Main News
அதிவேக நெடுஞ்சாலை இன்று இலவசம்
தெற்கு அதிவேகப் பாதையின் கடவத்தை மற்றும் கொட்டாவைக்கு இடைப்பட்ட பாதையை பொதுமக்கள் இன்று இலவசமாக போக்குவரத்திற்கு பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை கூறியுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்த முடியும் என்றும், வீதி விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
‘தற்காலிக விடுமுறை வழங்கலாம்’
நாட்டில் நிலவுகின்ற மோசமான வானிலை காரணமாகப் பாடசாலைகளைக் கொண்டு நடத்துவதில் இடையூறுகள் ஏற்படுமாயின், அவைதொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், சகல வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளார். பாடசாலையைக் கொண்டுநடத்துவதற்கு இயலாத நிலைமையொன்று ஏற்பட்டால், அவ்வாறான பாடசாலைகளுக்குத் தற்காலிகமாக விடுமுறை வழங்குவதற்கோ அல்லது தற்காலிகமாக மூடிவிடுவதற்கோ அனுமதி உண்டு என்றும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை! கடுவலை அதிவேக நெடுஞ்சாலை தற்காலிகமாக மூடல்
கடுவலை தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் நுழைவு பகுதி வெளியேறும் பகுதிகளில் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவே இந்த பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் காரணமாக 10 மாத குழந்தை உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளன. பாதிப்பு காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
யுத்த வெற்றி விழா இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது!
யுத்த வெற்றி விழா கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது அதற்கு பதிலாக படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம் மாத்திரமே இடம்பெறும் என்று பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டே தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டு அதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். நாளை நடைபெறவுள்ள படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம்…
மூழ்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ள இலங்கை நாடாளுமன்றம்
நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக நாடாளுமன்றத்தை அண்மித்து அமைந்திருக்கும் தியவன்னா வாவியின் நீர்மட்டம் கடுமையாக அதிகரித்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 1.3 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தியவன்னா வாவியின் நீர்மட்டம் தற்போதைக்கு 1.8 மீட்டரை அண்மித்துள்ளது. இன்னும் ஓரிரு அடிகள் நீர்மட்டம் உயரும் பட்சத்தில் நாடாளுமன்றத்தினுள் முற்றாக வெள்ளம் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடற்படை மற்றும் இராணுவத்தினர் நாடாளுமன்றத்தை வெள்ளத்திலிருந்து பாதுகாக்கும் முன்னேற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் நாடாளுமன்ற மைதானம் அதனை அண்மித்த பாதைகள்…
வெள்ளத்தில் மூழ்கியது பேலியகொடை மத்திய மீன் சந்தை
பேலியகொடை மத்திய மீன் சந்தையின் வாயிற் பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று(16) அதிகாலை பொருட்களை கொண்டு வந்த லொறிகளும், மீன்கள் கொண்டுவந்த லொறிகளும் சந்தையின் உட்பகுதிக்குள் உள்நுழைய முடியாத நிலை காணப்படுவதாக பேலியகொடை மீன் சந்தை சங்கத்தின் தலைவர் ஜயசிறி விக்கிரமஆராச்சி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த வெள்ள நிலைமை காரணமாக மத்திய மீன் சந்தைப் பகுதியின்…
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி எனக்கே உரியது என்கிறார் மேர்வின்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் படத்தை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் காட்சிப்படுத்துமாறு, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நடவடிக்கைகளை மேற்கொண்டமையால் இவ்வாறு செய்ய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற பெயரில் மேர்வின் சில்வாவால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டவர்களுக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என கூற முடியாது என இதன்போது குறிப்பிட்ட அவர், அந்த உரிமை…
3 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு இருந்த மூன்று விமானங்கள் மத்தல மற்றும் இந்தியாவுக்கு திருப்பிவிடப்பட்டன என்று விமான நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்கவில் அதிகூடிய, மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 பேர் மரணம்; நால்வர் மாயம்; 7,090 பேர் பாதிப்பு
வீதிகளில் காட்டாறு கரைபுரண்டது தலைகாட்ட விடாது பேய் மழை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு 30 வீடுகளின் கூரைகள்; அள்ளுண்டன நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையிலும் இருவர் மரணமடைந்துள்ளனர், நால்வரைக் காணவில்லை மற்றும் 1,871 குடும்பங்களைச் சேர்ந்த 7,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிவரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு…
தேர்தல் இடாப்பு திருத்த மாதிரி படிவ விநியோகம்
2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் இடாப்பு திருத்த நடவடிக்கைகளுக்கான மாதிரி படிவம் விநியோகம் இன்று (16) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். கிராமசேவகர் அதிகாரிகள் மூலம் இந்த தேர்தல் இடாப்பு மாதிரி படிவங்கள் வீடுவீடாக விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்த வருடம் ஜூன் முதலாம் திகதிக்கு 18 வயதை பூர்த்தியாகும் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் வாக்காளர் இடாப்பு பத்திரத்தில் தங்கள் பெயரை பதிவு செய்துகொள்வதற்கு முடியுமாகின்றது. அத்துடன் பூர்த்திசெய்யப்பட்ட மாதிரி இடாப்பு…
மக்களுக்கு அவசர நிவாரணம்! றிஷாத்தின் கோரிக்கையை ஏற்று யாப்பா உடன் நடவடிக்கை
– சுஐப் எம்.காசிம் – வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு, வடமேல் மாகாண மக்களுக்கு அவசர நிவாரண உதவிகளை வழங்குமாறு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், அமைச்சர் அனுரபிரியதர்ஸன யாப்பாவிடம் விடுத்த வேண்டுகோளை அடுத்து, குறிப்பிட்ட மாகாணங்களில் அமைந்துள்ள, அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பா அவசர பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (16/05/2016) காலை அமைச்சர் அனுர பிரியதர்ஸன யாப்பாவுடன் தொடர்புகொண்ட அமைச்சர் றிசாத் பதியுதீன்,…
இலங்கையில் காய்த்திருக்கும் அதிசய மாங்காய்
இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில், கிண்ணியா பிரதேசத்தில் உள்ள குறிஞ்சாக்கேணி இரண்டாம் வட்டார பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டுத் தோட்டத்தில் மனிதமுகத்தின் அமைப்பிலான அதிசய மாங்காய் ஒன்று காய்த்துள்ளது. தோற்றத்தில் மனிதர்களின் முகத்தை போலவே உள்ள இந்த அதிசய மாங்காயில் மனிதமுகத்தில் உள்ளது போலவே கண்கள், மூக்கு, வாய் போன்றவையும் காணப்படுகின்றன. இதுதொடர்பான செய்திகள் இலங்கையில் உள்ள சில ஊடகங்களில் வெளியானபின்னர் சமூகவலைத்தளங்கள் மூலமாக இந்த தகவல் படுவேகமாக பரவி வருகிறது. இதேபோல், நைஜீரியா நாட்டிலும் ஒரு மாங்காய்…
