Main News
மஹிந்த ஆட்சியில் 27 சர்வதேச பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளன
கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 27 சர்வதேச பிரகடனங்கள் மீறப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். நிதி அமைச்சில் நேற்று (10) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பாடசாலை சேவை வாகனங்களில் பிரேக்கில் குறைபாடுகள்
– திலக்கரத்ண திஸாநாயக்க – பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் 32 வான்கள் மற்றும் பஸ்களின் வாகன நிறுத்தும் கருவியில் (பிரேக்) குறைப்பாடுகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சுமார் 100 வாகனங்கள் இவ்வாறு வாகன நிறுத்தும் கருவிகளில் குறைபாடுகளுடன் இயங்கி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவற்றுள் அநேகமான வாகனங்கள் பாடசாலை மாணவர்களுக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்கள் என்றும் இவையனைத்தும் கம்பஹா மாவட்டத்துக்குள் இயங்குபவை என்றும்…
இலங்கைக்கான துருக்கி தூதுவர் – அமைச்சர் றிஷாத் சந்திப்பு
இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்காசுஹதார் தலைமையிலான வர்த்தக குழுவை அமைச்சர் றிஷாத் இன்று (10) சந்தித்தபோது.
ஐ.நா பொதுசபை விஷேட அமர்வு ஆரம்பம்!
முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஜக்கிய மற்றும் நல்லிணக்க தலைவர்களின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஐ.நா பொதுச்சபை விஷேட அமர்வில் உரையாற்றவுள்ளார். இந்த விஷேட அமர்வு இன்றும் (10) நாளையும் நியூயோர்க்கில் இடம்பெறவுள்ளது. இதன் தொனிப்பொருள் சர்வதேச பாதுகாப்பும் சமாதானமும் என்பதாகும். இதன்போது இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க நடைமுறை பற்றி அவர் உரையாற்றவுள்ளார். புதிய தொடர்புகள் மற்றும் பதிலளிப்புக்களுக்கூடாக முன்னோடியான தலைமைத்துவம் என்பது இந்த விசேட அமர்வின் தொனிப்பொருளாகும். ஐ.நா பொதுச்சபையின் தலைவர் விஷேட அமர்வை ஏற்பாடு…
சம்பந்தனின் பதவியை பறிக்க இடமளிக்கமாட்டோம் – ஜே.வி.பி.
ஜனாதிபதி, பிரதமர் கனவுகள் கலைந்துள்ள நிலையில் சம்பந்தனின் எதிர்க்கட்சி ஆசனத்தையேனும் பறிக்கும் நோக்கத்திலேயே மஹிந்த அணியினர் செயற்பட்டு வருகின்றனர். பாராளுமன்றத்தில் குழப்பங்களை மேற்கொள்ளவும், பயங்கரவாத கதைகளை பரப்பவும் இதுவே காரணம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். எம்மீது பொய்க்குற்றம் சுமத்தி எதிரணி பலத்தினை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் நாம் இருக்கும் வரையில் அதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சி பதவிக்காக தொடர்ச்சியாக மஹிந்த அணியினர் போராடிவரும் நிலையிலும், மக்கள்…
மஹிந்தவை ஒதுக்க மாட்டோம் – அமைச்சர் நிமல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது தனிப்பட்ட கொள்கைகளுக்கு அமைவாக செயற்படுகின்றார். அதற்காக அவரை ஒதுக்கிச் செயற்படும் நிலைப்பாட்டில் சுதந்திரக் கட்சியும் இல்லை. எனவே பேச்சுவார்த்தை ஊடாக அவரது பிரச்சினையை அணுகி அதற்கான தீர்வொன்றை எட்டவே நாம் முயற்சிக்கின்றோம் என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கணடவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி பிரித்தானியா பயணம், டேவிட் கமருனுடன் முக்கிய பேச்சு
மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் பயணமாக இன்று -10- இரவு பிரித்தானியாவுக்குச் செல்லவுள்ளார். நாளை மறுநாள் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள ஊழல் ஒழிப்பு தொடர்பான அனைத்துலக மாநாட்டில் பங்கேற்கவே மைத்திரிபால சிறிசேன லண்டன் செல்லவுள்ளார். இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். இந்த மாநாட்டின் ஒரு பக்க நிகழ்வாக, பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூனை மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். அத்துடன், சிறிலங்காவில் ஊழலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்குத் தேவையான நிபுணத்துவ உதவிகளை வழங்குமாறும் அவர், பிரித்தானியப் பிரதமரிடம்…
காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை நிறைவு
காணாமற்போனோர் தொடர்பில் வட மாகாணத்தில் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. காணாமற்போனோர் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைத்து நாளை முதல் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டீ குணதாஸ தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையாளர்களுக்கு 2 வாரங்களில் வாகன உறுதிப்பத்திரங்கள்!
அரச சேவையில் உள்ளவர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் இன்னும் இரண்டு வாரங்களில் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கான ஆவணங்களை நிதி அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அந்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. வாகனங்கள் பெற்றுக்கொள்வதற்கு தகுதியான அரச ஊழியர்களுக்கு வாகன உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. அரச ஊழியரின் சேவை காலத்தில் 60 ஆண்டுகள் நிறைவடையும்போது 3 வாகன உறுதிப்பத்திரங்கள் பெற்றுக் கொள்வதற்கு எதிராக அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்திள்ளது
உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக வழக்கு!
எலன் மெதினியாராமயவின் மாநாயக்கதேரர் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கீழ் வழக்கு தொடரப்படவுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி யானைக் குட்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தம்மாலோக்க தேரர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தம்மாலோக்க தேரருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்குத் தொடர சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளார். இது தொடர்பில் சட்ட மா அதிபர், புலனாய்வு பிரிவினருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார். வழக்குத் தொடர்வது குறித்த குற்றப்பத்திரிகை…
இலங்கை மீதான ஆயுத ஏற்றுமதி தடை நீக்கம்!
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆயுத ஏற்றுமதித்தடை தளர்த்தப்பட்டுள்ளமையைஅமெரிக்காவின் வாணிப கழகம் வரவேற்றுள்ளது. இந்த தடை 2008ம் ஆண்டு முதல் விதிக்கப்பட்டிருந்தது.இதன்படி இலங்கைக்கு ஆயுதங்களை மற்றும் பாதுகாப்பு சேவைகளை விநியோகிப்பது தடைசெய்யப்பட்டிருந்தது. எனினும் இது 2012ம் ஆண்டு கடல் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான உதவிகள் என்பவைதொடர்பில் திருத்தியமைக்கப்பட்டது. இந்தநிலையில் புதிய அரசாங்கத்தின் காலத்தில் இது தளர்த்தப்பட்டுள்ளமையானது இரண்டுநாடுகளின் உறவில் ஆரோக்கியமான விடயம் என்று அமெரிக்காவின் வாணிப கழகம்குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கத்தை கவிழ்க முடியாது – ராஜித
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் எந்தவொரு முயற்சியும்வெற்றியளிக்கப் போவதில்லை என சுகாதார அமைச்சர் ரஜித சேனாரத்ன தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று (9) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தினை கவிழ்ப்பதற்கு பல்வேறு தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அத்துடன் அரசாங்கத்தினை கவிழ்ப்பதே சிலரின் நோக்கமாகவும் உள்ளது. ஆனால், அரசாங்கத்தினை கவிழ்ப்பதானது அனைவரினதும் கனவு மாத்திரமே என அமைச்சர் மேலும்குறிப்பிட்டார்.
