Main News
உயிருடன் பிடிக்கப்பட்ட சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு!
– க.கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை மலையிலிருந்து நேற்று (10) உயிருடன் மீட்கப்பட்டு நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்ட சிறுத்தைக் குட்டியொன்று உயிரிழந்துள்ளதாக நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். நேற்று காலை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள், சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டு உயிருடன் பிடித்துள்ளனர். நுவரெலியா மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சிறுத்தை குட்டியை…
பனாமா ஆவணங்கள் குறித்து தொடர்ந்தும் விசாரணை
பனாமா ஆவணங்களில் வௌியிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக, ட்ரான்ஸ்பரன்ஸி இன்டநெசனல் அமைப்பு தெரிவித்துள்ளது. வரி செலுத்துவதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, சர்ச்சைக்குரிய பனாமாவின் மொசெக் பொன்சேகா நிறுவனத்தில் பணப் பதுக்கலில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் அண்மையில் தகவல் வௌியிடப்பட்டு சர்சையை ஏற்படுத்தியது. இதில், இலங்கையுடன் தொடர்புடைய மூன்று வௌிநாட்டு நிறுவனங்கள், 60க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் மற்றும் 53 ஆவணங்கள் பற்றிய தகவல்களும் வௌியிடப்பட்டன. எதுஎவ்வாறு இருப்பினும் குறித்த பணம் சேமிக்கப்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வது…
மலேசிய சர்வதேச பங்கோர் டயலொக் மாநாட்டுக்கு அமைச்சர் றிசாத்துக்கு அழைப்பு!
மனித சமுதாயத்தில் எதிர்நோக்கப்படும் சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து அவற்றை எவ்வாறு தீர்ப்பது? என்பது தொடர்பிலும், நிலைபேறான அபிவிருத்தி சம்பந்தமாகவும், மலேசியாவில் எதிர்வரும் செப்டம்பர் 05 – 07 வரை நடைபெறவுள்ள, பங்கோர் டயலொக் (Pangkor Dialogue) சர்வதேச மாநாட்டில், பிரதம விருந்தினராகப் பங்கேற்குமாறு கோரி, மலேசிய ஏற்பாட்டாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை சந்தித்து அழைப்பு விடுத்தனர். கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இன்று (11/05/2016) இடம்பெற்ற இந்த சந்திப்பில்,…
சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்
கடந்த வருடம் காலமான, மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தலைமையிலான ஐவரடங்கிய குழு, கொழும்பு பிரதான நீதவானினால் நியமிக்கப்பட்டுள்ளது. டொக்டர் அஜித் தென்னகோன், டொக்டர் குமுதினி ரணதுங்க, டொக்டர் நிமாலி பெர்னாண்டோ மற்றும் டொக்டர் இரேஷ் விஜயமன்ன ஆகியோரே ஏனைய உறுப்பினர்களாவர்.
லண்டனுக்கு பயணமானார் ஜனாதிபதி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (11) காலை 10.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி பயணமானார். லண்டனில் நாளை ஆரம்பமாக உள்ள ஊழல் ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக 15 பேர் கொண்ட குழுவினருடன் ஜனாதிபதி, எமிரேட்ஸ் விமானச் சேவைக்கு சொந்தமான நுமு651 என்ற விமானத்தில் பயணமானார். இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இ-மோட்டர் சேவை
உலகில் பெரும்பாலான நாடுகளில் செயற்படுத்தப்படும் இ-மோட்டர் முறையை தற்போது இலங்கையிலும் அறிமுகம் செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் வீட்டில் இருந்தவாறே வாகன அனுமதிபத்திரத்தினை தொலைபேசியின் மூலம் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளும் முறையே இ-மோட்டர் ஆகும். திருகோணமலையில் மோட்டார் வாகன திணைக்களத்தின் காரியாலயம் ஒன்றை திறந்து வைத்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் யோஷித!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் வாக்கு மூலமொன்றினை வழங்க சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார். சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிலையம் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்கு நேற்றும் பொலிஸ் நிதி குற்றப் பிரிவிற்கு யோஷித சென்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று உகண்டா நோக்கி பயணமாகியுள்ள மஹிந்த ராஜபக்ச!
பாராளுமன்ற உறப்பினர் மஹிந்த ராஜபக்ச இன்று (11) அதிகாலை உகண்டா நோக்கி பயணமாகியுள்ளார். உகண்டா ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று செல்வதாக மஹிந்த தெரிவித்துள்ளார். உகண்டாவின் ஜனாதிபதியான யொவேரி கஜுடா முசெவெனி 6வது முறையாகவும் ஜனாதிபதியாக பதவியேற்பதை முன்னிட்டு இதில் கலந்து கொள்ள மஹிந்தவிற்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மஹிந்த அங்கு செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மஹிந்த ராஜபக்சவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான காமினி லொக்குகே, லொஹான் ரத்வத்த, தனசிறி அமரதுங்க உள்ளிட்டோரும் பயணித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பங்களாதேஷ் ஜமாஅதே இஸ்லாமி முன்னாள் தலைவர் தூக்கிலிடப்பட்டார்
பங்களாதேஷின் ஜமாஅதே இஸ்லாமி முன்னாள் தலைவர் மவ்லானா மோதியுர் ரஹ்மான் நிஸாமீ நேற்று இரவு ஷய்க் ஹசீனா அரசால் தூக்கில் இடப்பட்டார். ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவர் மொதியுர் ரஹ்மான் நிசாமிக்கு டாக்கா மத்தியச் சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுடன் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற வங்கதேச விடுதலைக்கான போரின்போது அவர் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தார் எனத் தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. போர்க் குற்றங்கள் தொடர்பில் கடந்த 2013ஆம் ஆண்டுமுதல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள…
நாம் முட்டாள்கள் கிடையாது! டிலான்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தும் அளவிற்கும் நாம் முட்டாள்கள் கிடையாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் கடுமையாக இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது! ஞானசார தேரர்
நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை விடவும் இஸ்லாமிய தீவிரவாதம் வியாபித்துள்ளது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தெரிவித்துள்ளார். கிருலப்பனை போதி பௌத்த மந்திரயவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்த விடயம் தொடர்பில் உரிய தரப்பினர் எவரும் எந்தவிதமான கவனமும் செலுத்தவில்லை. அரசியலில் இருக்கும் சில தரப்பினர் தங்களது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள பொதுபல சேனா மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்….
வட் வரி அதிகரிப்பை மீள் பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை!
வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக மீள்பரிசீலனையொன்றை மேற்கொள்ளுமாறு சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளன. அரசாங்கத்தின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட வட் வரி காரணமாக பொதுமக்கள் கடும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டிருப்பதாக குறித்த கோரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் 149 முன்னணி சிவில் சமூக அமைப்புகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக சிவில் சமூக அமைப்பொன்றின் முக்கியஸ்தரான சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எதிர்வரும் வாரமளவில்…
