Headlines

படகுச் சேவைக்கு பணம் செலுத்த வேண்டாம் : அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்

பாதிக்கப்பட்ட பகுதியிலுள்ள படகு சேவைகளுக்கு பொதுமக்கள் எந்தவொரு கட்டணத்தையும் செலுத்த வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்பொழுது, வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு தனியார் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த சகல படகுகளுக்குமான கொடுப்பனவை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமே வழங்குகின்றது.

Read More

குறைநிரப்புப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு மீளவும் நடைபெறும்!

குறைநிரப்புப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு மீளவும் நடைபெறTள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

Read More

இலங்கைக்கு அவசர உதவிகளை அனுப்ப மோடி உத்தரவு

இலங்கையின் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இழக்கப்பட்ட உயிர்கள் உடமைகளுக்காகஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது இரங்கலை வெளியிட்டுள்ளார். இந்தநிலையில் அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவசர உதவிகளை இலங்கைக்குஅனுப்பி வைக்கவும்; அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இலங்கைக்கு உதவ இந்தியா எப்போதும் தயாராக இருப்பதாகவும் மோடி அறிவித்துள்ளார்.

Read More

அனுர சேனநாயக்கவிடம் தீவிர விசாரணை

– எம்.எப்.எம்.பஸீர் – பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில்  மேல் மாகாணத்துக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  அனுர சேனநாயக்கவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினர் நேற்று (19) இரண்டாவது நாளாகவும் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். நேற்று முன்தினம்  முதல் முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவை விசாரணை  செய்யும் நடவடிக்கைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சர் விக்ரமசேகரவின் கீழான சிறப்புக்…

Read More

ஜனாதிபதி அவசர பணிப்புரை

– ப.பன்னீர்செல்வம் – சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதில் “நிதியை” பிரச்சினையாக்கிக் கொள்ளாது அனைத்து நிவாரணங்களையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர பணிப்புரையை விடுத்தார். வெள்ளத்தால் கொழும்பு மாவட்ட மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பதுடன், இம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது தொடர்பில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, எஸ்.பி. திஸாநாயக ஆகியோரை ஜனாதிபதி இணைப்பாளர்களாகவும் நியமித்துள்ளார்.

Read More

அவசர அனர்த்த நிலைமையைப் பிரகடனப்படுத்தவும்: ஜே.வி.பி

இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் விடுக்கப்பட்ட அறிவிப்புத் தொடர்பில் கருத்துரைத்தபோதே ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் எம்.பியுமான விஜித ஹேரத், நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கவனத்தில் கொண்டு, அவசர அனர்த்த நிலைமையைப் பிரகடனப்படுத்துமாறு கோரி நின்றார். ‘இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்டோர் மற்றும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளோர் தொடர்பில் நாமும் எங்களுடைய அவதானத்தை செலுத்துகின்றோம். பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுகின்ற போது „சுற்றறிக்கை… இடையூறாக இருக்கின்றது. நலன்புரி நிலையங்களில் இருக்கின்ற மக்களுக்கு மட்டுமே உணவுகளை…

Read More

நிவாரண – மீட்பு பணிகளில் முப்படையினர்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழைவீழ்ச்சி காரணமாக ஏற்பட்டுள்ள அவசர நிலைமைகளுக்கு முகம்கொடுக்கும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலுக்கமைய பாதிக்கப்பட்ட பகுதிகளில் மே மாதம் 15 ஆம் திகதியிலிருந்து இராணுவத்தினர் பல்வேறு நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேவேளை அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்ட கொடூரமான மண்சரிவில் சிக்கியவர்களை நிவாரண மற்றும் மீட்கும் பணிகளில் 58 ஆவது படைப்பிரிவின் 300 ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் (இலங்கை சிங்க ரெஜிமண்ட் மற்றும் 8 விஜயபாகு)…

Read More

அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை பிரிவு ஆரம்பம்!

நாட்டில் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் திடீர் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முப்படையினரின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உரிய முறையில் செயற்படுத்துவதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியின் அலுவலகத்தில் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய 17 ஆம் திகதி பிற்பகல் தொடக்கம் இவ் நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அவசர அனர்த்த நிலமைகள் தொடர்பில் தகவல்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி இலக்கங்கள்…

Read More

இலங்கை விமானப்படையின் அறிவிப்பு

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக இலங்கை விமானப் படை முன்வந்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக பொது மக்களின் உதவிகளை இலங்கை விமானப் படை கோரியுள்ளது. அதன்படி உலர் உணவு வகைகள், குடிநீர் மற்றும் சுகாதார உதவிகள் உள்ளிட்ட பொது மக்களின் உதவிப் பொருட்களை இலங்கை விமானப் படைத் தலைமையகத்தில் ஒப்படைக்க முடியும். உதவிகளை வழங்க விரும்புவோர் 011 3133105 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Read More

ஹெலியில் சென்று பிரதமர் பார்வை

இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலியில் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இயற்கை அனர்த்தங்களை வானிலிருந்து நேற்று புதன்கிழமை பார்வையிட்டார். இயற்கை அனர்த்தங்களை பார்வையிட்டதன் பின்னர், நாடாளுமன்றத்துக்கு நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஹெலியிலேயே வருகை தந்தார். அவைக்கு வருகை தந்த பிரதமர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை, பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களை நானும்,…

Read More

கரு ஜயசூரிய அனுதாபம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மற்றம் நிர்க்கதியாகியுள்ள அனைவருக்கும், நாடாளுமன்றம் சார்பாக அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். இந்த அனர்த்த விடயத்தில் முழு நாடாளுமன்றமும் அவதானம் செலுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (18) புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு அறிவித்தார். நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய அசாதாரண வானிலையினால்…

Read More

அடைமழையினால் இலங்கை போக்குவரத்து சபைக்கும் நட்டம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மழையினால் 7 கோடிக்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொதுமுகாமையாளர் ராஜா குணதிலக கூறியுள்ளார். இதேவேளை, அனர்த்த நிலைமைகளினால் பணியாளர்களின் வருகை மிகவும் குறைவாக உள்ளமையே இதற்கான காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More