Headlines

கொட்டாவ – கடவத்தை அதிவேக பாதையினூடான போக்குவரத்து இலவசம்

கொட்டாவ – கடவத்தை அதிவேக வீதியூடாக பயணிக்கும் வாகனங்களுக்கு போக்குவரத்துக் கட்டணம் இன்று (23) வசூலிக்கப்படமாட்டாது என அதிவேக வீதியின் நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு பிரிவின் பணிப்பாளர் எஸ்.ஓப்பநாயக்க குறிப்பிட்டுள்ளார். வௌ்ளம் காரணமாக கொட்டாவ – கடவத்தை அதிவேக வீதியூடாக பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்தாது போக்குவரத்தில் ஈடுபட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை 6 மணித் தொடக்கம் இரவு 10 மணி வரையே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. பியகம வீதியில் தொடர்ந்தும் ஒன்றரை அடிக்கு மேலாக…

Read More

கடற்கரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயமொன்றினை அண்மையில் மேற்கொண்டிருந்த கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர், NAQDA திறுவனத்தினுடைய தலைவர் அதன் பொது முகாமையாளர் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் காத்தான்குடி கடற்கரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தனர். மாவட்ட செயலகத்திற்கு முக்கிய ஓர் அபிவிருத்தி திட்டம் சம்பந்தமான கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர் உட்பட்ட உயர் அதிகாரிகள் மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக்கின் வேண்டுகோளுக்கமைவாகவே காத்தான்குடியில் மீனவர்களின்…

Read More

சீரற்ற காலநிலை – இதுவரை 92 பேர் பலி

சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 92 பேர் வரை உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும் தற்போது பல பகுதிகளில் வௌ்ள நீர் வடிந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read More

இன்று முதன் முதலாக கூடும் ஜனாதிபதி செயலணி

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகளினால் உண்டான பாதிப்புக்களை தொடர்ந்தும் முகாமை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள, ஜனாதிபதியின் செயலணி இன்று முதன்முதலாக கூடவுள்ளது. இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமைய அண்மையில் இந்த செயலணி உருவாக்கப்பட்டது. சேதமடைந்துள்ள வீடுகள், தொழில்துறை மற்றும் வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்புதல், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தல் மற்றும் சுகாதார வசதியை மேம்படுத்தல் போன்றன இந்த செயலணியால்…

Read More

மின்னல் தாக்கி 6 வீடுகள் சேதம்

பத்தேகம – இதுருபத்வல பகுதியில் மின்னல் தாக்கி ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளன. மேலும், இதனால் சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதோடு, குறித்த வீடுகளில் இருந்த மின் உபகரணங்களும் சேதமடைந்துள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த சிறுமி பத்தேகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

Read More

ராஜித குழுவினர் ஜெனீவா நோக்கிப் பயணம்

69ஆவது உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, உள்ளிட்ட குழுவினர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரம் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இந்த சுகாதார மாநாடு இன்று 23ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

’11 மாவட்டங்களில் ஐ.நா கூட்டு கணிப்பீடு’

‘அடிமட்டக் களத் தேவைகள் பற்றிய மேலும் தகவல் பெறுவதற்காக, சர்வதேச தொண்டு நிறுவனங்கள்,  இலங்கையிலுள்ள 11 மாவட்டங்களிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமையிலிருந்து, விரைந்த கூட்டு கணிப்பீடுகளை ஒழுங்கு செய்திருக்கின்றன’ என ஐ.நா விளக்கமளிப்புக் கூட்டத்தின் போது  தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்ரீபன் துஜாரி, ‘கூட்டு மூலவள இணைப்பு முயற்சிகளில், உள்நாட்டு ஐ.நா ஒத்திசைவு மற்றும் உதவி நிறுவனங்களைப் பலப்படுத்த மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகமும் (OCHA) உதவிசெய்தது’ என்றார். …

Read More

களனி கங்கையின் நீர்மட்டம் குறைகின்றது

சீரற்ற காலநிலை காரணமாக  அதிகரித்திருந்த  களனி கங்கையின் நீர் மட்டமானது, தற்போது குறைவடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாகலகம்வதிய மாபாங்கய பகுதியில் 7.5 அடிக்கு இருந்த நீர்மட்டமானது தற்போது 5.6 ஆக குறைவடைந்துள்ளதாக  நீர்ப்பாசன திணைக்களத்தின் செயலாளர் ஆர்.எம்.ரத்னாயக்க தெரிவித்தார். நீர்மட்டமானது 5 அடிக்கு குறைவடையும்போதே வெள்ள நீர் வடிந்தோடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் வெள்ளநீர் முற்றாக வழிந்தோட ஒருவாரம் எடுக்குமெனவும் அவர் மேலும் கூறினார்.

Read More

காலி மாவட்ட செயலாளர் நியமனம்

ஜனாதிபதியின் மேலதிக செயலாளரான எஸ்.டி.கொடிகார, காலி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமன கடிதத்தையும் பெற்றுகொண்டுள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு பிறகு காலி மாவட்ட செயலாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

நிவாரண ஒருங்கிணைப்பு மத்திய நிலையத்திற்கு (RCC) உதவுங்கள்..!

அன்பிற்கும் கண்ணியத்திற்கும் உரிய உலமாக்களே, மஸ்ஜிதுகளின் நிர்வாகிகளே சமூகத்தின் சிவில் தலைமைகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரமதுல்லாஹி வபரகாதுஹு, நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்கள் கராணமாக பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு நேசக் கரம் நீட்டி உதவி உபகாரம் செய்வதற்காக கடந்த ஓரிரு நாட்களாக உங்கள் ஊர்களிலும் மஹல்லாக்களிலும் நீங்கள் நிவாரண் உதவிகளை சேகரித்து அவற்றை முறையாக உரியவர்களிடம் கொண்டு சேர்க்கவென இதய சுத்தியுடன் மேற்கொள்ளும் அத்தனை முயற்சிகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நிறைவாக கூலி தருவானாக.! அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் மிகப்…

Read More

அரநாயக்காவில் தொடர்ந்து நீடிக்கும் ஆபத்து

புளத்கொஹுபிட்டிய, அம்பலம பிரதேசத்திலுள்ள பல இடங்களிலும் வீடுகளிலும் நிலம் மற்றும் சுவர்களில் வெடிப்புக் கோடுகள் விழுந்துள்ள நிலையில், அப்பிரதேசத்தைச் சேர்ந்த பலர், அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இதேவேளை, மண்சரிவு அபாயத்துக்கு இலக்காகியுள்ள ரணால, தெடிகமுவ மலையை அண்மித்த 13 குடும்பங்களையும் அப்பிரதேசத்திலிருந்து வெளியேற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அத்துடன், அரநாயக்க பிரதேசத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, அம்பலம மலையும் நேற்றுச் சரிந்துள்ளது. இந்த அம்பலம மலையானது, அரநாயக்க சாமசர மலையின் மற்றுமொரு வளைவிலேயே அமைந்துள்ளது. இந்த…

Read More

நாமல் ராஜபக்ச, நிதிமோசடி தடுப்பு பொலிஸில்

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தற்போது நிதிமோசடி தடுப்பு பொலிஸில்முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்கிஸ்ஸை பகுதியில் இடம்பெற்ற காணிக் கொள்வனவு தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைபெற்றுக் கொள்வதற்காகவே அவர் நிதிமோசடி தடுப்பு பொலிஸ் பிரிவுக்குஅழைக்கப்பட்டுள்ளார். நாமல் ராஜபக்சவும், யோசித்த ராஜபக்சவும் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அதிகபெறுமதியுடைய காணிகளை குறைந்த விலைகளுக்கு கொள்வனவு செய்துள்ளதாக ஏற்கனவே செய்திகள்வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More