஆம் திகதியாகிய இன்று சர்வதேச தாதியர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. தாதியர்கள் சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பும் அவர்களின் சேவைத் தியாகங்களையும் சிறப்பாக நினைவுகூறும் பொருட்டு இத்தினம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் இவ்வாண்டுக்கான தாதியர் தினம் “மாற்றத்திற்கான மாபொரும் சக்தி தாதியர்களே – அவர்கள் தமது விரிவான திறனினூடாக ஆரோக்கிய வாழ்வை மேம்படுத்துகிறார்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச தாதியர் அமைப்பு (International Council of Nurses) இத்தினத்தை 1965…
புதிய அரசியலமைப்பில் 4 இனங்களுக்கும் சமவுரிமை – சந்திரிக்கா
இலங்கையின் மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில்நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் விசேட அமர்வில் நேற்று -11- இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்றுஉரையாற்றிய முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க குழுவின் தலைவருமான சந்திரிக்காகுமாரதுங்க, இதனை தெரிவித்துள்ளார். இதன்போது சந்திரிக்கா, இலங்கை கடந்த பல வருடங்களாக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியபோர் ஒன்றுக்கு முகங்கொடுத்ததாக குறிப்பிட்டார். போர் வெற்றி கொள்ளப்பட்டாலும் கூட நாட்டினால் சமாதானத்தைவெற்றி கொள்ள முடியவில்லை. எனினும் இதனை முறியடிக்கும்…
ஞானசாரரின் கருத்துக்கு, ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்
– பரீல் – அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையினால் அங்கீகாரம் பெற்றுள்ள ‘தப்லீக் ஜமாஅத்’ ஒரு அடிப்படைவாத குழு என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கருத்து வெளியிட்டுள்ளமைக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ‘தப்லீக் ஜமாஅத்’ மக்களிடையே நற்பண்புகளையும் சகோதரத்துவத்தையுமே போதித்து வருகிறது. மக்களை நல்வழிப்படுத்துவதேயன்றி அடிப்படைவாதத்தைப் போதிக்கவில்லை என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் தெரிவித்தார். பொதுபலசேனா…
ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிப்பு
பிரசல்ஸ்ஸில் நேற்று (11) இடம்பெற்ற சந்திப்பை அடுத்து, விரைவில் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவு அமைச்சர் ஹர்ச டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். நேற்றைய சந்திப்பு தொடர்பாக கருத்துரைத்த ஹர்ச, இலங்கை தற்போது ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை பெற்றுக் கொள்வதற்கான இறுதி அடியை, அதாவது விண்ணப்பிக்கக்கூடிய நிலையை அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இலங்கை – ஐரோப்பிய ஒன்றியம் செயற்குழு கூட்டம் நேற்று பிரசல்ஸ்ஸில் இடம்பெற்றது, இது விண்ணப்பத்தை…
பிரதமர் தலைமையில் இன்று விசேட கூட்டம்
தேசிய அரசாங்கத்தின் வரவு–செலவுத் திட்டத்தின் மூலமாக பரிந்துரைசெய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் 2500 ரூபா சம்பள உயர்வுக்கு தோட்ட நிர்வாகங்கள் மறுப்புத் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் (12) பிரதமர் தலைமையில் சம்பள விடயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு!
நல்லெண்ண விஜயம் ஒன்றினை மேற்கொண்டு, “உரக” மற்றும் “தக்சிமயேயமா” எனும் இரு ஜப்பானிய கடற்படை கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை நேற்று (11) வந்தடைந்துள்ளன. இதன் போது கடற்படை மரபுகளுக்கு இணங்க இலங்கை கடற்படையினர் அவற்றை வரவேற்றனர். அத்துடன் அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் நல்லெண்ணம் மற்றும் நட்பின் வெளிப்பாடாக நட்புரீதியான தயூளக்கட்டுப் பந்தாட்டப் (பேஸ் போல்) போட்டியில் இலங்கை கடற்படையின் பேஸ்பால் அணியுடன் கலந்து கொள்ளவுள்ளனர். மேலும் அவர்கள் எதிர்வரும் பதினான்காம் திகதி இலங்கைக்கான விஜயத்தினைப் பூர்த்தி செய்து…
200 மெற்றிக் தொன் பேரீத்தம் இலங்கைக்கு இலவசமாக வழங்கிவைப்பு
– ஏ.எஸ்.எம்.ஜாவித் – இவ்வருட புனித ரமழானை முன்னிட்டு சவுதி அரேபிய அரசாங்கம் வழமைபோல் இலங்கையில் உள்ள நோன்பாளிகளுக்கு வழங்கவென சுமார் 200 மெற்றிக் தொன் பேரீத்தம் பழங்களை சவுதி அரேபியாவின் சல்மான் மனிதநேய மற்றும் மீட்சி நிலையத்தின் மூலம் இலவசமாக வழங்கியுள்ளது. மேற்படிப் பேரீத்தம் பழங்களை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் அவரது காரியாலயத்தில் இன்று (11) இடம் பெற்றது. பேரீத்தம் பழங்களை…
பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம்
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்றொரு புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி ஜுவான் மெண்டஸ் இடம் அரசாங்கம் இதுகுறித்து தெரியப்படுத்தியுள்ளது. குறித்த தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் திட்டமிட்ட குற்றங்களைத் தடுத்தல், விசாரணைகளுக்கான சட்ட அமைப்புகள், மற்றும் புலனாய்வுப்பிரிவு என்று மூன்று பிரிவுகள் உள்ளடக்கப்படவுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப்பதிலாக புதிய சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்ற அங்கீகாரத்துடன் விரைவில்…
மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலி
பதுளை, மடுல்சின்ன கல்வுல்ல மெட்டிகாத்தன்னை பகுதியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (10) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 49 வயதான இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார். கணவனும் மனைவியும் வீட்டில் இருந்த போது மின்னல் தாக்குதலுக்கு இழக்காகி மனைவி இறந்துள்ளதாகவும் கணவனுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன்…
