Main News
இராணுவ அருங்காட்சியகம் பொது மக்களின் பார்வைக்காக
திருகோணமலை காலனித்துவம் மற்றும் அண்மைய இராணுவத்தின் வரலாறு தொடர்பான அருங்காட்சியகம் பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டள்ளது. இலங்கை இராணுவம் திறந்தவெளி அருங்காட்சியகம் ஒன்றை திருகோணமலை உவர் மலை பகுதியில் அமைத்துள்ளது. நேற்று முன்தினம் (19) 22ம் பிரிவு தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிசாந்த டி சில்வா இதனை திறந்து வைத்தார். இன்று முதல் பொதுமக்கள் இதனை பார்வையிட முடியும். காலாற்படை ஆயுதங்கள்,கவச வாகனங்கள், பீரங்கி துப்பாக்கிகள் மற்றும் ஆடியோ காட்சி போன்றவை இதில்…
இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்
2015/2016 ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் இணையத்தளத்தின் ஊடாக மாத்திரமே பதிவுகளை மேற்கொள்ள முடியும். 2015ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடத்திலும் பார்க்க இவ்வருடம் மேலதிகமாக 10% ஆன மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கான அனுமதியை பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்காக 68 ஆயிரத்து 299 பேர் விண்ணப்பித்துள்ளனர். எந்தவொரு மாணவருக்காவது மேன்முறையீடு செய்ய வேண்டுமாயிருந்தால் அதற்கென நேற்று…
அரபு நாடுகளுக்கு செல்லும் ஜனாதிபதி மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் அரபு நாடுகளுக்கான விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். அவர் ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு பயணிக்கவுள்ளார். சவூதி அரேபியா விஜயத்தின்போது சவூதி மன்னரிடமும் ஹஜ் மேலதிக கோட்டா தொடர்பாக கலந்துரையாடவுள்ளார். இதனை முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்துள்ளார்.
வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்கள் குடியேற்றப்பட வேண்டும்
-விடிவெள்ளி ARA.Fareel- நாட்டில் மக்கள் சிங்கள கிராமம், முஸ்லிம் கிராமம், தமிழ் கிராமம் என பிரிந்து வாழ்வதினாலேயே இன ரீதியிலான மோதல்கள் ஏற்படுகின்றன. கல்ஹின்னை சம்பவமும் இதன் பின்னணியிலே இடம்பெற்றுள்ளது. எனவே இவ்வாறான சம்பவங்களைத் தவிர்ப்பதற்கு முஸ்லிம் கிராமங்களில் சிங்களவர்களும் சிங்கள கிராமங்களில் முஸ்லிம்களும் குடியேற்றப்பட வேண்டும் என சிங்ஹலே அமைப்பின் செயலாளர் மெதில்லே பஞ்சாலோக தேரர் தெரிவித்தார். கல்ஹின்னையில் இடம்பெற்ற சம்பவத்தினையடுத்து காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று பெரும்பான்மை இனத்தவர்களையும் சிங்ஹலே அமைப்பின் பிரதிநிதிகள்…
அமெரிக்காவின் நிறுவனம் இலங்கைக்கு உதவி
அமெரிக்காவின் (Millennium Challenge Corporation) நிறுவனம் தன்னுடைய ஆரம்ப நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட செயற்திட்டங்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையினை தெரிவுசெய்துள்ளது. MCC நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தனா ஜே ஹைடி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நேற்று (Loews Regency) ஹோட்டலில் சந்தித்தார். 2016 டிசம்பரில் இடம்பெறவுள்ள MCC நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் முன்வைக்கவுள்ள செயலாக்க அறிக்கையினை தயாரிப்பதற்காக தம்முடைய குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும்…
17 ஆயிரத்து 457 பேர் போதை பொருள்களுக்கு அடிமைகள்
இலங்கையில் 17 ஆயிரத்து 457 பேர் ஹொரொயின் உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அடிமையாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐக்கிய தேசியக்கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஹெரோயின் உள்ளிட்ட ஏனைய போதைப்பொருள்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் தொடர்பாக தொகை மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அந்த எண்ணிக்கை எவ்வளவு? மேற்படி நபர்களில் எத்தனை பேர் எச்.ஐ.வி.தொற்றுக்கு…
பொன்சேகாவின் அமைச்சுக்கான குறை நிரப்பு நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி
பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகாவின் பிரதேச அபிவிருத்தி அமைச்சுக்கான 59கோடியே 29 இலட்சத்து 25ஆயிரம் ரூபா குறைநிரப்பு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்றத்தில் நேற்று பிரதேச அபிவிருத்தி அமைச்சரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தனது அமைச்சுக்கு 59கோடியே 29 இலட்சத்து 25ஆயிரம் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை சமர்ப்பித்தார். இதனையடுத்து இடம்பெற்ற விவாதங்களை தொடர்ந்து இத்தொகையை ஒதுக்கீடு செய்வதற்கு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பாரத லக்ஷ்மன் கொலை: தீர்ப்புக்கெதிராக மூவர் மேன்முறையீடு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட குற்றவாளிகள் 3 பேர், அந்தத் தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்துள்ளனர். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தமது மேன்முறையீட்டு மனுவை முன்வைப்பதற்காக தமது சட்டத்தரணிகள் ஊடாக, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை தமது மனுவை ஒப்படைத்துள்ளனர். அநுர துஷார டி மெல், தெமட்டகொட சமிந்த என்றழைக்கப்படும் சமிந்த ரவீ ஜயநாத், சரத் பண்டார, ஆகியோரே…
அரச வைத்திய அதிகாரிகளுக்கு சூரியன் சந்திரனை எம்மால் வழங்க முடியாது!
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சாதாரண மாணவர்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்படுகின்றது. பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. சுயலாபத்துக்காக அவர்கள் கோரும் சூரியனையும் சந்திரனையும் எம்மால் வழங்கமுடியாது என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அமைச்சுக்கள் தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிடும் நேரத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் அகிலவிராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த வாரம் கல்வி அமைச்சுக் கட்டடத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இரவு முழுவதும் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த…
“மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வருமானம்” – அமைச்சர் தயா கமகே
ஒருவருக்கு மாதாந்தம் 75 ஆயிரம் ரூபா வருமானம் கிடைக்கும் வகையில் சுயதொழில் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். இது தொடர்பான வரைபு ஏற்கனவே இறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து வருடங்களை நோக்காக கொண்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக கம்பஹா, குருநாகல் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் இந்த திட்டத்தின் கீழ் 750 மில்லியன் அன்னாசி கன்றுகள் நாட்டப்படவுள்ளன. இதன்மூலம் 7.5 பில்லியன் ரூபாய் வருமானமாக எதிர்பார்க்கப்படுகிறது.
கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை!
தென்னமெரிக்கா மற்றும் பல நாடுகளில், சீகா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால், கர்ப்பிணிப் பெண்கள், வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் பாலித மஹிபால எச்சரிக்கை விடுத்தார். சுகாதாரக் கல்விப் பணிமனையில், நேற்று திங்கட்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘கர்ப்பிணிப் பெண்ணொருவர், சீகா வைரஸால் பாதிக்கப்படுவாராயின், அது அவருடைய வயிற்றிலுள்ள சிசுவின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்தும். இதனால், குறித்த சிசுவுக்கு, நரம்பியல் சம்பந்தமான…
மின்னலும் பின்னலும்
கடந்த 18.09.2016 ஆம் திகதி மாலை சக்தி தொலைகாட்சியில் ஒளிபரப்பப்பட்ட “மின்னல்” நிகழ்ச்சியில் பத்தரமுல்லை சீலரத்ன தேரர் கலந்து கொண்டார். வழமையாக தமிழ்மொழியில் நடைபெறும் இந்நிகழ்ச்சி சிங்களத்தில் நடைபெற்றதோடு, ஒரு பௌத்த பிக்குவை மாத்திரம் வைத்து நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். “மஹிந்த அரசாங்கத்தில் வடபகுதியில் பாரிய அபிவிருத்தி வேலைகள் செய்தபோதிலும் தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு தவறிவிட்டனர்” இது பற்றி உங்கள் கருத்து என்னவென்று நிகழ்ச்சி தொகுப்பாளரான ஸ்ரீ.ரங்கா அவர்களால் கேட்கப்பட்டது. இக்கேள்விக்கான பதிலை தரக்கூடியவர் வடபுல…
