Main News
போராட்டத்தில் ஈடுபடும் கேப்பாப்பிலவு மக்களின் பிரச்சினைகளை அமைச்சர் றிசாட் கேட்டறிவு!!!
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்திற்கு இன்று (4) விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபடும் அந்தப் பிரதேச மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினையை கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வு தொடர்பில் முல்லைத்தீவு அரசாங்க அதிபர், இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுடனும் கலந்துரையாடினார். மேலும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அம்மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்குமாறும் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு
வாகரை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு நேற்று 02.02.2017 ஆம் திகதி பிரதேச செயலக செயலாளர் ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கோழி குஞ்சுகள் பிரதி அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின்…
வில்பத்து விரிவாக்கம் மீண்டும் ஓர் இனச் சுத்திகரிப்பு
-எம்.ஏ.ஹபீழ் ஸலபி – அண்மைக்காலமாக வில்பத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஊடகங்களிலும் அரசியல் தளத்திலும் விவாதப் பொருளாகியுள்ள இந்த விவகாரம் ஜனாதிபதியின் வில்பத்து விரிவாக்கல் அறிவிப்புடன் இனவாத அரசியல் சதுரங்கத்தில் விசனங்களையும் விமர்சினங்களையும் ஏற்படுத்தியுள்ளது. 1990 ஒக்டோபர் திங்கள் இறுதிப் பகுதியில் புலிகளால் இனச்சுத்திகரிப்புக்குட்படுத்தப்பட்ட வடக்கின் முசலிப் பிரதேச முஸ்லிம்கள் வில்பத்து சரணாலயத்துக்கு உரித்தான காடுகளைச் சட்டவிரோதமான முறையில் அழித்து, குடியேற்றங்களை மேற்கொண்டுவருவதாக தென்னிலங்கை பேரினவாத இயக்கங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றன. இது தொடர்பாக எதிரும் புதிருமான…
கிருஷ்ணன் கோயில் வீதி திறப்பு விழா
கிருஷ்ணன் கோயில் வீதி திறப்பு விழாவில் நேற்று 02.02.2017 ஆம் திகதி கிராம அபிவிருத்தி சங்க செயலாளர் சசிதரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்ட கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா இன்று 02.02.2017 இடம்பெற்றது இந்நிகழ்வில் பிரதி அமைச்சரின் இணைப்பாளர் ஜோன் பாஸ்டர், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் கா….
குருநாகல் மாவட்ட வறியமக்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு
குருநாகல் மாவட்டத்தில் உள்ள வறியமக்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாணகமுவ, சியம்பலாகஸ்கொட்டுவ பகுதிகளில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்வி, கலாசாரத்துக்குப்பொறுப்பான Dr. சாபி சிஹாப்தீன், முன்னால் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நஸீர்,மற்றும் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
குளியாபிட்டி வீரகமவில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை (வீடியோ)
குளியாபிட்டி வீரகம வரையறுக்கப்பட்ட தென்னை முக்கோண வலய பால் உற்பத்தி மற்றும் பால் சேகரிப்பு கூட்டுறவு சங்கத்திற்கான விஜய நிகழ்வில் அமைச்சர் றிஷாத் நிகழ்த்திய உரை.
முஸ்லிம் சமுகத்தின் காணிப் பிரச்சினைகளை அரசு உடன் தீர்த்து வைக்க வேண்டும்
-ஜாவித் – இலங்கை வாழ் முஸ்லிம் சமுகத்தினை சமய ரீதியாக முடக்கும் கைங்கரியத்திற்கு அடுத்த கட்டமாக அவர்களின் காணிகளையும் சுவீகரித்து இலங்கைவாழ் முஸ்லிம் சமுகத்தினை இந்த நாட்டில் எதுவுமற்ற ஒரு சமுகமாக ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கின்றன. இது ஒரு ஆபத்தான செயற்பாடுகளாகவே இருப்பதை காண முடிகின்றது. இலங்கையின் கடந்த முப்பது வருடகால யுத்தத்தின் எதிரிரொலியாக பாதிக்கப்பட்ட மற்றொரு சமுகமாக முஸ்லிம் சமுகம் காணப்படுகின்றனர். இவர்கள் விடுதலைப் புலிகளால் மட்டுமல்லாது கடந்த கால அரசாங்கங்களால்கூட…
மௌலவி ஆசிரியரகள்; பிரச்சினைக்கு உடன் தீர்வு காணுங்கள் அகிலவிடம் றிஷாத் வேண்டுகோள்
-சுஜப் எம் காசிம் – தொடர்ந்தும் இழுபறியில் இருந்து வரும் மௌலவி ஆசிரியர் நியமனத்தை இழுத்தடிப்புச் செய்யாமல் உரிய தீர்வைப் பெற்றுத்தருமாறு அமைச்சர் றிஷாட் பதியுதீன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துடன் வேண்டுகோள் விடுத்தார். கல்வியமைச்சில் நேற்று மாலை (31.01.2107) அமைச்சர் அகிலவிராஜூடன் நடாத்திய சந்திப்பின் போதே அமைச்சர் றிஷாட் இந்த வேண்டுகோளை விடுத்தார். இந்த சந்திப்பின் போது இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளும் உடனிருந்தனர். அச்சங்கத்தின் தலைவர் அனஸ், தொழில் அதிபரும் கல்வி ஆர்வலருமான…
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மாவடிச்சேனை வீதி
கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 20 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மாவடிச்சேனை மின்சார கொங்கீரீட்டு வீதி திறப்பு விழா கடந்த 30.01.2017 ஆம் திகதி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அல்பதா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்ட அமைச்சர் றிஷாத் (வீடியோ)
அண்மையில், யாழ்ப்பாணத்துக்கான அமைச்சர் றிஷாத்தின் விஜயத்தின்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட்டதுடன், ஊழியர்களுடன் கலந்துரையாடினார்.
முஸ்லிம் சமூகத்தை உசுப்பி தமது நோக்கத்தை நிறைவேற்ற நாசகாரிகள் துடிக்கின்றனர். – குருநாகலையில் அமைச்சர் றிஷாட்.
(அமைச்சின் ஊடகப்பிரிவு) அமைதியாக வாழுகின்ற – அவ்வாறே தொடர்ந்தும் வாழவிரும்புகின்ற முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறுகளையும் பழிச் சொற்களையும் சுமத்தி எம்மை சீண்டுவதற்கு இனவாதிகளும், இஸ்லாமிய விரோதிகளும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் எமது சமூகத்தை உசுப்பிவிடுதன் மூலம் தங்கள் இலக்கினை அடைவதற்கு முயற்சிப்பதாகவும்; அமைச்சர் றிஷாட் தெரிவித்தார்.. குருநாகல் மாஹோ ரந்தனிகமவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரசின் கல்விப்பணிப்பாளரும், உயர்பீட உறுப்பினருமான டொக்கடர் ஷாபி தலைமையில் இடம்பெற்ற இந்தக்…
மஹிந்த ராஜபக்ஷவின் கூட்டத்துக்கு உலமா கட்சித்தலைவர் தனது கட்சி சார்பாகவே சென்றாரே தவிர இதற்கும் அமைச்சர் ரிசாதுக்கும் எத்தகைய தொடர்பும் இல்லை என உலமா கட்சித்லைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் தருகையில் அவர் கூறியதாவது, அமைச்சர் ரிசாத் பதியுதீன் தன்னை மன்னித்துக்கொள்ளும்படி உலமா கட்சித்தலைவர் மூலம் சொல்லியனுப்பியதாக சிலர் குறிப்பிட்டுள்ளமை மிகப்பெரிய அபாண்டமாகும். இவ்வாறு மஹிந்த பற்றி எத்தகைய கருத்தையும் இன்று வரை என்னிடம் அமைச்சர் ரிசாத் பேசவேயில்லை என்பதை இறைவன் மீது சத்தியமிட்டு கூறுகிறேன். உண்மையில்; அமைச்சர் ரிசாத் பதியுதீன் பண்பட்ட, நல்ல அரசியல் சிந்தனைத்தெளிவுள்ள அரசியல்வாதியாகும். உலமா கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரசுடன் ஒரு கட்சியாக இணைந்து…
