Main News
அனர்த்தமா உடன் அறிவிக்கவும்
நாட்டில் தற்போது நிலவுகின்ற மோசடியான காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை, கட்டுப்படுத்துவதற்கு முப்படையினரும் தயார் நிலையில் இருக்கின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அனர்த்தம் தொடர்பில் கீழ் கண்ட தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்கலாம். இராணுவம்: 011 2 434 251, 011 3 818 578 கடற்படை: 011 2 212 230, 011 2 445 368, 011 2 212 231 விமானப்படை: 011 2 343 970,…
தகவல் அறியும் உரிமை! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட கருத்தரங்கு
தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கருத்தரங்கு ஒன்றை நடாத்த பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது. இந்த கருத்தரங்கு கொழும்பில் நாளைய தினம் நடைபெறவுள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கருத்தரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்ளுமாறு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு புரிதலையும் அறிவையும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில்…
வத்தளை நடைபயிற்சிப் பாதையின் மீள்நிர்மாணப்பணிகள் நிறைவு
சிலரால் உடைத்து நாசப்படுத்தப்பட்ட, வத்தளை, களுஎலவுக்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்த நடைபயிற்சிப் பாதையின் மீள்நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைப்பயிற்சிப் பாதை, குடியிருப்புப் பகுதிவரை அமைக்கப்பட்டுள்ளதாகவும் நிரந்தர வடிகாலமைப்புத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப் பாதை, மக்கள் பாவனைக்காக விரைவில் திறக்கப்படும் என காணி, சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் இணைப்புச் செயலாளர் மிஹிரி டி சில்வா தெரிவித்துள்ளார்.
ரணவிரு ஞாபகார்த்த விழா ஜனாதிபதி தலைமையில்!
தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கேற்புடன் எதிர்வரும் 18 ஆம் திகதி பத்தரமுல்லையில் அமைந்துள்ள படைவீரர்கள் ஞாபகார்த்த திடலில் இடம்பெறவுள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். மேற்படி நிகழ்வானது கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ள கலாச்சார நிகழ்வுகளையடுத்து நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) இடம்பெற்ற தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016 தொடர்பான ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து…
போரில் உயிர்நீத்த பொதுமக்களை நினைவுகூர தடையில்லை!
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் உயிரிழந்த மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை நடாத்துவதற்கு எந்தவித தடையுமில்லையென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார். யுத்தத்தில் உயிர்நீத்த படையினருக்கான நினைவஞ்சலி நிகழ்வு (தேசிய ரணவிரு ஞாபகார்த்த விழா – 2016) தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கும் செய்தியாளர் மாநாடொன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (12) நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,…
அந்நிய செலாவணி அதிகரிப்பு!
வெளிநாட்டில் வேலை செய்வோரினால் இலங்கைக்கு கிடைக்கும் அந்நிய செலாவணி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.6 வீதத்தில் அதிகரித்துள்ளது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் 523.50 மில்லியன் அமெரிக்க டொலாராக இருந்த அந்நிய செலாவணி இந்த ஆண்டு 563.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. அத்துடன் 2016ஆம் ஆண்டு முதல் மூன்று மாத காலப்பகுதியில் மட்டும் 58,726 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சென்றுள்ளனர். இவர்களில் 38,677 ஆண்களும் 20,049 பெண்களும்…
ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவின் அங்கத்தவரானார் மஹேல
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன சர்வதேச கிரிக்கெட் சபையின் கிரிக்கெட் குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஜனாதிபதி இன்று இந்தியா விஜயம்!
பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) இந்தியாவிற்கான இருநாள் விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார். ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி இன்று (13) புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா கலாசார நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளமை விசேட அம்சமாகும். இதனை அடுத்து சாஞ்சி பகுதிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள…
யோஷித வாக்குமூலமளிக்க வந்தார்
முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களின் ஒருவரான யோஷித ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக இன்று வெள்ளிக்கிழமை (13) காலை வருகை தந்துள்ளார். முன்னதாக கடந்த புதன்கிழமையும் யோஷித ராஜபக்ஷ, வாக்குமூலமளித்திருந்தார்.
7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பதவி உயர்வு
– கனகராசா சரவணன் – பொலிஸ் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய உடனடியாக அமுலுக்குவரும் வகையில் 7 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு உதவி பொலிஸ்மா அதிபாராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது இதங்கமைய, அஜந்த சமரகோன், ரண்மல் கொடித்துவக்கு, நானகசில்வா, கிஸ்சிறிஜெயலத், ராஜித சி சமிந்த, சஞ்சீவ தர்மரத்தின மற்றும் பியந்த வீரசூரிய ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது
ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் எங்கிருந்தாலும் மீட்டெடுக்கப்படும்
ஊழல் மூலம் சேர்க்கப்பட்ட சொத்துக்களை எங்கிருந்தாலும் மீட்டெடுக்க இலங்கை அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார். நாட்டிலிருந்து சொத்துக்களை திருடிச் சென்றவர்களை கண்டுப்பிடிப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இங்கு தெரிவித்தார். ஊழலுக்கு எதிரான கூட்டு சர்வதேச மையம் ஒன்றை அமைப்பதற்கு மாநாடு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியைடைவதாக தெரிவித்த அவர், ஊழலை…
சஜின் வாஸின் வீடு சீஐடியினரால் சோதனை!
கொழும்பு, பொரளையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் வீடுநேற்று சீஐடியினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த சோதனை இடம்பெற்றது. இதன்போது பணச்சலவை தொடர்பில் சீஐடியினர் பல ஆவணங்களை தம்முடன்எடுத்துச் சென்றுள்ளனர். 2011,2012ம் ஆண்டுகளில் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என்ற அடிப்படையில் லஞ்சஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
