Headlines

சஜின் வாஸின் வீடு சீஐடியினரால் சோதனை!




கொழும்பு, பொரளையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் வீடுநேற்று சீஐடியினரால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த சோதனை இடம்பெற்றது.

இதன்போது பணச்சலவை தொடர்பில் சீஐடியினர் பல ஆவணங்களை தம்முடன்எடுத்துச் சென்றுள்ளனர்.

2011,2012ம் ஆண்டுகளில் சொத்து விபரங்களை வெளியிடவில்லை என்ற அடிப்படையில் லஞ்சஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *