Main News
வடமாகாண சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து ரிப்கான் பதியுதீன் இன்று இராஜினாமாச் செய்தார்.
கடந்த மாகாண சபை தேர்தலில் எமது கட்சிக்கு ஒரு சில வாக்குகள் குறைவாக கிடைத்ததனால் இன்னுமொரு பிரதிநிதி வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை தவற விட்டோம். எனக்கு அடுத்ததாக வந்த எமது கட்சியின் மூத்த உறுப்பினர் அலிகான் ஷரீப் அவர்கள் வெற்றி பெறாத கவலை எமது கட்சியின் தலைவருக்கு இருந்தது. எனவே அந்த கவலையை நிவர்த்தி செய்வதற்காகவும் அரசியலிலே நாங்கள் ஒரு முன்மாதிரியைக் காட்டுவதற்காகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நான் எனது உறுப்பினர் பதவியை ராஜினாமாச் செய்வதாக…
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு அ.இ.மக்கள் காங்கிரஸ் எதிர்ப்பு
தமிழ் தரப்புக்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கோருவது அவர்களின் விருப்பம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இவ்விரு மாகாணங்களும் இணைவதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடுமையாக எதிர்க்குமெனவும் தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற (௦4) முஸ்லிம் புத்திஜீவிகளுடனான விஷேட சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர்: தமிழர்களின் தாயக கோட்பாட்டுக்கான தியாகங்கள் விலைமதிக்க முடியாதவை. இந்தத் தியாகங்களை முஸ்லிம்கள் மலினப்படுத்தவில்லை. ஆனால், வடக்கு, கிழக்கு இணைப்பில்…
அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஏற்பாட்டில் “சில்ப அபிமானி – 2017” சர்வதேச கைப்பணி விழா
“சில்ப அபிமானி – 2017” சர்வதேச கைப்பணி விழாவின் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (04) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. பேண்தகு இருப்புக்காக மரபுசார் கைப்பணித்துறையை போசித்து, பாதுகாக்கும் நோக்குடன் தேசிய கலை பேரவையினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் சர்வதேச கைப்பணித்துறை விழா இன்றிலிருந்து 08 ஆம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. 2017 சர்வதேச கைப்பணி விழாவை…
கைத்தொழில் மற்றும் வார்த்தக அமைச்சின் புதிய செயலாளராக ரஞ்சித் அசோக பதவியேற்பு
கைத்தொழில் மற்றும் வார்த்தக அமைச்சின் புதிய செயலாளராக நியமனம் பெற்ற திரு கே.டி.என்.ரஞ்சித் அசோக இன்றைய தினம் (04/ 10/ 2017) அமைச்சில் தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். இந்தப் பதவியேற்பு நிகழ்வில் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பங்கேற்றார். புதிய செயலாளராக பதவியேற்ற ரஞ்சித் அசோக நிர்வாக சேவையில் விஷேட தரத்தில் ஓர் உத்தியோகத்தர் ஆவார். 1990 ஆம் ஆண்டு நிர்வாக சேவையில் இணைந்த அவர் 27 வருடங்களுக்குள் நிர்வாக சேவையில் பல பதவிகளை வகித்துள்ளார்….
கால் நடை பண்ணையாளர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த அமைச்சர் அமீர் அலி உதவி
கால் நடை பண்ணையாளர்கள் தங்களது தொழிலை நவீன முறையில் பயன்படுத்துவதன் மூலம் அதிக வருமானங்களை ஈட்டிக் கொள்ளலாம் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் மில்கோ நிறுவனத்திற்கு பால் வழங்கும் கல்குடாத் தொகுதி பால் பண்ணையாளர்களுடனான சந்திப்பு ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் செவ்வாய்கிழமை மாலை மில்கோ நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் கே.கனகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு…
மன்னார் தாராபுரம் அல் மினா மஹா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடதிறப்புவிழாவில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
மன்னார் தாராபுரம் அல் மினா மஹா வித்தியாலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட இப்பாடசாலை கட்டிடத் தொகுதி திறப்பு விழா அதிபர் சரீபுதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட நிறுவனத்தின் அதிகாரி நுஹ்மான், மாகாணசபை உறுப்பினர் ரிப்கான்…
கனியமணல் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தின் நான்கு தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனைச் சந்தித்து, கூட்டுத்தாபனத்தின் முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினர். கடந்த அரசாங்க காலத்திலிருந்து நீண்டகாலமாக தற்காலிகமாக பணிபுரிந்த தொழிலாளர்களுக்கும், இந்த ஆட்சியில் தங்களால் தொழில் வழங்கப்பட்டவர்களுக்கும் நிரந்தர நியமனங்களை வழங்கியமைக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவிப்பதாக கூறினர். கட்சி, இன, மதபேதங்களுக்கப்பால் அமைச்சர் தமது பணிகளில் நியாயமாக நடந்துகொள்வது தமக்கு மகிழ்ச்சி தருவதாகவும், தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரித்துத் தந்தமை…
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை மன்னார் முசலியில் ஆரம்பித்துவைத்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை மன்னார் முசலி பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், முசலி தேசிய பாடசாலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். முசலி பிரதேச செயலாளர் கே எஸ் வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், உள்நாட்டலுவல்கள் அமைச்சின்…
வனஜீவராசிகளில் காட்டும் அக்கறையை மக்களில் காட்ட அதிகாரிகள் மறுக்கின்றார்கள். மறிச்சிக்கட்டியில் காமினி ஜயவிக்ரமவிடம் றிஷாத் தெரிவிப்பு.
வன ஜீவராசிகளின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் அதீத அக்கறை காட்டிவரும் அதிகாரிகள், ஜீவனோபாயப் போராட்டம் நடாத்திவரும் மக்களின் நலன்கள் குறித்த விடயங்களில் உணர்வற்றவர்களாக செயற்படுகின்றனர் என்று அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவிடம் அமைச்சர் றிஷாத் பதியுதீன்; தெரிவித்தார். மன்னார் மாவட்டத்துக்கு நேற்று (29.09.2017) விஜயம் செய்த அமைச்சர் ஜயவிக்ரம பெரேராவை முசலி பிரதேசத்துக்கு அழைத்துச் சென்ற அமைச்சர் றிஷாத், அங்குள்ள பாரம்பரிய கிராமங்களான கரடிக்குழி, மறிச்சுக்கட்டி, பாலைக்குழி போன்ற பிரதேசங்களில் வாழும் மக்களின் அவல நிலையை தெரியப்படுத்தினார். “மறிச்சுக்கட்டியில்…
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்த அமைச்சர் றிஷாட் பதியுதீன்
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் “நிலமெவகர” ஜனாதிபதி மக்கள் சேவை தேசிய வேலைத்திட்டத்தினை இன்று (30) மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் வழிகாட்டலுடன், அடம்பன் மகாவித்தியாலயத்தில், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜ்ர அபேவர்தன மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இணைந்து அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் மன்னார்…
மியன்மார் அகதிகளின் துன்பங்கள், தொண்ணூறுகளில் நாம் பட்ட வேதனைகளை மனக்கண்முன் கொண்டு வருகின்றது. மன்னாரில் அமைச்சர் றிஷாட்
இலங்கையில் தஞ்சமடைநது தவிக்கும் ; மியன்மார் அகதிகளை காட்டுமிராண்டித்தனமாக இனவாதிகள் வெளியேற்றும் காட்சியைப் பார்க்கும் போது, 1990 களில் நாம் பட்ட கஷ்டம், மனக்கண்முன் வந்து மேலும் வேதனைப்படுத்துவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் கரடிக்குளி அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஜப்பானிய அரசின் நிதி உதவியுடன் யு.என்.ஹெபிடாட் நிறுவனத்தினால் அமைக்கப்பட்ட வகுப்பறைக்கட்டிடம் மற்றும் சிற்றுணடிச்சாலையை இன்று மாலை 29 திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் கலந்துகொண்டு…
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு உலகமயமாக்கல் அதீத நன்மைகளை பெற்றுத்தருகின்றது. கொழும்பில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு, அதிகரித்த வாழ்க்கைத்தரத்தையும், வளத்தையும் உலகமயமாக்கல் கொண்டுவருவதாகவும், நிதி வளத்தை அதிகரிப்பதற்கு அது உதவுவதோடு பொருpயல் மற்றும் சமூக அடிப்படையில் விரும்பத்தக்க விடயமாக அதனை நாம் கருதமுடியும் என்றும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கொழும்பு சமுத்ராதேவி பாலிகா வித்தியாலயத்தின் வர்த்தக மாணவர்கள் ஏற்பாடு செய்த வர்த்தக தின விழா ‘உலகமயமாக்கல்’ என்ற கருப்பொருளில் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற போது, பிரதம விருந்தினராக கலந்து கொண்டு அமைச்சர் உரையாற்றினார். கல்லூரியின்…
