Main News
உதய கம்மன்பில கைது
தான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நுகேகொட, பூகொட வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் இன்று சனிக்கிழமை (18) காலை, தான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். tm
போர்ட் சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரம்!
கொழும்பில் அமைக்கப்பட இருந்த போர்ட்சிட்டிக்குப் பதிலாக பொருளாதார நகரமொன்றை அமைப்பது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதன் பிரகாரம் சீனாவின் சைனா ஹார்பர் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து வெறுமனே கேளிக்கை அம்சங்கள் மட்டும் கொண்ட துறைமுக நகரமொன்றுக்குப் பதிலாக பொருளாதார நகரம் ஒன்று காலிமுகத்திடல் அருகே அமைக்கப்படவுள்ளது. தற்போதைக்கு உலகின் சந்தைப்படுத்தல் மத்திய நிலையங்களாகவும், பொருளாதார நகரங்களாகவும் கருதப்படும் சிங்கப்பூர் மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு…
சுசந்திகா ஜயசிங்க மீது தாக்குதல்
முன்னாள் குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க, தன்னுடைய கணவனால் தாக்கப்பட்ட நிலையில், கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரது கணவனை கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
எமது பொறுமைக்கும் எல்லை உண்டு : அமைச்சர் கபிர் ஹாஷிம்
தேசிய அரசாங்கத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுக்கும் தருணத்தில் அதனை சீர்குலைத்து எமது கட்சியின்பெயருக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படும் பிரிவினர் தொடர்பில் நாம் தொடர்ந்தும் பொறுமையாக இருக்க முடியாது. எமது பொறுமைக்கும் ஒரு எல்லை உள்ளது என்று அமைச்சர் கபிர்ஹாஷிம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தேசிய அரசாங்கத்தின் ஒருமித்த செயற்பாடுகள் மூலமாக மக்களுக்கு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அந்தவகையில் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர்களினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு…
தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்களை தொடர வேண்டாம்
துறைமுக அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டும் என்ற ஆர்பாட்டகாரர்களின் கோரிக்கை குற்றம் புரிந்தவரை பாதுகாக்கும் செயல் என துறைமுக அபிவிருத்தி அமைச்சின் செயளாளர் மஞ்சுல குணசேகர தெரிவித்தார்.
யுனெஸ்கோ (UNESCO) பணிப்பாளர் – அமைச்சர் றிஷாத் சந்திப்பு
– ஊடகப் பிரிவு – இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள, புதுடெல்லியைத் தளமாகக் கொண்டு இயங்கும், இலங்கை, இந்தியா, பூட்டான், மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான யுனெஸ்கோ (UNESCO) பணிப்பாளரும், பிரதிநிதியுமான ஷிகேரு அஒயாகியை, கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்று (17/06/2016) தனது அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்த சந்திப்பில், கடந்த காலங்களில் யுனெஸ்கோ கல்வி, கலாச்சாரம் தொடர்பில் இலங்கைக்கு ஆற்றியுள்ள பணிகளுக்கு, அமைச்சர் றிசாத் நன்றிகளை வெளிப்படுத்தினார். அத்துடன் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின்…
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சீருடை!
கொழும்பு பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான தைக்கப்பட்ட பாடசாலை சீருடை விநியோகம் இராணுவத்தினரால் நேற்று முந்தினம்(15) முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் நாட்டில் நீடித்த சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் சுற்றயல் பகுதிகள் உட்பட நாட்டின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, களனி கங்கையின் நீர் மட்டம் உயர்ந்ததன் காரணமாக கொலன்னவ, வெல்லம்பிட்டி, ஒருகடவத்த, மீத்தோட்டமுல்ல மற்றும் அங்கோட ஆகிய பிரதேசங்கள் கடுமையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டது. இவ் அனர்த்ததின் போது நிவாரண மற்றும்…
பிரித்தானிய மகாராணிக்கு ஜனாதிபதி விசேட நினைவுக் குறிப்பு!
பிரித்தானிய எலிசபெத் மகாராணியாரின் 90 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று (16) பிற்பகல் பிரித்தானிய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து விசேட நினைவுக் குறிப்பொன்றை பதிவு செய்தார். மகாராணியாரின் 90 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று இரவு ஒரு விசேட நிகழ்வு பிரித்தானிய உயரிஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியை உயரிஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் வரவேற்றார்….
கொரியாவில் நடைபெற்ற இலங்கை கலாசார நிகழ்வு!
தென்கொரியாவில் இலங்கை நாட்டின் கலை கலாசார நிகழ்வொன்று கடந்த 11 ஆம் திகதி சியோல் கிரான்ட் பார்க்கில் நடைபெற்றது. கொரியாவின் இலங்கைக்கான தூதரகமும், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்த இவ் கலாசார நிகழ்வில் கடந்த 2010 ஆம் ஆண்டு இலங்கை நாட்டினால் தென்கொரியாவுக்கு வழங்கப்பட்ட இரண்டு யானைக்குட்டிகளின் பிறந்தநாள் நிகழ்வும் கொண்டாடப்பட்டது. இலங்கை நாட்டின் கலாசார அம்சங்களை கொரிய விருந்தினர்கள் மற்றும் சிறுவர்களுடன் பல்வேறுபட்ட வழிகளில் பரிமாற்றி நாட்டின் கலாசாரத்தினை ஒருங்கிணைப்பதே இந்நிகழ்வின்…
டெங்குவை கட்டுப்படுத்த ஒன்றிணைவோம்!
நாடு முழுவதிலும் தற்போது அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கலாநிதி பாலித மஹிபால தெரிவித்தார். நேற்று(16) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு சூரிய சக்தி
அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகளுக்கும் சூரிய சக்தியை (சோலார் பெனல்கள்) பயன்படுத்த, மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, மின்சாரத்தை சேமிக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுவதாகவும் மின்விளக்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சக்தியை மிச்சப்படுத்தி, அதனை தேசிய மின் கட்டமைப்புக்குள் சேர்ப்பது தொடர்பில் அமைச்சினால் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹஜ் குழுவுக்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்கு
-ARA.Fareel- இவ்வருடத்திற்கான ஹஜ் ஏற்பாடுகளில் ஹஜ் குழு 2013 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிமுறைகளை (Guide Lines) மீறியுள்ளதாகவும் இவ்வருட ஹஜ் கோட்டா பகிர்வு முறையை இரத்துச் செய்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழி முறைகளின் கீழ் கோட்டாவை மீள் பகிர உத்தரவிடுமாறும் கோரி உயர்நீதிமன்றத்தில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில் பிரதிவாதிகளாக முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர், அமைசின் செயலாளர், முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள்…
