Main News
ஜீ –7 இல் கலந்து கொள்ள ஜனாதிபதி ஜப்பான் விஜயம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 25 ஆம் திகதி புதன்கிழமை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார். ஜப்பானில் இடம்பெறும் ஜீ –7 நாடுகளின் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி ஜப்பான் செல்கிறார். இதன்போது அம்மாநாட்டில் ஜீ–7 அங்கத்துவ நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இம்மாநாடு 26 மற்றும் 27 இரண்டு தினங்கள் ஜப்பானில் நடைபெறவுள்ளது. இதேவேளை, ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயின் விசேட பிரதிநிதி இலங்கை வந்ததோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துப்…
இலங்கையில் இயற்கை அனர்த்தம் – தலாய் லாமா இரங்கல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த இழப்புக்களுக்கு திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா இரங்கல் வெளியிட்டுள்ளார். உயிர் இழப்புக்கள் மற்றும் பாரியளவிலான அழிவுகள் போன்றவற்றுக்காக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தலாய் லாமா குறிப்பிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் மக்களின் துன்பத்தில் பங்கேற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனர்த்தத்தினால் ஏற்பட்ட சேதத்தை மதிப்பீடு செய்வதில் சிரமம்: நிதி அமைச்சு
இயற்கை அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்களை மதிப்பீடு செய்வதில் சிரமங்கள் காணப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எம்.எஸ். அமரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக ஏற்பட்டுள்ள சேதம் பற்றிய பொருளாதார ரீதியான மதிப்பீடுகளை மேற்கொள்வது மிகவும் சிரமமான காரியமாகும். குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களின் தனிப்பட்ட சொத்துக்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் பற்றிய விபரங்களை துல்லியமாக திரட்ட முடியாதுள்ளது.இன்னமும் வெள்ளம் முழுமையாக…
இன்று மீண்டும் மழை பெய்யும்!
நாட்டின் பல பாகங்களிலும் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் பெய்துவந்த அடை மழை கடந்த மூன்று தினங்களாக சற்று ஓய்ந்து காணப்பட்டதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. மேல், வட மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு விசேடமாக இன்று முழுநாளும் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் திணைக்களத்தின் நிரந்தர பிரதிநிதி மலிந்த மில்லன்கொட குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கிழக்கு மாகாணத்துக்கு இன்று மாலை 2.00 மணியின்…
இந்த இழப்பை எவ்வாறு சீர் செய்யப் போகின்றோம்?
-சுஐப் எம்.காசிம் – மல்வானை பிரதேசத்தில் உள்ள மல்வானை, லக்சபான, விதானகொடை, தோட்டம், காந்தியாவள, பள்ளம் ஆகிய பிரதேசங்களுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று மாலை(22/05/2016) விஜயம் செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தாழ்நிலப் பிரதேசங்களையும் பார்வையிட்டார். அத்துடன் நிவாரணப் பணிகள், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடினார். லக்சபான ஜும்மா பள்ளியில் இடம்பெற்ற நிவாரண ஒருங்கிணைப்புப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர், அங்கு குழுமியிருந்த ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களுடனும் கலந்துரையாடினார். “வெள்ளம் வரும்போது இந்தப் பிரதேசம்…
வெள்ள அனர்த்தம்: யாப்பா – றிஷாத் பேச்சு
இன்று காலை (22/05/2016) அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, தான் அவதானித்த மக்கள் படும் கஷ்டங்களை அமைச்சரிடம் விவரித்தார். பாதிக்கப்பட்ட முகாம்களில் மற்றும் வீடுகளில் தங்கியிருக்கும் அகதிகள் பலருக்கு முறையான நிவாரணங்கள் கிடைக்காமை தொடர்பிலும் அமைச்சர் யாப்பாவிடம் சுட்டிக்காட்டினார். பிரதேச செயலகங்கள் இந்த மக்களின் விடயங்களில் நேரடிக் கவனம் செலுத்தும் வகையில் உரிய அதிகாரிகளையும், அலுவலர்களையும் அந்த இடங்களுக்கு அனுப்பிவைத்து நிவாரணப் பணிகளை சீர்படுத்துமாறு வேண்டினார்….
அனைத்து சேவைகளையும் அர்ப்பணிப்புடன் மேற்கொள்வோம்!
அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நலன்புரி சேவைகளுக்காக நிறைவேற்றக் கூடிய அனைத்து செயற்பாடுகளையும் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட வெல்லம்பிடிய, மீதொட்டமுல்லை மற்றும் கொலன்னாவ ஆகிய பகுதிகளிலுள்ள மக்களின் நலன்கள் குறித்து ஆராய, இன்று பகல் ஜனாதிபதி அங்குள்ள தற்காலிக முகாம்களுக்கு விஜயம் செய்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். இதேவேளை, இச் சந்தர்ப்பத்தில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து மக்கள் ஜனாதிபதியிடம் கூறினர். விரைவாக இந்த விடயங்கள்…
நாளை விடுமுறை இல்லை
அரசாங்க ஊழியர்களுக்கு நாளை திங்கட்கிழமை விடுமுறை இல்லை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது. இதேவேளை, பாடசாலைகள் நாளை திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இயற்றை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மாத்திரம் அந்தந்த கல்வி வலய பணிப்பாளரிடம் அனுமதி பெற்று விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை அதிபர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு, சுற்றலா போகாதீர்கள்..!
அனர்த்தம் இடம்பெற்ற பகுதிகளுக்கு ஒரு சிலர் சுற்றுலாக்களை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட செல்லும் நபர்களினால் மீட்புப் பணிகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரநாயக்க பகுதிக்கு பலர் வெறுமனே ஒர் சுற்றலா செல்வதனைப் போன்று சென்று வருவதாகவும் இவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதனையும் எடுத்துச் செல்வதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மெய்யாகவே நிவாரணங்களை வழங்குவோருக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது….
கொழும்பில் தோற்றுநோய் ஏற்படும் ஆபத்து
கொழும்பு மாநகர் முழுவதும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதோடு, பிரதான வீதிகள், வீடுகளுக்கருகில் துர்நாற்றம் வீசுகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் மழை வெள்ளத்தாலும், மண்சரிவினாலும் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில் கொழும்பு மாநகர மக்கள் குப்பை மலைகளால் பெரும் அசௌகரியங்களை சந்தித்து வருகின்றனர். கொழும்பு மாநகர், ஒருகொடவத்தை, நவகம்புர, கொட்டாஞ்சேனை, மாளிகாவத்தை, புதுக்கடை, தெமட்டகொடை, பொரளை உட்பட கொழும்பு மாநகரின் பெரும்பாலான இடங்களில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்…
உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 71 ஆக அதிகரிப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளினால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. பாதுகாப்பான 497 தற்காலிக இடங்களில் 278,578 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறினார். எவ்வாறாயினும் இலங்கையை பாதிப்படையச் செய்திருந்த அசாதாரண காலநிலையில் சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் தொடர்ந்து இடம்பெறுவதாகவும், மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவுகள் 24 மணி நேரமும்…
நிவாரணம் வழங்க தனியாக வரவேண்டாம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களும் நிவாராண பொருட்களை எடுத்துகொண்டு தனிப்பட் ரீதியில் யாரும் வரவேண்டாம் என் பாதுகாப்பு தரப்பினர், பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். தனிப்பட்ட நபர்கள் மற்றும் குழுவால் முன்னெடுக்கப்படு நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் சன நெரிசல் ஏற்படுவதாகவும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கையை முகாமைத்துவம் செய்வது கடினமாக உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். நிவாரண பொருடகளை வழங்குவோர், பாதுகாப்பு பிரிவினர் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மத்திய நிலையங்களில் நிவாரண பொருட்களை ஒப்படைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகின்றனர்.
