Main News
எவரஸ்ட் சிகரத்தை அடைந்த ஜயந்திக்கு பிரதமர் வாழ்த்து
எவரஸ்ட்டில் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கைப் பெண் என்ற சாதனையைப் படைத்த ஜயந்தி குரு உடும்பலவுக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தச் சாதனை, எவ்வித இடையூறுமின்றி அடைவதற்கு உதவிய, யெஹான் பீரிஸுக்கும், பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆஸி. சுற்றுலா பயணிகளிடம் கோரிக்கை
– ஜே.ராஜன் – இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகளுக்கு புதிய ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷெப், தெரிவிக்கையில் இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாகவே இவ்வாறான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்கப்பட்டுள்ளன. இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கை அரசாங்கத்தின் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அறிவுறுத்தல்களை பின்பற்றுதல் வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இலங்கையிலுள்ள ஏனைய சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு இலங்கை சுற்றுலா அமைச்சினூடாக…
சீரற்ற காலநிலை : அமெரிக்கா, பாக்., ,ஆஸி., சீனா நாடுகளும் உதவி
நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு உடனடி மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் முன்வந்துள்ளன. ஏற்கனவே ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தமது நிவாரணப் பொருட்களை கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஊடாக இன்று நாட்டுக்கு அப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அமெரிக்கா 50ஆயிரம் டொலர் நிதியை வழங்குதற்கு முன்வந்துள்ளது. அதேநேரம் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தேவையான உதவிகளை வழங்குவதற்கு…
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம்
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சர் றிஷாத் விஜயம். பாதிகாப்பு ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் மா அதிபருடன் பேச்சு -சுஐப் எம் காசிம் – உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்ற அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது விஜயத்தை இரத்து செய்து விட்டு நேற்று (20) மாலை நாடு திரும்பினார். வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வெல்லம்பிட்டி, வசட்டுவ, மீகொட கொலன்னாவ, வென்னவத்த, புத்கம, களனிபுர பிரதேசங்களுக்கும் அமைச்சர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட அகதிகளின்…
நிவாரணங்களில் ஈடுபடுவோருக்கு பொதுநலவாய அமைப்பு நன்றி
இலங்கையில் பெய்த கடும் மழைக்காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்காக பொதுநலவாயநாடுகள் அமைப்பு தமது இரங்கலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கேகாலையில் இடம்பெற்ற அனர்த்தங்கள் தமது கவலையை அளிப்பதாக பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளர் பெற்றீசியா ஸ்கொட்லேன்ட் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மீட்பு நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளுமேமுன்னிலை பெறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்காக பொதுநலவாய நாடுகளின் குடும்பம், மீட்புப் பணியாளர்களுக்கு தமது நன்றியைதெரிவிப்பதாகவும் பெற்றீசியா ஸ்கொட்லேன்ட் தெரிவித்துள்ளார்
ஜப்பானுக்கு செல்லும் மஹிந்த
உகண்டாவுக்கு அண்மையில் விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானில் வசித்து வரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸவிற்கு நெருக்கமானவர்கள், முன்னாள் ஜனாதிபதியை ஜப்பானுக்கு அழைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இவர்கள் விமல் வீரவன்ஸ, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரை ஜப்பானுக்கு அழைத்திருந்தனர். ரோஹித்த அபேகுவர்தன…
தபால் விநியோகம் சீர்குலைவு!
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தபால் திணைக்களத்தின் பணிகள் பெரும்பாலும் சீர்குலைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் கடும் மழை காரணமாக அப்பகுதிகளில் விநியோகிக்க வேண்டிய தபால் பொதிகள் மற்றும் கடிதங்கள் தற்போது தபால் திணைக்களத்தின் தலைமையகத்தில் தேங்கத் தொடங்கியுள்ளன. நேற்று மாலை வரை சுமார் ஐந்து லட்சம் கடிதங்களும் பொதிகளும் தேங்கியிருப்பதாக தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இவற்றில் சாதாரண தபால் பொதிகள் மட்டுமன்றி பதிவுத் தபால் பொதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது….
220 பேர் தொடர்பில், இதுவரை தகவல் இல்லை
இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மலையகத்தில் மண்சரிவுகளும், தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளமும் சூழ்கொண்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாகப் பாதிப்படைந்துள்ளது. இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மட்டுமன்றி, அவர்களின் உறவினர்கள் மற்றும் துயர்பகிரச் செல்வோரும் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். பாரிய அழிவுகளை ஏற்படுத்திய…
மாணவர்களுக்கு உதவுங்கள் : விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நிவாரணங்களை சேகரிக்கும் பணியை கல்வி அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனடிப்படையில் 011 27 86 384, 071 23 65 965, மற்றும் 071 83 87 212 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு உங்கள் நிவாரணப்பொருட்களை வழங்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மாணவர்களுக்கான நிவாரணப்பொருட்களை நேரடியாக வழங்க விரும்புபவர்கள் பெலவத்த, இசுறுபாய கல்வி அமைச்சுக்கு முன்பாகவுள்ள நிவாரண சேகரிப்பு பகுதிகளில் கையளிக்க முடியும்…
3 லட்சம் பேர் இடம்பெயர்வு
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை காரணமாக நாடு முழுவதும் 62,000 குடும்பங்களைச் சேர்ந்த 300,000 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலையால் இடம்பெயர்ந்தவர்களுக்காக 611 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் சுமார் 3500 வீடுகள் முழுமையாகவோ பகுதியளவோ சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளதோடு 132 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.
3 மாவட்டங்களுக்கு கடும் ஆபத்து
மண்சரிவு அபாயமுள்ள மாவட்டங்களாக 7 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் கேகாலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள், கடும் ஆபத்தான நிலைமையில் உள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. மலைகள் கொண்ட பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்கள், இயற்கைக்கு மாறாக நிலத்தில் வெடிப்புகள் மற்றும் நீரோட்டங்கள் ஏற்படுவதைக் கண்டால், அவை தொடர்பில் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டிய அதேவேளை, அது தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு, மேற்படி நிறுவனத்தின் மண்சரிவு தொடர்பான ஆராய்ச்சிக்குழுவின் பணிப்பாளர்…
வெள்ள அனர்த்தம் தீவிரம் பாராளுமன்றம் ஒத்திவைப்பு
சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் கவனம் செலுத்த வேண்டியதன் காரணமாக நேற்று (19) வியாழக்கிழமை சபை நடவடிக்கைகள் நண்பகல் 12.10 மணியுடன் ஒத்தி வைக்கப்பட்டன.
