Main News
கட்டுநாயக்கா விமானநிலையம் செல்பவர்களுக்கு எச்சரிக்கை
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் சாம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது. இந்த தடை இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது தற்போதைய வெளியீடான சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது. எனினும் குறித்த தொலைபேசியை பயணத்தின்…
திவிநெகும பரீட்சை நடத்துவதில் சிக்கல்
திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் மூன்றாம் தர உத்தியோகஸ்தர்களுக்கான பரீட்சை நாளை இடம்பெறவுள்ள நிலையில் குறித்த பரீட்சையை நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. குறித்த பரீட்சைக்கு 2 இலட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 90 ஆயிரம் பேருக்கு மாத்திரமே பரீட்சையில் தோற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் பரீட்சைக்கு தோற்ற வாயப்பு வழங்கப்படாதவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று திவிநெகும திணைக்களத்திற்கு பொறுப்பான அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க, திணைக்களத்தின் இயக்குனர் நாயகம் மற்றும் பரீட்சையை நடத்தும்…
ஹெலியை வீடியோ செய்தவர் கைது
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டரை, தன்னுடைய அலை பேசியில் வீடியோ செய்த்தாக கூறப்படும் இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த ஹெலி, பம்பலப்பிட்டிய பொலிஸ் மைதானத்தில், நேற்று தரையிறங்கிய போதே, வெள்ளவத்தையில் தங்கியிருந்து தொழில் புரியும் 26 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளான்.
அழைப்புக் கட்டணங்களை குறைக்குமாறு கோரிக்கை
அலைபேசி அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணத்தை குறைக்குமாறு சோஷலிச இளைஞர் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம் காரணமாக அழைப்பு மற்றும் இணைய தரவுக் கட்டணம் என்பன 100க்கு 50 சதவீதமளவில் அதிகரிக்கப்படும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அழைப்பு மற்றும் இணைய பாவனைக்கான தரவுக் கட்டணங்களுக்கு இவ்வாறு வரி அதிகரிப்பது நாட்டிளுள்ள இளைய சமூதாயத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாரதூரமான விடயம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் றிஷாத் அன்று தடுத்தார் பைசால் காசீம் இன்று நன்றி மறந்தார்
-ஏ.எச்.எம்.பூமுதீன் – 2012ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் முஸ்லிம் எம்பிக்களுக்கும் – அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது. முஸ்லிம் எம்பிக்களின் மாவட்ட தொகுதிப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு வழங்கும் அடிப்படையில் தான் இச்சந்திப்பு இடம்பெற்றது. முஸ்லிம் எம்பிக்கள் தத்தமது பிரச்சினைகளை முன்வைத்த போது அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதிக்கு பொறுப்பான எம்பியான தற்போதைய சுகாதார பிரதியமைச்சரான iபாசல் காசீம், தமது பொத்துவில் சுற்றுலா பிரச்சினை குறித்து…
பிரதமர் நியூஸிலாந்துக்கு விஜயம்!
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் 3ஆம் திகதி வரை நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை நியூஸிலாந்தின் பிரதமர் ஜோன் கீ வெளியிட்டுள்ளார்.
சீனிக்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு!
ஒரு கிலோவுக்கு 0.25 சதமாக இருந்த சீனிக்கான விசேட இறக்குமதி தீர்வை, 1.75 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி புதிய தீர்வை 2 ரூபாவாக இருக்கும். இதேவேளை, சிவப்பு சீனிக்கான இறக்குமதி தீர்வை, கிலோ ஒன்றுக்கு 15 ரூபாவாக இருக்கும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இது கடந்த புதன்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தேவைக்கு 10 வீதம் குறைவான வீதத்திலேயே சிவப்பு…
சந்திர கிரகணத்தை வெற்றுக்கண்களால் பார்க்கும் வாய்ப்பு இலங்கையர்களுக்கு
இலங்கை மக்கள் அனைவரும் இன்று தென்படவுள்ள சந்திர கிரகணத்தை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகம் இன்று தெரிவித்துள்ளது. இந்நிலையில் மக்கள் அனைவருக்கும் இன்று இரவு 10.24 முதல் நாளை அதிகாலை 2.23 மணி வரையில் சந்திர கிரகணம் தென்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான ஆய்வு பிரிவின் பேராசியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். எனினும் இந்த சந்திர கிரகணத்தை அனைவரும் வெற்றுக் கண்களால் பார்வையிட முடியும் எனவும், இதனால் கண்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்பட…
தலைவர் அஷ்ரப் கண்ட கனவு கரைந்து போகுமா?
கிழக்கின் உதய தாரகையாகத் தோன்றி ( 23.10.1947 ல்) நாட்டின் அரசியல் வானில் ஒளிபரப்பி முஸ்லிம்களை அரசியல் ரீதியில் ஒரு குடையின் கீழ் கொண்டுவர அரும் பாடுபட்டு அதன் மூலம் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஸ்தாபித்து “சத்தியமே இலட்சியம்” என்று பறைசாற்றி அதன் வெற்றிப் பாதையையும் காட்டி விட்டு அதற்காகத் தன்னையே தியாகம் செய்துவிட்டு மாபெரும் தலைவர் மர்ஹூம் எம். ஏச். எம். அஷ்ரப் அவர்கள் 16. 09. 2000 ல்…
உண்மைகள் உறங்குவதில்லை
கடந்த 11.09.2016 ஞாயிறு இரவு வசந்தம் தொலைக்காட்சி நடத்திய ‘ அதிர்வு ‘ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமாகிய சகோதரர் அதாவுல்லாஹ் அவர்கள் கிழக்கு மாகாணம் வடக்குடன் இணையக் கூடாது என்பதற்கான உண்மையான உறுதியான தர்க்க ரீதியான நடைமுறை யதார்த்தங்களின் அடிப்படையில் கிழக்கு மக்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தும் வகையில் எடுத்துக் கூறிய காரணங்கள் அனைத்தும் வலுவானதும் வரவேற்கத்தக்கதுமாகும். அவர் எடுத்துக் கூறிய வரலாற்று உண்மைகள் அவரின் நிலைப்பாட்டை நிரூபித்துக் காட்டியுள்ளன. அதற்கு…
மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விளக்கமறியல்
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவினை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (15) பிறப்பித்துள்ளது. வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய போது கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2014-ம் ஆண்டு மாயமான மலேசியா MH370 விமானம் தீப்பிடித்து விழுந்துள்ளது: ஆய்வாளர் தகவல்
கடந்த 2014-ம் ஆண்டு மலேசியா தலைநகரம் கோலாலம்பூரில் இருந்து சீனாவுக்கு சென்ற MH370 விமானம் மாயமானது. இதில், 5 இந்தியர்கள் உள்பட 239 பேர் பயணம் செய்தனர். இந்த விமானத்தின் பாகங்கள் இந்திய பெருங்கடல் பகுதியில் அவ்வப்போது கிடைத்து வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வாளர் பிளைன் ஜிப்சன் என்பவர் விமானத்தின் 5 பாகங்களை கண்டுபிடித்து அவற்றை ஆஸ்திரேலியாவில் உள்ள போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பிடம் வழங்கி உள்ளார். இந்த இடிபாடுகளை ஆய்வு செய்த ஜிப்சன் விமானம் தீப்பிடித்து எரிந்து…
