Main News
கிரமத்துக்கு ஒரு கோடி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் பிரதம அதிதியாக மொஹமட் பாயிஸ்
தேசிய இளைஞர் சேவைகள் சபையின் கிரமத்துக்கு ஒரு கோடி என்னும் நிகழ்ச்சித்திட்டத்தில் கொழும்பு வடக்கு ரோயல் இளைஞர் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வில் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான மொஹமட் பாயிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது….
பெரும்பான்மைக்கு கிடைக்காத அதிஷ்டம் அமைச்சர் றிசாட் மூலம் சிறுபான்மையினருக்கு…..
ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் நிதி உதவியுடன் UN HABITED நிறுவனத்தின் அனுசரணையில் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் முசலி மண்ணிற்கு அதி சிறந்த பாடசாலைகள் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.. இலங்கை நாட்டிற்கான ஜப்பான் தூதுவராக பான்கிமூன் அவர்கள் பணியாற்றும் பொழுது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் நீண்ட நாள் முயட்சியில் அனைத்து வசதிகளையும் கொண்ட பாடசாலை எமது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது பல மில்லியன் பெறுமதியான இப்பாடசாலை கட்டிடங்கள் கொண்டச்சி மற்றும்…
மண் அகழப்படுவதை உடனடியாக நிறுத்தப்படவேண்டும் கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் .எம். எஸ்.எஸ்.அமீர் அலி
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாலைக்காடு குளத்தில் மண் அகழப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோறளைப்பற்று மத்தி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் திங்கட்கிழமை (25.09.2017) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பாலைக்காடு குளத்தில் மண் அகழப்படுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் மண் அகழ்வதற்கு வழங்கப்பட்ட இடத்தில் மண் அகழாமல் அதனை…
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு நள்ளிரவு அமுலுக்கு வருகின்றது. சதொச அறிவிப்பு
அரிசி உட்பட 9 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை சதொச விற்பனை நிலையங்களில் இயன்றளவு குறைத்து விற்பனை செய்வதற்கு ஜனாதிபதி தலைமையிலான வாழ்க்கைச் செலவு உப குழு மேற்கொண்ட முடிவுக்கிணங்க அப்பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டு இன்று நள்ளிரவு (28) முதல் புதிய விலைகள் அமுலுக்கு வருவதாக சதொச நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி. தென்னக்கோன் தெரிவித்தார். நாட்டில் திடீரென ஏற்பட்ட அரிசித்தட்டுப்பாட்டினால் சந்தையில் அரிசியின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் நாட்டில் பல பாகங்களிலும் பல எதிர்ப்புகள் வெளிவந்ததையடுத்து ஜனாதிபதியின்…
புதிய தேசியக்கூட்டுறவு கொள்கை கூட்டுறவுத்துறைக்கு புதிய உத்வேகம் அளிக்கும் மாகாண அமைச்சர்கள் மாநாட்டில் ரிஷாட் தெரிவிப்பு
புதிய தேசிய கூட்டுறவுக்கொள்கை அமுல்படுத்தப்பட்ட பின்னர் கூட்டுறவுத்துறையானது மிகவும் பலமான நவீனமயப்படுத்தப்பட்ட அமைப்பாக மாற்றமடையும் என்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாகாண கூட்டுறவு அமைச்சர்களின் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று 27.09.2017 இடம்பெற்ற போது, மத்திய கூட்டுறவுத்துறைக்கு பொறுப்பான அமைச்சரான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அமைச்சர் உரையாற்றியதாவது, புதிய தேசிய கூட்டுறவுத்துறையின் உருவாக்கத்திற்கு உதவிவரும் மாகாண கூட்டுறவு அமைச்சர்களுக்கு இந்த நிகழ்விலே நான் நன்றி தெரிவிக்கின்றேன். விரைவில்…
காணிப்பிரச்சினை தொடர்பாக திருகோணமலை மாவட்ட பொலிஸ்மா அதிபரிடம் அப்துல்லா மஹ்ரூப் எம் பி பேச்சு.
நிலாவெளி 60 ஏக்கர் காணி பிரச்சினை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் , திருகோணமலை மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் Mr. நிமல் சந்திப்பு. கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக நிலாவெளி ரசூல் நகரில் வசித்து வரும் முஸ்லிம்களுக்கு சொந்தமான அறுபது (60 ac) ஏக்கர் காணியை வேறு நோக்கத்திற்காக அபகரிக்க மேற்கொண்டுவரும் முயற்சியை தடுப்பதற்கும் , அக்காணிகளை குடியிருப்பாலர்களுடையாதாக்குவதட்குமான முயற்சியாக பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் அவர்களுக்கும் , திருகோணமலை மாவட்ட பிரதிபொலிஸ் மா…
ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழல்கள் மிக விரைவில் வெளியிடப்படும் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
ஓட்டமாவடி பிரதேச சபையின் ஊழல்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோரின் இணைத் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது மேற்டசொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளரின் நடவடிக்கை சம்பந்தமாக அநேகமான முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பட்டுள்ளது….
இலங்கை தொழிற்துறை சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
இலங்கை தொழிற்துறை சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற போது பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.
வர்த்தக தின நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன்.
நுகேகொட சமுத்ரா தேவி பாலிகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற வர்த்தக தின நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்ட போது…
ஹக்கீம், ரிஷாட், அசாத் சாலி ஜனாதிபதியை சந்தித்து பேச்சு
நுரைச்சோலை வீட்டுத்திட்டம், மௌலவி ஆசிரியர் நியமனம் உட்பட முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் சிக்கலான பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி திட்டவட்டமான முடிவுகளை மேற்கொண்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் ஆசாத்சாலியின் வேண்டுகோளுக்கிணங்க இன்று மாலை ஆசாத்சாலி உட்பட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகிய மூவரையும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்திய போதே, அவர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தார். கடந்த மே மாதம் 12ஆம் திகதி ஆசாத்சாலி ஜனாதிபதிக்கு அனுப்பி…
ரோகிங்யோ அகதிகள் மீது இனவாதிகள் அட்டுழியம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சாகலவிடம் ரிஷாட் முறையீடு
கல்கிசையில் ஐ.நாவின் மேற்பார்வையில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்யோ அகதிகளை அங்கிருந்து வெளியேற்றச் செய்து அகதிகளையும், முஸ்லிம்களையும் மிகவும் மோசமான முறையில் தூஷித்து அடாவடித்தனம் மேற்கொண்ட இனவாதிகள் மீது அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும், இந்த அவலைகளின் பாதுகாப்புக்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்கமாறும் சட்டமும், ஒழுங்கும் அமைச்சர் சாகல ரட்நாயக்கவிடம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார். அமைச்சர் சாகல ரட்நாயக்கவை இன்று (26.09.2017) காலை அமைச்சரவை கூட்டம் முடிவடைந்த பின்னர் சந்தித்துப் பேசிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கல்கிசையில் இடம்பெற்ற…
அமீர் அலி முயற்சியில் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி.
ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழிகாட்லில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் வறிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பதிநான்கு பிரதேச செயலகப் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு தையல் இயந்திரம், மண்வெட்டி, மருந்து விசுரும் கருவி, மேட்டு நில பயிர்செய்கைக்காக சோளன் கச்சான் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் நானூறு குடும்பங்களுக்கு பதினாறு லட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா…
