Headlines

விபத்துக்குள்ளான சிறுமியை பார்வையிட்ட றிப்கான் பதியுதீன் (வீடியோ)

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களின் காரியாலயத்தின் முன்னாள் இடம்பெற்ற விபத்தின் வீடியோ சமூக வலைகளில் வைரலாகி நேற்று பலரும் பார்த்த நிலையில்,இவ் விபத்தில் காயமுற்ற சிறுமி ப்ரியா தற்போது வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய ப்ரியாவை நேற்றையதினம் (19) றிப்கான் பதியுதீன் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளதுடன் அவருக்கான மருத்துவ செலவினையும் வழங்கிவைத்தார். இதன்போது மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் அவர்களிடம் நன்றி தெரிவித்த சிறுமியின் தாய் தன…

Read More

சில தனியார் ஊடகங்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் தர்மத்தை மீறி செயற்படுகின்றன – அமைச்சர் றிஷாத்  குற்றச்சாட்டு

-சுஐப். எம். காசிம் – ஊடக தர்மத்துக்கும், ஊடக நெறிமுறைகளுக்கும் மாற்றமாக சிலரின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலில் தனியார் ஊடகங்கள் சில செயற்பட்டுவருவதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டினார். கொழும்பு அல் ஹிக்மா கல்லூரியின் பரிசளிப்பு விழா மருதானை டவர் மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். பாடசாலை அதிபர் கே.எம்.எம. நாளிர் – தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் முஜிபுர் ரகுமான் எம். பி, மேல் மாகாணசபை உறுப்பினர் பாயிஸ்,…

Read More

பிரதி அமைச்சர் அமீர் அலி, வாழைச்சேனை மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் இடையில் சந்திப்பு

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலிக்கும் வாழைச்சேனை அல் ஸபா ஆழ்கடல் வாவி மீனவர் கூட்டுறவுச் சங்கத்தினருக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு நேற்று 19.01.2017 ஆம் திகதி இடம்பெற்றது. ஆழ்கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

Read More

விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மண்டபத்தில் விவசாய உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி நிஹார மெளஜூத் தலைமையில் 19.01.2017 ஆம் திகதி 4.00 மணிக்கு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உபகரணங்கள்வழங்கப்பட்டது இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி, கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று தெற்கு ஆகிய பிரதேச செயலக…

Read More

கண்டி இராச்சியத்தை பாதுகாக்க போராடிய நாட்டுப் பற்றுடைய முஸ்லிம் வீரர்கள்: தேசிய வீரர்களாக பிரகடனப் படுத்தும் படி ஜனாதிபதிக்கு வேண்டுகோள்!

கண்டி இராச்சியத்தை பாதுகாக்க போராடிய நாட்டுப் பற்றுடைய முஸ்லிம் வீரர்கள்: தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தும்படி ஜனாதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் நாயகம்  வேண்டுகோள்விடுத்துதுள்ளார்.

Read More

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மீனவ ஒய்வு மண்டபத்தினை பிரதி அமைச்சர் அமீர் அலி திறந்து வைப்பு

முதலைக்குடா மீனவர் சங்க கட்டிட திறப்பு விழா நேற்று 18.01.2017 ஆம் திகதி சங்க தலைவர் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் 10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட மீனவ ஒய்வு மண்டபத்தினை பிரதி அமைச்சர் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பட்டிருப்பு தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சின் ஆலோசகருமாகிய கணேசமூர்த்தி,…

Read More

வில்பத்து : மீள்குடியேற்றம் மக்களின் பூர்வீக காணிகளிலே

நாம் கதையை போகஸ்வெவவிலிருந்தே ஆரம்பிக்கவேண்டியுள்ளது. போகஸ்வெவ கருவலங்காலிகுளம் என்பது இலங்கையின் மிகப் பெரிய வனப் பாதுகாப்பு சரணாலயமாகும். இந்த வனப் பாதுகாப்பு சரணாலயத்தின் 5,000 ஏக்கர் அளவிலான வனம் அழித்து போகஸ்வெவ என்ற ஐந்து கிராமங்களை உள்ளடக்கிய குடியிருப்புக்களை இராணுவத்தின் உதவியுடன் ஆரம்பித்தது ஹம்பாந்தோட்டையின் வீரன் நாமல் ராஜபக்ஷ. அது இப்பிரதேசத்தில் வாழ்ந்துவந்த, யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. சிங்கள குடியேற்றங்களை அமைக்கும் நோக்கத்தில் மாத்திரமேயாகும். இது இலங்கையில் கிட்டிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய காடழிப்பாகும். கருவலங்காலிகுளம்…

Read More

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு அமைச்சர் றிஷாத்  விஜயம்

வவுனியா புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமைச்சர் ரிஷாட் அங்கு அதிபர், ஆசிரியர் மற்றும் பாடாசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களை சந்தித்து பாடசாலையில் நிலவும் குறைபாடுகளைக் கேட்டறிந்தார். இந்தப் பாடசாலையில் முதலாம் தரத்தில் சேர்ந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளைவிட அதிகரித்துவருவதால் பாடசாலைக்கு மேலதிக கட்டிட வசதியொன்றை அமைத்துத் தருமாறு ஊரின் முக்கியஸ்தர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர். விரைவில் அதற்கான முன்னெடுப்பை மேற் கொள்வதாக உறுதியளித்தார். பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு மூன்று…

Read More

“விளையாட்டு மைதானத்தை மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களுக்கே வழங்கவும்” வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு

தம்பதெனிய மும்மன்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தை மாணவர்களுக்கு பயன்படுத்த குளியாப்பிடிய வலயக் கல்விப் பணிப்பாளர் அனுமதி வழங்கி மைதானத்தை பாடசாலைக்கு கையளித்துள்ளார். மும்மன்ன பாடசாலை மைதானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை குறித்து நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்று ஆர்.ஆர்.ரி அமைப்பினர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்திருந்த மனு தொடர்பாக குளியாபிடிய வலயக் கல்விப் பணிப்பாளரிடம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்தே மைதானத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில்…

Read More

முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கான புதிய கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி திறந்து வைப்பு

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள், முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கான புதிய கட்டிடத்தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனாவினால் திறந்துவைக்கும் நிகழ்வில் அமைச்சர் றிஷாத் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டு தூதுவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.  

Read More

மீராவோடை அபிவிருத்தி குழு பிரதி அமைச்சர் அமீர் அலி சந்திப்பு

மீராவோடை அபிவிருத்தி குழு உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களுக்கும் இடையிலான சிநேகபூர்வமான சந்திப்பு மீராவோடை முபாரக் மெளலவி அவர்களின் இல்லத்தில் நேற்று 17.01.2017 இரவு 9.00 மணியளவில் இடம்பெற்றது. இச் சந்திப்பில் இராப்போசனமும் இடம்பெற்றது.

Read More