Main News
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் றிஷாத் (வீடியோ)
அண்மையில்முஸ்லிம் மீடியாபோரத்தின் பொருளாளர் மர்ஹூம் HM பாயிஸ் அவர்களது ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் பாணந்துறை இஷாரா எழுதிய சிறுவர் நூல் வெளியீட்டு நிகழ்வு ஆகியவற்றில் அமைச்சர் றிஷாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டபோது.
அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)
கொழும்பு டவர் மண்டபத்தில் இடம்பெற்ற அல்-ஹிக்மா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா.
இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழில் திறப்பு
இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று முற்பகல் 10.30 மணியளவில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாதுகாப்பு செயலாளர் கருனாரட்ன ஹெட்டிஆராச்சி, வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ச டி சில்வா , வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே….
பிரதி அமைச்சர் அமீர் அலி, இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் சந்திப்பு
ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவீன வசதிகளுடன் கூடிய பற்சிகிச்சை கூடம் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது. ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவீன பற்சிகிச்சை கதிரை மற்றும் உபகரணங்களை கல்வி அமைச்சு அவசரமாக அனுப்பி வைத்துள்ளது. இதனை பொருந்தும் பணிகள் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன மற்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் நூற்றாண்டு…
வீதி மற்றும் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா
கடந்த 21.01.2017 ஆம் திகதி கோட்டைக்கல்லாற்றில் வீதி மற்றும் தையல் பயிற்சி நிலைய திறப்பு விழா பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜெகதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 30 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட அண்ணாவியார் வீதி, எழுத்துக்காரன்துறை வீதி மற்றும் யுவதிகளுக்கான தையல் பயிற்சி நிலைய ஆகியன பிரதி அமைச்சினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி…
பா.உ. இஸ்ஹாக் ரஹுமானினால் கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலுக்கு ஒலிபெருக்கித் தொகுதி கையளிப்பு
அநுராதபுரம் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்களின் சொந்த நிதியிலிருந்து கலன்பிந்துனுவெவ துனுமடலாவ பள்ளிவாசலிற்கான ஒலிபெருக்கித் தொகுதியினை அண்மையில் கையளித்தார்.
வில்பத்து விவகாரம்: பெரும்பான்மை அமைச்சர்கள் குழுவை களத்துக்கு அழைத்துச் செல்ல யோசனை
மீண்டும் இனவாத கோணத்தில் கொண்டு செல்லப்படும் வில்பத்து விவகாரம் தொடர்பில் பெரும்பான்மை அரசியல் தலைவர்களை நேரடியாக அப்பிரதேசத்துக்கு அழைத்துசெல்ல கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் முயற்ச்சிகளை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முஸ்லீம்களின் மீள் குடியேற்றத்தை சிலர் இனவாத ரீதியில் சித்தரித்து வரும் நிலையில் ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவின் அறிவிப்பு அதனை மேலும் வழுவூட்டும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில் சிங்கள பெரும்பான்மை அமைச்சர்கள் குழுவை களத்துக்கு அழைத்து சென்று…
வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் பயணம் செய்தேன்.. ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை
-ஆதில் அலி சப்ரி – வில்பத்து தேசிய சரணாலயம் பூராகவும் தான் சஞ்சாரித்ததில் அங்கு ஓரங்குளமேனும் காடழிப்பு இடம்பெறவில்லை என்றும் ஊடகங்களில் வெளியான செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லையென்றும் சமூக வலுவூட்டல் மற்றும் சமூக நல ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். நேற்றுமுன்தினம் வில்பத்து, சிலாவத்துர, மரிச்சுகட்டிய பிரதேசங்களில் மேற்கொண்டிருந்த நேரடி விஜயத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். சிங்கராஜவனம், முத்துராஜவெல போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள காடழிப்புகள் தொடர்பாக கவனம்…
அமைச்சர் றிஷாதின் முயற்சியினால் அம்பாறையில் மொத்த விற்பனை நிலையம் ..
நாட்டில் மொத்த மரக்கறி விற்பனை நிலையமாக தம்புள்ளை சந்தை பிரபல்யமாக இருப்பதால் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர் அதில் தூர இடங்களில் இருந்து வருபவர்கள் பல சிரமத்தை எதிர்நோக்குவதோடு நூகர்வோர் அதிக விலை கொடுத்து மரக்கறிகளை கொள்வனவு செய்கின்றனர் இந்த நிலையை மாற்றி மக்களின் நலனுக்காகவும் வர்த்தகர்களின் நலனுக்காகவும் பல திட்டங்களை வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்கள் மேற்கொள்ள ஆலோசித்து வருகிறார். அதாவது வடக்கு தெற்கு கிழக்கு போன்ற மாகாணங்களில் தம்புள்ளை…
முன்பள்ளி பாடசாலைக்கு தளபாடங்கள் வழங்கிவைப்பு
-A.R.A.Raheem – வடமாகாண சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவரின் சகோதரருமான றிப்கான் பதியுதீன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து மன்னார் மூர்வீதியில் இயங்கிவரும் அமெரிக்க சிலோன் மிஷன் முன்பள்ளி பாடசாலைக்கு இன்றயதினம் தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டது.அனைத்து மத மாணவர்களும் ஆரம்ப கல்வி கற்கும் பாடசாலையாகக் காணப்படும் இப் பாடசாலையானது அடிப்படை வசதிகள் ஏதும் இல்லா நிலையில் கடந்த காலங்களில் இயங்கிவந்தது. இது பற்றி றிப்கான் பதியுதீன் அவர்களின் கவனத்தின்கீழ் கொண்டுவந்ததற்கமைய இப் பாடசாலைக்கான கதிரை,மேசை,அலுமாரி…
நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது முஸ்லிம் சமூகத்தை வெகுவாக பாதிக்கும் – அமைச்சர் றிஷாத்
திய அரசியலமைப்புக்கு முன்மொழியப்பட்டுள்ள சில விடயங்கள், புதிய தேர்தல் முறை மற்றும் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் குறைக்கப்படுகின்றமை முஸ்லிம் சமூகத்தை வெகுவாகப் பாதிக்குமெனவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி நல்லாட்சிக்கு பங்களிப்பு செய்த முஸ்லிம்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியையும் பிரதமரையும் வேண்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் புதிய தேர்தல் முறையின் கீழ் நடைபெறவுள்ளமை தொடர்பில்…
அமைச்சர் ரிஷாட்டின் தலைமையில் நுகர்வோர் அதிகாரசபை வீறுநடைபோடுகிறது. – தலைவர் ஹசித திலகரட்ன
-அமைச்சின் ஊடகப்பிரிவு – நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையானது மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற நாட்டின் அபிவிருத்திக்கு உந்துசக்தியாக விளங்கும் நிறுவனமாக திகழ்வதாக நுகர்வோர் அதிகாரசபையின் தலைவர் ஹசித்த திலகரத்ன தெரிவித்தார். விசாரணை அதிகாரிகள் 62 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் 21.01.2017 நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றுகையில், நுகர்வோர் அதிகார சபையானது நுகர்வோர் பாதுகாப்பை நிர்ணயிப்பதுடன் நியாயமான சந்தைவாய்ப்பை ஏற்படுத்துவதன் ஊடாக உள்நாட்டு சந்தையை திறன்மிக்கதாக மாற்றுவதே…
