Headlines

ஜப்பான் பயணமாகிறார் ஜனாதிபதி

ஜப்பானில் இடம்பெறும் ‘ஜீ 7’ நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (25) ஜப்பான் பயணமாகிறார். அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், கனடா, ஜேர்மன், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் பங்கேற்கும் இம்மாநாடு எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் ஜப்பான் இசெசிமாவில் இடம்பெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜப்பானியப் பிரதமரின் விசேட பிரதிநிதி ஹிரோட்டோ இசுமிக்குமிடையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி உலகத்…

Read More

சப்ரகமுவையில் மாணவர்கள் 12 பேர் பலி: 11 பேரைக் காணவில்லை

சப்ரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டத்தில், பாடசாலை மாணவர்கள் 12 பேர் பலியானதுடன் 11 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று, சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சர் பானு முனிப்பிரிய தெரிவித்தார்.சப்ரகமுவ மாகாண சபையின் மாதாந்தக் கூட்டம், சபைத் தலைவர் காஞ்சன ஜயரத்ன தலைமையில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர், தொடர்ந்து உரையாற்றுகையில், ‘இயற்கை அனர்த்தங்களினால் கேகாலை மாவட்டமே கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில்,…

Read More

பொன்சேகாவுக்கு எதிரான மனு தள்ளுபடி

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் நியமனம் சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை, உயர்நீதிமன்றம், நேற்றுச் செவ்வாய்க்கிழமை(24) தள்ளுபடி செய்தது. சரத் பொன்சேகாவின் நியமனம் மற்றும் அந்த பதவியிலிருப்பது சட்டவிரோதமானது என்றும், அப்பதவியில் தொடர்ந்திருந்து செயற்படுவதைத் தடுக்குமாறு, இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, மாற்றுக் கொள்கைளுக்கான நிலையத்தின் சார்பில், அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் பேராசிரியர் பாக்கியசோதி சரவணமுத்துவினால்,…

Read More

இயற்கை அனர்த்தம் தொடர்பில் இன்று விசேட பாரா­ளு­மன்ற அமர்வு

பாரா­ளு­மன்­றத்தின் விசேட அமர்வு இன்று புதன்­கி­ழமை 1.00 மணிக்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் நடை­பெ­று­கி­றது. நாட்டில் ஏற்­பட்ட மழை­ வெள் ளம், மண்­ச­ரிவு மற்றும் இதனால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலை­மைகள் தொடர்­பா­கவே இன்­றைய விசேட பாரா­ளு­மன்ற அமர்வு இடம்­பெ­று­கி­றது. கடந்த வாரம் பாரா­ளு­மன்ற அமர்வின் இறுதி தின­மான 20 ஆம் திகதி ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கொழும்பு மாவட்ட எம்.பியும் மஹிந்த அணி ஆத­ர­வா­ள­ரு­மான தினேஷ் குண­வர்த்­தன நாட்டில் ஏற்­பட்­டுள்ள சீரற்ற கால­நிலை தொடர்­பாக விசேட ஒரு…

Read More

ஜனாதிபதிக்கு அருகிலிருந்து காணாமல்போன மாணவி யார்? கல்விப் பணிப்பாளரிடம் விளக்கம்

ஜனாதிபதிக்கு அருகில் நிழற்படத்தில் நிற்கும் மாணவி தனது காணாமல்போன மகளென குறித்த மாணவியின் தாயார் தமக்கு முறைப்பாடு செய்திருக்கிறார். எனவே அவரை அடையாளம் காண உதவுமாறு காணாமல்போனோர் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வல் பரணகம கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப்பணிப்பாளர் என்.மணிவண்ணன் இது விடயம் தொடர்பாக சுற்றுநிருபமொன்றை சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இச்சுற்றுநிருபத்துடன் குறித்த மாணவி மற்றும் சக…

Read More

அரநாயக்க மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களுக்கு திடீர் சுகவீனம்

அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்டோர் தொடர்பான மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த படைவீரர்களுக்கு தீடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இராணுவப் படைவீரர்கள் மற்றும் அதிகாரிகளே இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எல்.எம்.ஆர்.மார்க் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். அரநாயக்கவின் தற்போதைய சுற்றுச் சூழல் மற்றும் சடலங்களிலிருந்து வெளியாகும் கிருமிகள் போன்றவற்றினால் இவ்வாறு நோய் வாய்ப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்க சிகிச்சை அளிக்கப்படும் எனவும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் அவர்…

Read More

அனுர சேனாநாயக்கவிற்கு சிகிச்சை அவசியமில்லை!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவிற்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை என சிறைச்சாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலை வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவரான அனுர சேனாநாயக்க கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார். அனுர சேனாநாயக்கவின் உடல் நிலை நன்றாகவே காணப்படுகின்றது தெரிவிக்கப்படுகிறது. அனுரவை சிறைச்சாலை வைத்தியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். எனவே சிறைச்சாலை வைத்தியசாலையில் வைத்து அனுரவிற்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அவசியமில்லை. அனுர சேனாநாயக்கவிற்கு…

Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் றிஷாத் நிவாரணப் பொருட்கள் வழங்கிவைப்பு

-ஊடகப் பிரிவு   – வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட கொடிகஹவத்தை மக்கள் தங்கியிருக்கும் கொடிகஹவத்த விமலாராம விகாரை, நாகருக்காராமய விகாரை ஆகியவற்றுக்கும், கொலன்னாவை வித்யவர்தன மஹா வித்தியாலயத்தில் தங்கியிருக்கும் சிங்கள, தமிழ், முஸ்லிம் வெள்ள அகதிகளுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான றிஷாத் பதியுதீன் நேற்று (24/05/2016) நிவாரணப் பொருட்களை வழங்கினார் அமைச்சருடன் மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ், மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்களான ஹுசைன் பைலா, ரியாஸ் சாலி ஆகியோரும் சென்றிருந்தனர்.

Read More

அனர்த்த நிவாரண பொருட்களை மோசடி செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

இலங்கையில் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கிடைத்த, நிவாரணப் பொருட்களை மோசடி செய்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பல்வேறு அமைப்புக்கள் மூலம் கிடைத்துள்ள நிவாரணப் பொருட்கள் பணத்திற்கு விற்கப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இவ்வாறு மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மற்றும் இதற்கு துணைப்போவருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் நாட்களில் இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பலர் கைது…

Read More

வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர்!

கொழும்பு மேல்மாகாண நுண்வரைகலை மண்டபத்தில் இடம்பெற்ற தேசிய சமாதான மன்றத்தின் (ஜாதிக சமகி சங்கமய) வருடாந்த மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வானது இலங்கை குடியரசு தினம் (மே 22), சர்வதேச உயிரியல் பல்வகைமை தினம் (மே 21), உலக கலாச்சார தினம் (மே, 22) ஆகிய தினங்களையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை மன்றத்தின் தலைவர் பேராசிரியர் ரன்பண்டா ஜெயவர்தன, வரவேற்றார். இதேவேளை,…

Read More

மண்சரிவு பாதிப்பு பகுதி அதிஉயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

மண் சரிவுக்குள்ளான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்துமாறும், குடியிருப்புக்கு பொருத்தமற்றது என அரசாங்கம் ஏற்கனவே குறிப்பிட்ட இடங்களில் குடியிருக்க எவருக்கும் எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாதெனவும் ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு வழங்கியுள்ளார். எதிர்பாராமல் முகங்கொடுத்த அவசர அனர்த்த நிலைமையை முகாமைப்படுத்தி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டுவர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் அமைக்கப்பட்ட அவசர அனர்த்த செயலணி ஜனாதிபதி தலைமையில் நேற்று(23) மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் விடயங்கள் தொடர்பான…

Read More

நள்ளிரவில் உடைந்த படகில் பயணித்து மல்வானை மக்களை றிஷாத் சந்திப்பு

-நாச்சியாதீவு பர்வீன்- பாதுகாப்பற்ற உடைந்த படகில் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மள்வானை காந்திவளவ மற்றும் ஆட்டா மாவத்தை மக்களை சந்தித்து அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார் கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுத்தீன். கடந்த சில நாட்களாக சீரற்ற காலநிலையினாலும்,தொடர்மழையினாலும் வெகுவாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மல்வானையும் அடங்கும் மல்வானையில் ரக்‌ஷபான,காந்திவளவ,ஆட்டா மாவத்தை,சக்கீனாபுர போன்ற பிரதேசங்கள் முற்றாக நீரினால் சூழப்பட்டிருந்தது.அதிலும் சக்கீனாபுர மற்றும் ஆட்டா மாவத்தை போன்ற பிரதேசங்கள் நூறு விகிதம் வெள்ளத்தினால் மூழ்கிய பிரதேசமாகும். இந்தப்பிரதேசத்திற்கு எந்த…

Read More