Main News
டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரியில்
புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த அடையாள அட்டையில் பிரஜைகளின் சகல தகவல்களும் உள்ளடக்கப்படும். 17 வயதை பூர்த்திசெய்த அனைவருக்கும் அடையாள அட்டைகள் வழங்கப்படும் குறித்த அடையாள அட்டைகளை பிரதேச செயலாளர் காரியாலயங்களில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாமலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு, உயர்நீதிமன்ற பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தலைமையிலான நீதியரசர்கள் குழு, இன்று அனுமதியளித்துள்ளது. இலஞ்ச, ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால், நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளுக்கு அவர் சமுகமளிக்காமையினால், ஆணைக்குழுவை அவமதித்ததாக உயர் நீதிமன்றத்தில், ஜூன் மாதம் 30ஆம் திகதி மனுத்…
இளைஞன் விவகாரம்: பொலிஸார் நால்வர் இடைநிறுத்தம்
ஹம்பாந்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த இளைஞரொருவர் காணாமற்போன சம்பவம் தொடர்பில், ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நால்வர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
வற் திருத்தம் 2 வாரத்தில் வரும்
‘ பெறுமதிசேர் வரியை (வற்) 15 சதவீதமாக அதிகரிப்பது தொடர்பான யோசனைக்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், இன்று (நேற்று) நள்ளிரவு வெளியிடப்படும்’ என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார். ‘வற் அதிகரிப்பு யோசனை, வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்துக்கு விடப்பட்ட பின்னர் அது நடைமுறைக்கு கொண்டு வருதல்’ என,…
தொழில் அதிகாரிகளின் விடுமுறை ரத்து
தொழில் திணைக்களத்தின் தொழில் அதிகாரிகளது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொழில் அதிகாரிகள் தற்போது தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். இன்றைய தினம் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படும் என தொழில் ஆணையாளர் நாயகம் சாந்தனி அமரதுங்க அறிவித்துள்ளார். அரச சேவை தொழில் அதிகாரிகளின் சங்கம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான போராட்டத்தினால் உழைக்கும் மக்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விடுமுறை ரத்து செய்யப்பட்டாலும் போராட்டம் தொடரும் என…
இழிவான நபர் நானல்ல! மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன
போர் இரகசியங்களை வெளியிடும் இழிவான நபர் நான் அல்ல என மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார். அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கமல் குணரட்ன போர் இரகசியங்களை அம்பலப்படுத்தியதாக சுமத்திய குற்றச்சாட்டு குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… அண்மையில் வெளியிடப்பட்ட நூலின் ஊடாக எந்தவொரு போர் இரகசியங்களும் அம்பலப்படுத்தப்படவில்லை. நான் போர் இரகசியங்ளை வெளியிடும் படைவீரனல்ல. போர் இரகசியங்கள் இருந்தால் அது…
சாதனை படைத்த ஜனாதிபதி மைத்திரி!
உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை ரீதியில் பேஸ்புக் வலைத்தளத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதிக்கம் தீவிரம் பெற்றுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 11 ஆயிரம் விரும்பங்களை (like) தாண்டியுள்ளார். அதற்கமைய 11 இலட்ச விருப்பங்களை கடந்த இலங்கையின் முதலாவது அரசியல் கதாபாத்திரமாக ஜனாதிபதி இணையம் ரீதியாக சாதனை படைத்துள்ளார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேற்றையதினமான 14ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1,100,133 விரும்பங்கள் பதிவாகியுள்ளன….
பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். வாக்குமூலமொன்றை வழங்குவதற்காகவே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
விமர்சனங்களை முன்வைப்பவர்களிடம் ஜனாதிபதி கேள்வி
ஜனவரி 8 மாற்றம் நிகழ்ந்திருக்காவிட்டால் இன்று நாட்டின் நிலைமை எத்தகையதாக இருந்திருக்கும் என அரசாங்கத்தையும் தம்மையும் விமர்சிக்கின்ற எல்லோரிடமும் தாம் கேட்க விரும்புவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். இந்த அனுபவங்களின்றி சிலர் நாடு எதிர்நோக்கியுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துவருகின்ற செயற்பாடுகளை விமர்சித்து வருவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து அவற்றுக்கு அவர்களிடம் உள்ள தீர்வுகளை முன் வைக்குமாறு தாம் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்கவினால் எழுதப்பட்ட ”நான்…
மாணவர்களின் பிரச்சினை தொடர்பில் விசேட கலந்துரையாடல்
சப்ரகமுவ மாகாணத்தில் சாதாரண தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களை மத்திய மாகாண பாடசாலைகளில் உள்வாங்குவது தொடர்பான முறுகல் நிலைக்கு தீர்வுகாணும் முகமாக இறக்குவானை பரியோவான் கல்லூரியில் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் உயர்தரத்தில் கணித, விஞ்ஞான, தொழில்நுட்ப பிரிPவுகள் இல்லாத காரணத்தினால் அந்தப் பிரிவுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் மத்திய மாகாண பாடசாலைகளில் அனுமதி பெற்றுள்ளனர். எனினும் நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சப்ரகமுவ மாணவர்களை…
கொலம்பியாவில் நிலநடுக்கம்
தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெடெலின் நகரில் இருந்து சுமார் 129 கிலோமீட்டர் வடகிழக்கே பூமியின் அடியில் 72 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
நெதர்லாந்தின் ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கையில் சிறுநீரக நோய் ஒழிப்புக்குத் தேவையான ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவுவதற்கு நெதர்லாந்து முன்வந்துள்ளது. அந்தவகையில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விசேட வைத்திய குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கையில் உள்ள நெதர்லாந்து தூதுவர் Joanne Doornewaard ஜோஆன் டூர்நிவோர்டினால் இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
