Headlines

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு SLS தரச் சான்றிதழ்

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ். தரச் சான்றிதழ் ஒன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. குறித்த இந்த திட்டமானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன்படி எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் உற்பத்தி செய்யப்படும் அனைத்து தலைக்கவசங்களும் எஸ்.எல்.எஸ். 517 தரத்தைக் கொண்டிருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக மோட்டார் சைக்கிள் விபத்துக்களும், அதனால் ஏற்படும் விபத்துக்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன. அதற்கு உரிய தரமற்ற…

Read More

இலங்கை குழுந்தைகள் தொடர்பில் யுனிசெப் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் 2 இலட்சம் சிறுவர்கள் உயரம் குறைந்தவர்களாக உள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 3 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள்மெல்லிய தோற்றத்துடன் காணப்படுவதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 4 மில்லியனுக்கு அதிகமான இலங்கை சிறுவர்கள் இரத்த சோகை நோயிற்கு உள்ளாகியிருப்பதாகவும் யுனிசெப் நிறுவனத்தின் வைத்தியர் காமினி ஜயக்கொடி தெரிவித்துள்ளார். காலி மாவட்ட பிரதேச செயலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் பாடசாலை சிறுவர்களின் விளையாட்டு…

Read More

இலங்கை குறித்­த வாய்மூல அறிக்­கையை எதிர்­பார்த்­தி­ருக்­கி­றோம்

இலங்கை விவ­காரம் தொடர்­பான ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசைனின் வாய்­மூல அறிக்­கையை நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். அதன் பின்னர் ஐரோப்­பிய ஒன்­றியம் இலங்கை தொடர்­பான விப­ர­மான அறிக்­கையை முன்­வைக்கும் என்று ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் தெரி­வித்தார். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 32 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில்  ஆரம்­ப­மா­னது. அதில் உரை நிகழ்த்­து­கை­யி­லேயே ஐரோப்­பிய ஒன்றியத்தின் ஜெனி­வா­வுக்­கான பிர­தி­நிதி ரொடரிக் ச்ரிவேன் மேற்­கண்­ட­வாறு குறிப்பிட்டார். ஐரோப்­பிய…

Read More

துறைமுக நகரத்திட்டம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றில் முறைப்பாடு

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையத்தின் சார்பாக நாளை தினம் இந்த முறைப்பாடானது ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் வேக்கந்தவெல ராகுல தேரர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கையில் ஏற்படும் பேரழிவுகளுக்கு இத்துறைமுக திட்டமே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Read More

தபால் பணியாளர்களின் பிரச்சினை தொடர்பில் அமைச்சரவையில் விவாதம்

தபால் பணியாளர்களின் பிரச்சினைகள் அமைச்சரவை கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரோஹன அபேரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் தற்சமயம் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வரும் குறித்த பணியாளர்களது பிரச்சினைகள் பற்றி அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இந்தப் பணி புறக்கணிப்பினால் ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால்நிலையத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்று பிற்பகல் ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஊடக சந்திப்பு ஒன்று இடம்பெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

தேசிய புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு

– ஊடகப் பிரிவு – தேசிய மட்ட புத்தாக்கம் மற்றும் புலமைச் சொத்துக்கள் மாநாடு கொழும்பு ஜேய்க் ஹில்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் டி. எம் கே பி தென்னக்கோன் மற்றும் தேசிய மட்ட புத்தாக்க சபையின் பணிப்பாளர் நாயகமும் கலந்து கொண்டனர்.

Read More

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை

நாட்டில் ஏற்படும் சிறிய சம்பவங்களால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் சாலாவை முகாம் வெடிப்பை மையப்படுத்தி அரசியல் லாபம் தேட பலர் முனைவதாகவும், தேசிய பாதுகாப்பிற்கு இடர் ஏற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்காது என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். மேலும் குறித்த வெடிப்பு சம்பவத்தினால் 8000 டொன் ஆயுதங்கள் அழிவடைந்துள்ளதோடு, 75 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், அதில் 35 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன்…

Read More

6 மாகாணங்களில் பேரழிவு நிலைமை பிரகரடனம்

அவசர பேரழிவுநிலை ஏற்பட்டதைத் கவனத்தில் கொண்டு, ஆறு மாகாணங்களில் பேரிழிவு நிலைமை பிரகரடனப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு, பொது ஒழுங்கினைப் பாதுகாத்தல், சமுதாய வாழ்க்கைக்கு இன்றியமையாத வழங்கல்களையும், சேவைகளையும் பேணிவருதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேல், வடமேல், சப்ரகமுவ, வடமத்திய, மத்திய, ஊவா ஆகிய 6 மாகாணங்களிலேயே பேரழிவு நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read More

‘செய்திக்காக சிறுவர்களை பலிகொடுக்காதீர்கள்’

‘சிறுவர்கள் தொடர்பில் செய்தி வெளியிடும்போது ஊடகங்கள் தம்மை பற்றி மட்டுமே சிந்தித்து செயற்படுவதுடன் அது தொடர்புடைய சிறுவர்களது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதில்லை’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சகல ஊடகங்களும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்களாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார். பொலனறுவை ரோயல் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய சிறுவர் சபை தேர்தல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

Read More

கொஸ்கம பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்

கொஸ்கம, சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முப்படைத்தளபதிகள் சகிதம் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி நேற்று (12) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார். அண்மையில் இராணுவ வெடிபொருட்கள் களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த பகுதியில் இடம்பெற்ற தீயினால் பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து செயற்படும் வகையில் இவ்விஜயம் அமைந்தது. இக்கண்காணிப்பு விஜயத்தின் போது பாதிக்கப்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக சுருக்கமாக பாதுகாப்பு செயலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இவ்விஜயத்தில் பாதுகாப்பு செயலாளர், முதலில் படைவீரர் கிராம மக்களையும் தொடர்ந்து கொஸ்கம…

Read More

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துரித நடவடிக்கை!

கொஸ்கமை சாலாவை இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்து காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ துரித நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட கொஸ்கம பிரதேசத்தின் பல பிரதேசங்களுக்கு நேரடி விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர், பாதிப்புக்களை நேரடியாக கண்ணுற்றதன் பின்னரே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நிலவும் பிரச்சினைகள் அனைவற்றையும் தீர்த்து திரும்பவும் இப்பிரதேசத்தினை சாதாரண பிரதேசமாக மாற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இப் பிரதேசத்துக்கான நேரடி…

Read More

පොසොන් උත්සවය වෙනුවෙන් අනුරපුර පාසල් 13 වසා  දැමේ

– නිලුපුලී –  ජූනි මස අනුරාධපුරයෙහි පැවැත්වීමට නියමිත පොසොන් උත්සව රාජකාරි කටයුතු ආවරණය කිරීමට පැමිණෙන ආරක්ෂක නිලධාරින් සඳහා  නවාතැන් පහසුකම් ලබාදිමට අනුරාධපුර සහ මිහින්තලයේ පාසල් දහතුනක් ජුනි 16 දින සිට 22 දින දක්වා වසා දමන බව උතුරු මැද පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව සදහන් කර ඇත . අනුරාධපුර මධ්‍ය විද්‍යාලය, අනුරාධපුර සවර්ණපාලි බාලිකා විද්‍යාලය,ශාන්ත ජෝශප් විද්‍යාලය, විවේකානන්ද මහා…

Read More