Main News
அரிசித் தட்டுப்பாட்டை நீக்க 5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி பண்டிகையை முன்னிட்டு 500 அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு. ஊடகவியலாளர் ,மாநாட்டில் அமைச்சர் ரிஷாட் அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும், இந்தியாவிலிருந்து ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டு ஒருதொகுதி அரிசி வந்து சேர்ந்துள்ளதாகவும் கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்புத் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளை விளக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அமைச்சர் ரிஷாட் இந்த தகவலை வெளியிட்டார்….
அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் உதவியின் மூலம் மன்/பிச்சவாணிப நெடுங்குள மக்களுக்கு விடுகள் வழங்கி வைக்கப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்களின் உதவியின் மூலம் மன்/பிச்ச வாணிப நெடுங்குள மக்களுக்கு அளக்கட்டில் 45 வீடுகளை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது ..!! பயனாளிகளுக்கு வீடு கொடுக்கும் நிகழ்வில் கெளரவ அமைச்சர் அவர்களின் மன்னார் மாவட்ட இணைப்புச் செயலாளர் சகோதரர் எஸ்.எச்.எம்.முஜாஹிர் மற்றும் மீள் குடியேற்ற செயலனியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சகோதரர் முஜீப் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆரம்ப கால போராளிளான சகோதரர் வஸீம் பதுறுத்தீன்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பணத்தை போதைக்காக செலவழிப்பது அதிகமாக காணப்படுகின்றது. பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி
மட்டக்களப்பு மாவட்டத்தில் பணத்தை போதைக்காக செலவழிப்பது அதிகமாக காணப்படுகின்றது. இதனை தடுக்கும் முயற்சியில் தாய்மார்கள் செயற்பட வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் போரதீவுப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும்…
முல்லைத்தீவு முஸ்லிம் சிவில் போரத்திற்கும் வட மாகாண சபை உறுப்பினர் யாஸீன் ஜவாஹிருக்குமிடையிலான சந்திப்பு!
முல்லைத்தீவு முஸ்லிம் சிவில் போரத்திற்கும் (MMCF) வட மாகாண சபை உறுப்பினர் யாஸீன் ஜவாஹிருக்குமிடையிலான சந்திப்பு கடந்த வாரம் புத்தளம், நிலாமல்டி மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீள்குடியேறுவதில் எதிர்கொள்ளும் சவால்கள், காணிப் பிரச்சினைகள், வாக்காளர் பதிவில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தமிழ்- முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்பும் அதேவேளை முஸ்லிம்களின் உரிமைகளை ஜனநாயக வழியில் பெற்றுக் கொள்ளுதல், எம்.எம்.ஸி.எப். இன் எதிர்கால நடவடிக்கைகள் முதலான விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. இதன்போது போரம் விடுத்த வேண்டுகோள்களை வட மாகாண…
வாகரையில் நண்டு வளர்ப்பு திட்டத்தை ஆரம்பித்துவைத்த பிரதியமைச்சர் அமீர் அலி
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் நண்டு நகரம் என்ற திட்டத்தில் நண்டு வளர்ப்பை ஊக்குவிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைய தேசிய உணவு உற்பத்திக்கான எழுச்சி வாரத்தை முன்னிட்டு மீனவர் புரட்சி தினம் ஓட்டமாவடி மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- வாகரையில்…
புத்தளம் மாவட்டத்தில் கிராமசேவ உத்தியோகத்தர் காரியாலங்களை அமைக்கும் செயற்திட்டத்தின் ஆரம்பித்துவைத்தை நவவி எம்.பி
அரச வேலைத்திட்டங்களின் ஒரு பகுதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்களின் முயற்சியினால் புத்தளம் மாவட்டத்தில் பல கிராமசேவ உத்தியோக காரியாலங்களை அமைக்கும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இன்று முசல்பிட்டி கிராமத்தில் கிராமசேவ உத்தியோக காரியாலய கட்டிடத்திட்கான அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கெளரவ அல்ஹாஜ் எம்.எச்.எம். நவவி அவர்கள் கலந்துகொண்டதோடு,…
மகளீர் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முன்வரவேண்டும் பிரதியமைச்சர் அமீர் அலி
அரசியல் மாற்றம், குடும்ப மாற்றம், போதை மாற்றம், பிள்ளைகள் கல்வியில் வளர வேண்டும் என்ற மாற்றங்களை மகளீரை வைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்;க்கின்றேன் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட மகளீர் சுயதொழில் கூட்டுறவுச் சங்க பிரதிநிகளுடனான சந்திப்பு ஒட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்- மது பாவனையில் மட்டக்களப்பு…
றிஷாட் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ராஜித சாட்டையடி
வெளிநாடுகளிலிருந்து நிதியுதவியைப் பெற்று இலங்கையில் அமைக்கப்படும் வீடுகளுக்கு அனுமதிபெறத் தேவையில்லை என்றும் வீடுகள் அமைக்கப்படும் காணிகளுக்கு மாத்திரமே அனுமதி பெறப்பட வேண்டுமெனவும் அந்த வகையில் கைத்தொழில் வரத்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் நமது நாட்டில் அமைத்து வரும் வீடுகளுக்கும் எந்தவிதமான அனுமதியும் பெறத்தேவையில்லையென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலே, சிங்களப் பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் றிஷாட் பதியுதீன்…
மட்பாண்ட உற்பத்தி தொழிலார்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அமீர் அலி
கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மட்பாண்ட உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் சக்கப்போர் வழங்கும் நிகழ்வு இன்று (11) ரதிவன்னண் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டு வாழ்வாதார உபகரணங்களை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் சசிகுமார் , பிரதி அமைச்சரின் இணைப்பாளர் கன்ணன் , நித்தியானந்தன், மகேந்திரன் மற்றும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
நீண்ட நாள் கனவுகளை நிறைவேற்றினார் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்..
இத்தனை காலமும் கவனிப்பார் அற்று கிடந்த குளியாப்பிடி தொகுதியின் விசினவ கிராமத்தின் பொத்துகர-வாதாகொடுவ பாதையை அமைச்சர் றிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் காபட் பாதையாக புனரமைக்கப்படவுள்ளது. இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் குளியாப்பிடி தொகுதி முக்கியஸ்தர்கள் மற்றும் முன்னால் மாகாண சபை உருப்பினறும் லங்கா சதொசயின் பிரதித் தலைவருமாகிய நஸீர், முன்னால் குளியாப்பிடி பிரதேச சபை உறுப்பினர் இர்பான், குருவிகொட்டுவ பாயிஸ், நவாவி;ஊர் மக்களும் கலந்து கொண்டார்கள்.
ஜனாதிபதியின் “மீண்டும் நாம் எழுவோம்-களஞ்சியத்தை நிரப்புவோம்” விஷேட வேலைத்திட்டம்-பிரதம அதிதியாக பிரதியமைச்சர் அமீர் அலி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய தேசிய உணவு உற்பத்திக்கான எழுச்சி “மீண்டும் நாம் எழுவோம்-களஞ்சியத்தை நிரப்புவோம்” எனும் தொனிப்பொருளிலான வேலைத்திட்டத்தில் நேற்று 10.10.2017ம் திகதி செவ்வாய்க்கிழமை தேசிய உணவு உற்பத்தி புரட்சி மீனவர் தினம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மீனவர் புரட்சி தினம் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் பிரதேச செயலக உதவித் திட்டப்பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத் தலைமையில் மீறாவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது தியாவட்டவான் பிரதேசத்தில்…
இந்தியாவிலிருந்து முதலாவது தொகுதி அரிசி இலங்கைக்கு வந்தது.
இந்தியாவிலிருந்து 12500 மெற்றிக் தொன் பச்சை நாட்டு அரிசி, இன்று (10) கொழும்புதுறைமுகத்துக்கு வந்து சேந்துள்ளதாக கைத்தொழில் வர்த்தக அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்ட அரிசித்தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சரவையின் வாழ்க்கைச் செலவு உபகுழு மேற்கொண்ட முடிவுக்கமைய இலங்கை அரசாங்கம் இந்திய தனியார் துறையினரிடம் இருந்து 72000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கான உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டதையடுத்தே அதன் முதலாவது தொகுதி இன்று கொழும்புத் துறை முகத்துக்கு வந்து சேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்தார். “அரிசித் தட்டுப்பாட்டை…
