Main News
பொருளாதார வளர்ச்சி 5.5 வீதமாக உயர்வு
இவ்வருடத்தின் முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சியானது நூற்றுக்கு 5.5 வீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசராக சுஜீவ ஜயவர்தன நியமனம்
ஜனாதிபதி சட்டத்தரணி சுஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்ற நீதியரசராக நேற்று (16) பதவியேற்றார்.
உயர் நீதிமன்ற நீதியரசரும், ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினரும் நியமனம்!
ஜனாதிபதி சட்டத்தரணி திரு.பிரசன்ன சுஜீவ ஜயவர்தன உயர் நீதிமன்ற நீதியரசராக இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்தார். அத்துடன் பாரதூர ஊழல், மோசடி மற்றும் அரச சொத்துக்கள், வரப்பிரசாதங்கள், அதிகாரம் ஆகியவற்றை முறைகேடாக பயன்படுத்துதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினராக மேல் நீதிமன்ற நீதிபதி திரு.பியசேன ரணசிங்க இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோனும்…
இலங்கை உடனான உறவு வலுவடைந்துள்ளது: இந்திய தூதர் ஒய்.கே.சின்கா
21-ம் நூற்றாண்டில் இந்தியா-இலங்கை உறவு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் கொழும்பில் உள்ள பண்டார நாயக்கா சர்வதேச படிப்பகத்தில் நடைபெற்றது. இதில், இலங்கைக்கான இந்திய தூதர் ஒய்.கே.சின்கா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சிறிசேனா அதிபரான பிறகு இந்தியா-இலங்கை உடனான உறவு வலுவடைந்துள்ளது என்று கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- சிறிசேனா பதவியேற்ற பிறகு பல்வேறு உயர் மட்ட அதிகாரிகள் மட்டத்திலான சுற்றுப் பயணம் இருநாடுகளிடையே நடைபெற்றது. முதலில் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு…
சோமவன்சவின் பூதவுடலை உறவினரிடம் ஒப்படைக்க உத்தரவு
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் பூதவுடலை, அவருடைய உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் வெலிக்கடை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. காலமான, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள, பூதவுடலை தம்மிடம் கையளிக்குமாறு உறவினர்கள் முன்வைத்த கோரிக்கையையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிரப்பித்துள்ளது.
துருக்கியிடமிருந்து ரூ.4,999 கோடி கடனுதவி
துருக்கி மற்றும் இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 350 மில்லியன் டொலர் (4,999.75 கோடி ரூபாய்) வழங்குவதற்கு துருக்கி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. துருக்கியின் எக்ஷிம் வங்கியின் ஊடாக இந்த கடன்தொகை வழங்கப்படும் என்றும் அதற்கான ஒப்பந்தம் இலங்கை – துருக்கிக்கு இடையில் விரைவில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த துருக்கி வெளிவிவகார அமைச்சர் மெவுலட் கவுசோக்லு மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற…
அரநாயக்க பகுதியில் 6 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தினால் மூடல்
கேகாலை – அரநாயக்க பகுதியிலுள்ள 6 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தினால் மூடப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த வீரசூரிய தெரிவித்துள்ளார். மேலும், சப்ரகமுவ மாகாணத்திலுள்ள 36 பாடசாலைகள் மண்சரிவு அபாயத்தை எதிர் நோக்கியுள்ளன.
நாளை மட்டக்களப்பில் போராட்டம்!
ஊடகவியலாளர் பெரடி கமகே தாக்கப்பட்டதை கண்டித்தும் ஊடகவியலாளர்களை பாதுகாக்ககோரியும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள கையெழுத்து போராட்டம் நாளை (17) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
யசூசி அக்காஷியை சந்தித்தார் மஹிந்த!
நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவுக்கு மனிதநேய விவகாரங்களுக்கான அவசரநிவாரணப் பணியின் உப செயலாளர் நாயகமும், இலங்கை்கான ஜப்பானின் முன்னாள்தூதுவருமான யசூசி அக்காஷி அழைப்புவிடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச,ரோஹித்த அபேகுணவர்தன, ஜயந்த சமரவீர, பிரசன்ன ரணதுங்க மற்றும் ரோஷன் ரணசிங்கஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச ஜூன் 10 ம் திகதி ஜப்பானிற்கு விஜயம்செய்தமை குறிப்பிடத்தக்கது.
அலவி மௌலானாவின் மறைவு – அ.இ.ம.கா அனுதாபம்
– ஊடகப் பிரிவு – மேல் மாகாண சபையின் முன்னால் ஆளுனர் மர்ஹ¬ம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானா அவர்களின் மரணச்செய்தி ஆழ்ந்த கவலையை தந்துள்ளது. முஸ்லிம்களின் மூத்த அரசியல் வாதிகளில் ஒருவரான மௌலானா சமூகத்துக்கும், நாட்டுக்கும் செய்த சேவைகள் இலகுவில் மறக்கக்கூடியதொன்றல்ல. சுதந்திரக்கட்சியின் ஆரம்ப காலத்திலிருந்தே, அக்கட்சியின் அங்கத்தவராக இருந்த அவர், கொள்கை பிரளாது கடைசிவரை அக்கட்சியிலேயிருந்து எல்லோரினதும் நம்பிக்கையையும் , நன்மதிப்பையும் பெற்றவராவார். சகலரிடமும் வேற்றுமை காட்டாது மும்மொழிகளிலும் சரளமாகவும் , அடுக்குத்தொடராகவும் நகைச்சுவையாகவும் பேசும்…
பேதங்களை கைவிட்டு நாட்டை கட்டியெழுப்ப வழிகாட்டுங்கள்!- ஜனாதிபதி
வெளிநாட்டு கடன் சுமையில் நாடு மூழ்கியிருக்கும் நிலையில், இந்த சவாலான சந்தர்ப்பத்தில், வாத பேதங்களை கைவிட்டு, நாட்டை கட்டியெழுப்ப அறிவூட்டலையும் வழிக்காட்டலையும் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சட்டத்தரணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதிக்கும் சட்டத்தரணிகளுக்கும் இடையில் நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கடந்த ஒன்றரை வருடங்களில் இலங்கை இழந்திருந்த பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் கூறியுள்ளார். நாடு பெற்றுள்ள முன்னேற்றம்…
யோசிதவுக்கு பிணை!
கல்கிஸ்ஸை, மிஹிந்து மாவத்தையில் காணி ஒன்றின் உரிமை தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்க்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. தெஹிவளையில் கட்டப்பட்ட அதி சொகுசு மாளிகை குறித்த வழக்கு இன்று (16) கல்கிசை நீதவான் முன்னிலையில் எடுத்து கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்போது, தலா ஒரு மில்லியன் பெறுமதியான 3 சரீரப்பிணைகளில் விடுதலை செய்யுமாறு கல்கிசை நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
