Main News
சீன, சிங்கப்பூர் உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இலங்கையின் இறக்குமதியில் மற்றுமொரு பாய்ச்சல்
இலங்கையுடனான சீனாவினதும், சிங்கப்பூரினதும் சுதந்திரவர்த்தக உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர்; சுங்கத் தீர்வையற்ற கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவில்லாத பொருட்களை இலங்கை இறக்குமதி செய்யமுடியுமென்று உலக வர்த்தக மையத்தின் பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகள் பிரிவின் தலைவர் டாக்டர். ரோகினி ஆச்சார்ய இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான வர்த்தக திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘உலக வர்த்தக மையமும், பிராந்திய வர்த்தக உடன்படிக்கைகளும்’ என்ற தலைப்பிலான தேசிய செயலமர்வில் உரையாற்றிய போதே…
உபயோகித்த தேங்காய் எண்ணெய்யை மீளநிரப்பி விற்பனை செய்த மொத்தவியாபார நிலையம் சுற்றிவளைப்பு.
கொழும்பு புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையம் ஒன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த உபயோகித்த தேங்காய் எண்ணெய் அடைக்கப்பட்டிருந்த 100பெரல்களையும், இரசாயனப் பொருட்களை அடைக்கும் 25கொள்கலன்களில் நிரப்பப்படவிருந்த தேங்காய் எண்ணெய் பெரல்களையும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் இன்று கைப்பற்றினர். தகவல் ஒன்றின் அடிப்படையில் அந்தப்பிரதேசத்தை சுற்றிவளைத்த அதிகாரசபை அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கையின் பின்;னர், இந்த சட்டவிரோத வியாபார நடவடிக்கையை கண்டுபிடித்தனர். பாவித்த தேங்காய் எண்ணெய், நுகர்வோரின் பாவனைக்கு வழங்காமல், வேறு பாவனைக்கே விற்கப்படுவதாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர்…
வவுனியாவில் சிறுஆடைத்தொலைற்சாலை ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு
கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாட் பதிதீன் அவர்களின் வழிகாட்டலின் பேரில் இளம் யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பைபெற்றுக் கொடுத்தல் வேலைத்திட்டத்திற்கு அமைவாக 6 மாத கால பயிற்சியுடன் சிறு ஆடைத்தொழிற்சாலை வவுனியா மாவட்ட தமிழ் பிரதேசங்களில் நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உரிய ஆசிரியர்களுக்கான நியமணக்கடிதங்களை அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மொகைதீன் வழங்கி வைத்தார். வவுனியா மாவட்ட தமிழ் பிரதேச இணைப்பாளர் ஆனந்தன் தலைவமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிறியோன் பாஸ்டர், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜோர்ஜ் , நஷார்…
மக்கள் காங்கிரஸின் மகளிர்பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச மருத்துவ முகாம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் அக்குரணையில் பெண்களுக்கான இலவச உளவியல் மற்றும் மருத்துவ கருத்தரங்கு இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் பெண்களுக்கான விழிப்புணர்வுச் செயலமர்வின் ஒரு பகுதியாகவே அக்குரணையில் இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக மகளிர் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஹஸ்மியா தெரிவித்தார். வேலைக்குச் செல்லும் பெண்களும், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து குடும்பச்சுமைகளையும் தாங்கிக்கொண்டிருக்கும் தாய்மார்களும் பல்வேறு மன உளைச்சல்களுக்கும், தாக்கங்களுக்கும் உள்ளாகிவருவதை கருத்திற்கொண்டே இவ்வாறான செயலமர்வு நடாத்தப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு…
உள்ளுராட்சி சபைகள் தரமுயர்தலும் ,புதியசபைகள் உறுவாக்களும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் பல வருட தொடர்ச்சியான முயற்சிக்கு பலன்
உள்ளுராட்சி சபைகள் தரமுயர்தலும் ,புதியசபைகள் உறுவாக்களும் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களின் பல வருட தொடர்ச்சியான முயற்சிக்கு பலன் உள்ளுராட்சி மாகாண சபைகள் சபைகள் அமைச்சர் பைசல் முஸ்தபா அவசர நடவடிக்கை நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தவகையில் இது தொடர்பான தகவல்கள் திரட்டும் பணிகள் மாவட்ட அரச அதிபரை பணித்ததட்கமைய பத்திரிகையில் எம்மாள் முன்வைக்கப்பட்ட மூதூர் பிரதேச சபையை நகரசபை மாற்றும் கோரிக்கை , , கந்தளாய் பிரதேச சபையை நகரசபை மாற்றும் கோரிக்கை , திருகோணமலை…
முன்னாள் கிழக்கு முதல்வர் மீண்டும் வர முடியாது- அமீர் அலி
கிழக்கு மாகாணத்தில் இனிவரும் காலங்களில் தமிழரோ அல்லது முஸ்லிமோ முதலமைச்சராக வரலாம். ஆனால் தற்போது இருந்த முதலமைச்சர் வரக்கூடாது என்று நான் பிரார்த்திக்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரின் நிதி ஓதுக்கீட்டின் மூலம் மாஞ்சோலை மற்றும் செம்மண்னோடை கிராமத்தில் பல வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கும் நிகழ்வு இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- அரசியலில் இருக்கும் வரை…
கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவிதிட்டத்தை ஆரம்பித்துவைத்த மொஹமட் பாயிஸ்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில், கொழும்பில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் கல்வி பயிலும் பிள்ளைகள் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டத்தின் இன்றைய தினம் ஆரம்பித்துவைத்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அலுவலகத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் தலைமையில் உதவித்தொகை வழங்கிவைக்கப்பட்டது.
கலாவெவ கிராமத்தினை சுற்றியுள்ள பாதைகளை காபட் இட்டு செப்பணிடும் பணிகள் ஆரம்பம்
அநுராதபுர மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதிதலைவருமான இஷாக் ரஹுமான் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க விஜிதபுர சந்தி முதல் கலாவெவ கிராமத்தினை சுற்றியுள்ள பாதைகளை காபட் இட்டு செப்பணிடும் பணிகள் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மண் கிரயெல்ல அவர்களின் பணிப்புரையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இஷாக் ரஹுமான் ஆரம்பித்து வைத்தார். இந் நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கல்வி பிரிவின் இணைப்பாளர் டாக்டர் ஷாபி சிகாப்தீன் பிரதேச…
புல்மோட்டை அன்வாருல் உலூம் அரபுக்கல்லூரி வசதிகளை மேம்படுத்தல்
குச்சவெளி பிரதேச சபை முன்னால் உப தலைவர் A.B.தௌபீக், முன்னாள் உறுப்பினர்களான M.I.பதுர்தீன், H.M.சல்மான் பாரிஸ் ஆகியோரின் வேண்டுகோளின் அடிப்படையில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு இணை தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஃறூப் அவர்களின் முயற்சியில் கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத் தலைவருமான அல்ஹாஜ் றிஷாட் பதுயுதீன் அவர்களின் வழிகாட்டலில். புல்மோட்டை அன்வாருல் உலூம் அரபுக்கல்லூரிக்கு 2 மில்லியன் பெறுமதிவாய்ந்த…
தேர்தல் காலங்களில் மாத்திரம் வீறாப்புப் பேசும் தலைமைகளை ஆதரிக்கும் மனோபாவம் மாற வேண்டும் பொத்துவிலில் அமைச்சர் றிஷாட்
கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் எமது முஸ்லிம் சமூகம் ஏமாற்றப் பட்டிருக்கின்றது. காட்டிக் கொடுக்கப்பட்ட சமூகமாக எமது சமூகம் உள்ளது. எமது காணிகள் எல்லாம் வன வளத்திற்கும் வன ஜீவிகளுக்கும் எழுதப்பட்டுள்ளன. இவைகளை எல்லாம் கேட்பார் பார்ப்பாரற்ற சமூகமாகவும் தேர்தற் காலங்களில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல் தலைமைகளைக் கொண்டிருக்கின்ற சமூகமாக எமது சமூகம் உள்ளது என கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய அரபு…
தேசிய உணவு பாதுகாப்புக்கான வேலைத்திட்டம் விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தேசிய வேலை திட்டமான விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம் எனும் இலங்கை மக்களுக்கான உணவு பாதுகாப்புத்திட்டத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான முதலாவது வேலைத்திட்டம் இன்று தம்பலகமம் பிரதேசத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று இடம்பெற்றது . இந்த நிகழ்வு திருகோணமலை மாவட்ட அபிவிருதிகிழு இணைத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதில் முன்னால் மாகாண அமைச்சர் ஆரியவதி , மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சிவநாதன் , கிழக்குமாகான…
மக்கள் காங்கிரஸ் சமூக அபிலாஷைகளை முன்னிறுத்தியே செயற்படுகின்றது. புத்திஜீவிகளுடனான கலந்துரையாடலில் அமைச்சர் ரிஷாட்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குறுகிய காலத்தில் வளர்ந்த சிறிய கட்சியாக இருந்தபோதும் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்யக் கூடிய வகையில் உச்சளவிலான விடயங்களை இடைக்கால அறிக்கையில் உள்ளீர்ப்பு செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம், அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை, பாராளுமன்ற தேர்தல் முறைமைகள், எல்லை நிர்ணய ஆணைக்குழு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மேற்கொண்ட…
