Headlines

இன்புலுவன்சா நோய் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதில் சிக்கல் நிலை

நாட்டில் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன். நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்களுக்கான வைத்திய உதவிகளை வழங்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள் வைத்தியசாலைகளில் இல்லையென தாதியர் சங்கம் இதன்போது சுட்டிக்காட்டியள்ளது. இதுவரையில் குறித்த நோயினால் 4 பேர் வரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களில் இருவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

பாசிக்குடா கடலில் காணாமல்போன இரு சகோதர்களில் ஒருவரின் சடலம் மீட்பு

பாசிக்குடா கடலில் குளிக்க சென்று நீரில் மூழ்கி  காணாமல்போன இரு சகோதர்களில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாசிக்குடா கடலில் நேற்று மாலை குளிக்க சென்ற ஐந்து இளைஞர்களில் ஒருவரைத் தவிர மற்றைய நான்கு பேரும் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் நீரில் அடித்து செல்வதை அவதானித்த கரையில் நின்ற நண்பன்  கூச்சலிட்டு ஊ ஏனையவர்களிடம் உதவி கேட்டுள்ளான். இதன்போது பிரதேசத்தின் மீனவர்களின் உதவியுடன் இரண்டு…

Read More

இலங்கை வரும் அப்துல் பாஸித் மௌலவி

-ஏ.பி.எம்.அஸ்ஹர்- சர்வதேச  இஸ்லாமிய மார்க்க அழைப்பாளரும் தென் இந்திய  பிரபல அறிஞருமான மௌலவி அப்துல் பாஸித் புஹாரி இலங்கை வருகிறார். ராபிதது அஹ்லிஸ்ஸுன்னாவினால் எதிர் வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விஷேட இஸ்லாமிய எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு  உரையாற்றவே இவர்  இலங்கை வருகிறார். இம்மாநாடு எதிர்  வரும் சனிக்கிழமை அஸர் தொழுகை முதல் இரவு 10.30 மணி வரை நடை பெறவுள்ளது. இதே வேளை எதிர்…

Read More

பாலித்தவிற்கு நீதவான் எச்சரிக்கை!

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெரும நீதிமன்றில் ஆஜராகாமையினால் மத்துகம நீதிமன்ற பிரதான நீதவான் வசந்த கொசல சேனாதிர கடுமையாக எச்சரித்துள்ளார். நாடாளுமன்றம் என்பது சட்டத்தை உருவாக்கும் இடமாகும் அங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டத்தை உருவாக்குபவர்கள் என நீதவான் தெரிவித்துள்ளார். சட்டத்தை உருவாக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான பாலித்தயே சட்டத்தை மதிக்கவில்லை என நீதவான் மேலும் தெரிவித்துள்ளார். பாலித்தவின் வழக்குகள் தொடர்பில் நீதிமன்றில் நேற்றைய தினம் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு நீதவான் பிடியானை…

Read More

மென்பானங்களால் சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம்

மென்பானங்களால் சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் அதிகரிக்கும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சிறு குழந்தைகளுக்கு தேவையான சீனியின் அளவை விட இரண்டு மடங்கு சீனியின் அளவு குறித்த மென்பானங்களில் அடங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தினமும் இந்த மென்பானங்களை அருந்தும் சிறுவர்கள் மிக விரைவில் நீரிழிவு நோய்க்கு உள்ளாவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் குழந்தை ஒன்றுக்கு ஒரு நாளைக்கு 4 தேக்கரண்டி சீனியின் அளவு தேவைப்படும் நிலையில் குறித்த மென்பானங்களில் 9 தேக்கரண்டி சீனி உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார…

Read More

புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்கு பதிலாக இலத்திரனியல் அனுமதிச்சீட்டு

தற்போது நடைமுறையில் உள்ள புகையிரத அனுமதிச்சீட்டுகளுக்குப் பதிலாகஇலத்திரனியல் அனுமதிச்சீட்டினை அறிமுகப்படுத்த இலங்கைப் புகையிரத திணைக்களம்தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் புகையிரத நிலையங்களின் சேவைகளை இலகுவாக்க முடியும் என புகையிரதபொதுநிர்வாக அதிகாரி ஏ.பீ.ஆரியரத்ன தெரிவித்துள்ளார். குறித்த இலத்திரனியல் அனுமதிச்சீட்டுகளின் நிமித்தம் புகையிரத நிலையங்களுக்குஇரண்டு இயந்திரங்கள் வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு இயந்திரம் புகையிரத நிலையங்களின் அலுவலகங்கள் ஊடாக பயணிகளுக்குஅனுமதிச் சீட்டுகளை வழங்கவும், மற்றைய இயந்திரம் பயணிகள் தாமாகவே பணத்தினைசெலுத்தி அனுமதிச்சீட்டுகளைப் பெறுவதற்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர்தெரிவித்துள்ளார்….

Read More

இலங்கையின் நிதித்துறையை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியம் மேலும் உதவி

சர்வதேச நாணய நிதியத்தின் பங்களிப்புடன் இலங்கையில் முன்னெடுக்கப்படும் மூன்று வருட திட்டத்தின் செயற்பாடுகள்தொடர்பில் நிதியத்தின் உயர் மட்ட பிரநிதிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் நாட்டிள் நிதித்துறையை வலுப்படுத்துவதற்காக தொடர்ந்தும் ஓத்துழைப்பு வழங்குவதற்கும் சர்வதேச நாணய நிதியத்தின்பிரநிதிகள் உறுதி தெரிவித்துள்ளனர். 150 கோடி அமெரிக்க டொலர்கள செலவில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமைகுறிப்பிடத்தக்கது நிதியத்தின் உயர் மட்ட பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோது இதனைத் தெரிவித்துள்ளனர்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையில் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள்…

Read More

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் நாடு வளம் பெறுகிறது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இயற்கை அனர்த்தத்தினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கானவேலைத் திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். உலகின் பொருளாதார சுற்றாடல் நெருக்கடிக்கு மத்தியிலும் கூட இலங்கையினால் பொருளாதார இலக்குகள் பலவற்றை பூர்த்திசெய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். வெனிசுவெலாவில் 18 ஆம் திகதி நடைபெற்ற அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்தவிடயங்;களை குறிப்பிட்டார். இறைமைஒற்றுமை சமாதானம் ஆகியவற்றின் ஊடாக அபிவிருத்தி என்ற தொனிப்பொருளில்அணிசேரா நாடுகளின் அமைச்சர்கள் மட்டத்தில்…

Read More

இலங்கையில் அடுத்த – நீல பச்சை சகாப்த மாநாடு கொழும்பில் நடைபெற ஏற்பாடு

கடல்வளம் குறித்து ஆய்வொன்றை முன்னெடுத்து 2018ஆம் ஆண்டளவில் பாரிய அளவிலான கடல் தொழில் தகவல்கட்டமைப்பு தொகுதியொன்றை அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டுஅலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையின் அடுத்த  – நீல பச்சை சகாப்த மாநாடு ( ‘ Sri Lanka NEXT – Blue Green Era conference’)  என்ற தலைப்பில்மாகாநாடொன்றை நடத்துவதற்கானஎ ஏற்பாடுகளையும் இலங்கை  மேற்கொணடுவருவதாகவும் அமைச்சர் கூறினார். எங்கள் சமுத்திர மாநாடு 2016 என்ற மாநாட்டில் உலையாற்றுகையிலேயே அமைச்சர் மங்கள…

Read More

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு

பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அனைவரையும் பிரதமர் சந்திக்கவுள்ளார். பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட அனைத்து உயர் அதிகாரிகளுக்கும் பிரதமர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். அலரி மாளிகையில் இந்த வாரம் குறித்த சந்திப்பு நடைபெறவுள்ளது. பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக பதவி ஏற்றுக்கொண்டு நான்கு மாதங்களில் பொலிஸ் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது. பிரதமர்…

Read More

அமைச்சர் றிஷாத்தை வீழ்த்த சதி!

முஸ்லிம் காங்கிரசின் அரசியல்வாதிகள் தொடர்ந்தேர்ச்சியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பற்றி இல்லாத பொல்லாத கட்டுக்கதைகளையும் பொய் மூட்டைகளையும் அவிழ்த்து விடுவது அவர்களது அரசியல் இருப்புக்கு சாவுமணி அடிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்திலேயாகுமென்று மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர் அப்துல் பாரி தெரிவித்துள்ளார். அம்பாறையில் மக்கள் காங்கிரஸின் எழுச்சியினால் முஸ்லிம் காங்கிரஸ் ஆட்டம் கண்டு வருவதை உணர்ந்துள்ள மு கா தலைவர் ஹக்கீம் அம்பாறை அரசியல்வாதிகளை பகடைக்காயாக பயன்படுத்தி அமைச்சர் ரிஷாட்டுக்கெதிரான ஊடகவியலாளர் மாநாடுகளை…

Read More

ஜனாதிபதி அமெரிக்காவுக்கு பயணம்

ஐக்கிய நாடுகள் பொது சபையின் 71வது கூட்டத்தொடர் எதிர்வரும் 19ம் திகதி முதல் 26ம் திகதி வரை நியுயோர்க்கில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாநாட்டில் உரையாற்றவுள்ளார். இதற்காக ஜனாதிபதி நாளை அமெரிக்காவுக்கு பயணமாகவுள்ளார். ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்ட அமர்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர்களான மஹிந்த சமரவீர, பைஸர் முஸ்தபா உள்ளிட்ட பலர் இடம்பெறவுள்ளனர். ஐக்கிய நாடுகள்…

Read More