Headlines

”எயார் சிற்றி” திட்டத்திற்கான பூர்வாங்க பணிகள் ஆரம்பம் : அமைச்சர் சம்பிக்க

மேல் மாகாண மற்றும் மாநகர திட்டத்தின் கீழ் அமையப்பெறவுள்ள “எயார் சிற்றியின்” நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்  சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Read More

அனுர சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி

பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ  ஜயவர்தனபுர வைத்தியசாலையில் நேற்று இரவு அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையின் பின்னர் அவரை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

2763 படையினர் சேவை நீக்கம்

பொது மன்னிப்பின் கீழ் 2763 படையினர் சட்டரீதியாக பதவியிலிருந்துநீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற சிப்பாய்கள் உத்தியோகபூர்வமாக விலகுவதற்குகடந்த திங்கட்கிழமை முதல் பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய கடந்த 3 நாட்களில் 2574 இராணுவ சிப்பாய்கள் சட்டரீதியாக இராணுவத்திலிருந்து விலகுவதற்கு முன்வந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர்பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். அத்துடன் விமானப்படை சிப்பாய்கள் 118 பேரும், கடற்படை சிப்பாய்கள் 71பேரும் குறித்த இந்தக் காலப் பகுதியில் சட்டரீதியாக விலகுவதற்கு முன்வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்….

Read More

இலங்கை வாக்குறுதிகளை எழுத்தில் மாத்திரமல்லாமல் செயலிலும் காட்டுகிறது – பிரான்ஸ் தூதுவர்

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமது நாடு உதவும் என்று பிரான்ஸ் அறிவித்துள்ளது. பிரான்ஸின் தூதுவர் ஜீன் மரின் செக்குஹ் Jean Marin Schuh. இதனை தெரிவித்துள்ளார் இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம்,: மனித உரிமை தொடர்பான விடயங்களில் கவனம்செலுத்தி வருகிறது. இந்தநிலையில் அந்தநாட்டுடன் உறவுகளை விருத்தி செய்து கொள்ள விரும்புவதாக பிரான்ஸ்தூதுவர் குறிப்பிட்டுள்ளார். வாக்குறுதிகளை எழுத்தில் மாத்திரமல்லாமல் இலங்கை அரசாங்கம் செயலிலும் காட்டுகிறது. இதற்கு காணாமல் போனோர் தொடர்பிலான அலுவலகம் ஒன்றை அமைக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளமையும் ஒன்று உதாரணம் என்றும்…

Read More

மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாது!

தபால் ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தாமதமாகினாலும் மாணவர்களுக்க அநீதி இழைக்கப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Read More

மௌலானாவின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது – அமைச்சர் றிஷாத்

மூத்த அரசியல்வாதியும், பிரபல தொழிற்சங்கத் தலைவருமான அலவி மௌலானாவின் மறைவு இலங்கை மக்களுக்கும், தொழிற்சங்க உலகிற்கும் பாரிய இழப்பாகும் என்று, அமைச்சர் றிசாத் பதியுதீன் அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். ஆரம்பகாலத்தில் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும், பின்னர் அரசியலில் பிரதி அமைச்சராகவும், கெபினட் அமைச்சராகவும் பணிபுரிந்த மர்ஹூம் மௌலானா தனது இறுதிக் காலப் பகுதியில் மேல்மாகாண ஆளுனராகவும்  பணிபுரிந்தவர். அவர் முஸ்லிமாக இருந்த போதும் சிங்கள, தமிழ் மக்களுடன் மிக நெருக்கமான உறவையும், நட்பையும்…

Read More

அலவி மௌலானா காலமானார்

முன்னாள் மேல் மாகாண ஆளுனரும், பாராளுமன்ற உறுப்பினருமான அலவி மௌலானா தனது 84 ஆவது வயதில் இன்று காலமானார். 1948 ஆம் ஆண்டு தொழிற்சங்கவாதியாக அரசியலில் பிரவேசித்த இவர் 1956 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து சுமார் 50 வருடங்களுக்கு மேலாக தனது அரசியல் சேவையை முன்னெடுத்திருந்ததோடு 2015 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்க்கையை நிறைவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

FCID புதுப் பெயருடன் புதுப் பரிணாமத்துடன்

கடந்த வருடம் ஜனவரி 8ஆம் திகதி உருவாக்கப்பட்ட பொலிஸ் நிதி மோசடி விசாணைப் பிரிவின் (FCID) நோக்கமானது நாட்டில் நடைபெறும் ஊழலை ஒழிப்பதற்காகும். அப்படிப்பட்ட FCID ஒருபோதும் முடப்படாது என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறினார். மேலும், FCID மூடப்பட மாட்டாது, ஆனால் புதுப்பெயருடன் புது விடயங்களை உள்ளடக்கியவாறு மீண்டும் ஆரம்பிக்கப்படும், எனினும் இதற்கு சற்று காலதாமதம் ஆகும் என ராஜித…

Read More

ஆசிரியர்கள் கையடக்க தொலைப்பேசி பாவிக்க தடை!

வடமேல் மாகாணசபைக்கு உட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளின்போது கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண கல்வி அமைச்சர், சந்தியா குமார ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தநிலையில் கற்பித்தல் பணிகள் முடிந்தநிலையில் அவசியம் ஏற்படும்நேரத்தில் மாத்திரம் பாடசாலைகளில் ஆசிரியர்கள் கைத்தொலைபேசிகளை பயன்படுத்தலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

ஒலிபெருக்­கிகள் மூலம் இடையூறு, ஏற்படுத்தும் முஸ்லிம்கள் – ACJU விடம் முறைப்பாடு

– ARA.Fareel- – நாட்டின் சில பகு­தி­களில் பள்­ளி­வா­சல்­களில் ரமழான் மாத சமய வழி­பா­டுகள் ஒலிபெருக்­கிகள் மூலம் அதி­க­ளவு சப்­தத்­துடன் நடாத்­தப்­ப­டு­வது குறித்து அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபைக்கு முறைப்­பாடுகள் கிடைத்­துள்­ளன. பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அருகில் பல பௌத்த பன்­ச­லைகள் இருக்கும் பிர­தே­சங்­க­ளிலும் இரவு நேர ரமழான் வழி­பா­டுகள் இவ்­வாறு நடாத்­தப்­ப­டு­வது பிரச்­சி­னை­க­ளுக்கு வழி­கோ­லு­வ­தாக அமையும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது. பள்­ளி­வா­சல்­களின் ஒலி­பெ­ருக்­கி­களின் சப்தம் பள்­ளி­வா­சல்­க­ளுக்­குள்ளே மாத்­திரம் கேட்கும் வகையில் குறைத்துக் கொள்­ளப்­பட…

Read More

இலங்கையில் முதன் முறையாக சோலாஸ் செயற்திட்டம்!

இலங்கையில் முதன் முறையாக “நடுகடலில் உயிரை பாதுகாத்தல் (SOLAS)” செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் வழிக்காட்டல்களின் கீழ் கப்பற்துறையுடன் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்த பின்னர் இச்செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது. எதிர்வரும் யூலை மாதம் முதலாம் திகதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுமென வணிக கப்பற் சேவைகள் செயலகத்தின் அத்தியட்சக ஜெனரால் அஜித் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Read More