Main News
மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய ஜெயலலிதா
பரபரப்புடன் 232 தொகுதிகளில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலின் முடிவுகள் வெளியாகிறது. இதுவரை 220 தொகுதிகளின் நிலவரம் அறிவிக்கப் பட்ட நிலையில் ஆளும் அதிமுகா 139 தொகுதிகளை வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கிறது.
அரநாயக்க பாரிய மண்சரிவு! 134 பேர் புதையுண்டுள்ளதாக அச்சம்?
மாவனல்ல அரநாயக்க மண்சரிவில் 134 பேர் இன்னும் மண்ணில் புதையுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் புதையுண்ட 14 சடலங்கைள மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர். எனினும் இன்னும் 134 பேர் காணாமல் போயுள்ளதாக மீட்புப் பணிகளுக்குப் பொறுப்பான மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். அரநாயக்க, எலங்கபிட்டிய சாமசர மலை இவ்வாறு மண்சரிவினால் பாதிக்கப்பட்டது. மலையடிவார கிராமங்களில் காணப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட வீடுகள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. மலையின் நூறு ஏக்கர் பகுதி சுமார்…
மழையால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள்
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ‘இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் கோரிக்கைக்கு அமைய, அந்த அமைச்சால் பெற்றுக்கொடுக்கப்படும் தகவல்களை கொண்டு, முற்றாக சேதமடைந்த வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படும்’ என சஜீத் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளார். அவரது அமைச்சில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைச் சொன்னார்.
பிரதமரை விட மஹிந்தவின் பாதுகாப்பு அதிகமானது!
பிரதமரின் பாதுகாப்பை விட அதிகமான பாதுகாப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கமானது வழங்கியுள்ளது. அந்தவகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி இது தொடர்பில் மக்கள் மத்தியில் குழப்பகரமான கதைகளை பரப்பிவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன தெரிவித்தார். சிறிகொத்தாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
26400 ஏக்கர் நெல்வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.!
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த அடை மழையைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் 26400 ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளதாக கமநல சேவைகள் அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட பிரதி ஆணையாளர் எஸ்.சிவலிங்கம் தெரிவித்தார். இடைப்போகத்திற்கென செய்கை பண்ணப்பட்ட நெற்பயிர்களே நீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மண்டூர் வெல்லாவெளி வாழைச்சேனை கண்டங்களில் அதிகப்படியான நெல் வயல்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த வெள்ள நீர் இருதினங்களுக்குள் வடியா விட்டால் செய்கை பண்ணப்பட்ட அத்தனை நெல் வயல்களும் நீரில்…
சீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலி
தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று (18) காலை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையினால் இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 81 ஆயிரத்து 212 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு 42 ஆயிரத்து 918 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில் தலைநகரம் கொழும்பில் 35 ஆயிரத்து 513 குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் மீண்டும் கோரிக்கை!
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை துரிதப்படுத்துமாறு பெபரல் அமைப்பு மீளவும் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர்பிலான பிரச்சினை காரணமாகவே தற்போதைக்கு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட முடியாது என கூறப்படுவதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணயப் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் தேர்தலை துரித கதியில் நடத்துமாறு நாம் கோரியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். முறைப்பாடு செய்யப்படாத சர்ச்சைகளற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தல் நடத்தப்பட…
மருத்துவமனைகள் மழைவெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக உருவாகியுள்ள வெள்ளப்பெருக்கில் மருத்துவமனைகள் பலவும் மூழ்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குருநாகல் போதனா மருத்துவமனையின் சுற்றுவட்டாரத்தில் வெள்ளநீரின் மட்டம் உயர்ந்து மருத்துவமனைக்குள் நீர்புகும் அபாயம் ஏற்பட்ட நிலையில் நேற்று காலை முதல் மண்மூட்டைகளை அடுக்கி இராணுவத்தினர் மருத்துவமனையை பாதுகாத்துள்ளனர். தம்புள்ளை ஆறு பெருக்கெடுத்து ஓடுவதன் காரணமாக தம்புள்ளை போதனா மருத்துவமனையின் ஒருபகுதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஏனைய கட்டிடங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அநுராதபுரம் மாவட்டத்தில் கலா-பளளுவாவி குளத்தின்…
மஹிந்தவின் வெற்றிவிழா நாளை குருநாகலில்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு இம்முறை யுத்த வெற்றிதின விழாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்கவில்லை. இந் நிலையில் மஹிந்த அணியினர் நாளை 19ஆம் திகதி குருநாகலில் தமது இராணுவ வெற்றி தின கொண்டாட்டங்களை நடாத்துகின்றனர். எனினும், மஹிந்த ராஜபக் ஷ கலந்துகொள்ளும் குருநாகல் நிகழ்வில் இராணுவத்தின் அதிகாரிகளோ, சிப்பாய்களோ கலந்துகொள்ள முடியாது என பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களை ஏனையவர்களுடன் மோதவிட சமூக வலைத்தளங்கள் முயற்சி – அமைச்சர் றிஷாத்
-சுஜப் எம். காசிம் – மன்னர் ஆட்சி தொடக்கம் இன்றைய ஆட்சிவரை இலங்கை வாழ் முஸ்லிம்கள் சமூக இணக்கத்துடனும் நடுநிலைமை பேணும் தன்மையுடனும் வாழ்ந்துவருகின்றபோதும் அவர்களை மாற்றுஇனங்களுடன் மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு சில சமூக வலைத்தளங்கள் திட்டமிட்டு செயலாற்றுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் வேதனைதெரிவித்தார். புத்தளம் மதுரங்குளி அர்றஷீதிய்யா அரபுக்கல்லூரி பட்டமளிப்புவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, முஸ்லிம்கள் என்றுமே ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளித்து வாழ்ந்துவருபவர்கள் அரசியல் பணிகளிலும் அவர்கள் தமது தனித்துவத்தை பேணிவருவதுடன்…
அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும்!
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்படும் அவசர நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதற்கு எந்நேரமும் விழிப்புடன் இருக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்தவர்களுக்கு உலருணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு பதிலாக நாளொன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கொடுப்பனவான 150 ரூபாவை 225 ரூபாவாக அதிகரிப்பதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நிலையான சமாதானம் பொருளாதார வளர்ச்சியின் மூலமே!
இலங்கைக்கு வருகை தந்திருக்கும் ஜேர்மனியின் வர்த்தக தூதுக்குழுவின் தலைவரும், பொருளாதார அலுவல்கள் மற்றும் வலுசக்தி தொடர்பான ஜேர்மன் பாராளுமன்ற இராஜாங்க செயலாளருமான உவே பக்மேயர் நேற்று (16) முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தார். ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயத்தின் போது ஜேர்மனியின் அதிபர் அஞ்சலா மேர்கல், இலங்கையில் வர்த்தக முதலீட்டு வாய்ப்புக்களை கண்டறிவதற்காக வர்த்தக தூதுக்குழுவினரை அனுப்புவதாக வாக்குறுதி அளித்ததற்கு அமைய ஜேர்மனியின் வர்த்தக தூதுக்குழுவினர் இலங்கைக்கு வருகை தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஜேர்மனி…
