Headlines

‘தற்காலிக விடுமுறை வழங்கலாம்’




நாட்டில் நிலவுகின்ற மோசமான வானிலை காரணமாகப் பாடசாலைகளைக் கொண்டு நடத்துவதில் இடையூறுகள் ஏற்படுமாயின், அவைதொடர்பில் ஆராய்ந்து, தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம், சகல வலயக்கல்விப் பணிப்பாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளார்.

பாடசாலையைக் கொண்டுநடத்துவதற்கு இயலாத நிலைமையொன்று ஏற்பட்டால், அவ்வாறான பாடசாலைகளுக்குத் தற்காலிகமாக விடுமுறை வழங்குவதற்கோ அல்லது தற்காலிகமாக மூடிவிடுவதற்கோ அனுமதி உண்டு என்றும் கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *