Main News
பிரபாகரனை பார்த்தது போலவே என்னையும் பார்க்கிறார்கள் – ரிசாத் பதியுதீன்
கடந்த காலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் பிரபாகரனை எந்த நிலையில் வைத்து பார்த்தார்களோ அதே நிலையில் இன்று என்னையும் பார்க்கிறார்கள் என கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற பாராளுமன்ற சிரேஷ்ட உரை பெயர்ப்பாளர் எம்.எம் ராஸிக் எழுதிய ஹெம்மாத்தகம முஸ்லிம்களின் வரலாறு சமூகவியல் நோக்கு எனும் நூலின் அறிமுக விழா நேற்று கொழும்பில் உள்ள ஜம்மியதுஸ் சபாப் கேட்போர்கூட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுபோதே அவர்…
இந்திய முஸ்லிம்களுக்கு நேர்ந்த கதி இலங்கை முஸ்லிம்களுக்கும் வரும் ஆபத்து கண்டியில் அமைச்சர் றிஷாட்
இந்தியாவில் தேர்தல் முறையில் மாற்றத்தைக் கொண்டுவந்து அங்கு 26 சதவீதமான வாழ்ந்து வரும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இரண்டு சதவீத்துக்கு குறைவாக மாற்றியமைத்தது போல இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாகக் குறைப்பதற்கான திட்டமிட்ட சதி இடம்பெறுவதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் குற்றஞ் சாட்டினார். மக்கள் காங்கிரசின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பும் கட்சிக் கினை புனரமைப்புக் கூட்டமும் கண்டியில் இன்று காலை (18) இடம்பெற்ற போது உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி மைத்திரியையும் பிரதமர் ரணிலையும்;…
ஒரு சிலரை திருப்திப்படுத்துவதற்காக வடக்கு, கிழக்கை பலாத்காரமாக இணைக்க அனுமதிக்க முடியாது. கொழும்பு நூல் வெளியீட்டு விழாவில் ரிஷாட் திட்டவட்டம்
வடக்குக் கிழக்கு இணைப்புத் தொடர்பில் அங்கு வாழும் ஒரு சாரார் இணைப்பை விரும்பாவிட்டால் பலாத்காரமாக அதனை ஒருபோதும் செய்ய அனுமதிக்க முடியாதெனவும் வெறுமனே சுயநலத்துக்காகவோ, சிலரைத் திருப்திப்படுத்துவதற்காகவோ சந்தர்ப்பவாதத்துக்காகவோ மேற்கொள்ளும் அரசியல் சமூகத்திற்கு ஏற்புடையதல்ல எனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சிரேஷ்ட உரை பெயர்ப்பாளரும், சமூகவியல் ஆய்வாளருமான எம் எம் ராஸிக் எழுதிய “ஹெம்மாத்தகமை முஸ்லிம்களின் வரலாறு” என்ற நூலின் வெளியீட்டு விழா மருதானை மாளிகாகந்தை அஷ் ஷபாப்…
நவவி எம் பி யின் முயற்சியால் புத்தளம் மாவட்டத்தில் அபிவிருத்தி பணிகள்.
நமது பாராளுமன்ற உறுப்பினரின் முயற்சியால் மாண்புமிகு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் கீழான “தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாட்டு ” அமைச்சின் ஊடாக 15 திட்டங்களுக்கு இரண்டு கோடி (200,000,00/=) ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . இதன் பணிகள் உடனடியாக இம்மாதமே ஆரம்பம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. திட்டமும் ஒதுக்கீடுகளும் கீழே – 01). உடப்பு ஆண்டிமுனை பாதை – 01 மில்லியன் 02). விருதோடை அல்முபாரக் பாதை – 1.5 மில்லியன் 03). விருதோடை –…
அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அமைச்சின் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்களான…
“அங்கவீனம் ஓர் இயலாமை அல்ல” என்பதை திஹாரிய அங்கவீனர் நிலையத்துக்கு விஜயம் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் நிதர்சனமாக உணர்த்திய மாணவர்கள்!
திஹாரிய அங்கவீனர் நிலையத்துக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்ட கைத்தொழில், வர்த்தக அமைச்சரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியுதீனிடம், அங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தமது உள்ளக்கிடக்கைகளையும், தேவைகளையும் சைகை மொழியின் மூலமும், எழுத்து மூலமும் வெளிப்படுத்தினர். 1984 ஆம் ஆண்டு ஐந்து பிள்ளைகளுடன் ஒரு வாடகை வீட்டில், தனி மனிதன் ஒருவனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையத்தின் முன்னோடியும், ஸ்தாபகத் தலைவருமான ஜிப்ரி ஹனீபா, அண்மையில் காலமான போதும் கல்லூரி நிர்வாகம் பல்வேறு…
அமீர் அலியின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள்
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் கிராமிய பொருளாதார பிரதியமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வாகரைப் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கேணிநகர், ஆலங்குளம் பிரதேச வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கேணிநகர் கலாசார மண்டபத்தில்இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. கிராமிய பொருளாதார அமைச்சினால் வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்களான…
‘முஸ்லிம் நாடுகள் தட்டிக்கேட்குமென நினைப்பது மடைமைத்தனம்’ ‘றோகிங்யோ நல்ல படிப்பினையென அமைச்சர் ரிஷாட் திஹாரியில் தெரிவிப்பு’
இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களும், பிரச்சினைகளும் ஏற்படும் போது, அரபுவுலக நாடுகளும், முஸ்லிம் நாடுகளும் கைகொடுத்து உதவுமென்று நாம் நம்பிக்கை கொண்டிருப்பது மடைமைத்தனமானதெனவும், றோகிங்யோ முஸ்லிம்களின் அவலங்கள் நமக்கு நல்ல படிப்பினையாக அமைந்துள்ளதெனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். திஹாரிய ஈமானிய அரபுக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று காலை (15.10.2017) திஹாரியில் இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர், பட்டம் பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் நினைவுச்சின்னங்களையும் வழங்கினார்….
நல்லாட்சி அரசாங்கம் 2025 ம் ஆண்டு வரைக்கும் நீடிக்கும்.
நல்லாட்சி அரசு இன்று அல்லது நாளை கவிழ்ந்து விடும் என சிலர் பகல் கனவு காண்கின்றனர். 2025 ம் ஆண்டு வரைக்கும் இந்த நல்லாட்சி அரசாங்கமே ஆட்சியில் நீடிக்கப்போகிறது. ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவும் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவுமே பதவி வகிக்க போகிறார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.எம் நவவி தெரிவித்தார். புத்தளம் மன்னார் வீதி புதுக்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் பொது மக்களுக்கு துரித கெதியில் சேவைகளை வழங்கும்…
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் அமீர் அலியின் முயற்சியால் போரதீவுப்பற்றில் வாழ்வாதார உதவிகள்.
கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறுபட்ட வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது. இதனடிப்படையில் போரதீவுப்பற்று செயலகப் பிரிவிலுள்ள வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வாழ்வாதார உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பெரியபோரதீவு கலாசார மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்….
ஷிராஸ் வெளியேறுகிறாரா?
அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து தான் ஒரு போதுமே வெளியேறப் போவதில்லையெனவும் தன் மீது அரசியல் காழ்ப்புணர்வு கொண்டவர்களும், வங்குரோத்து அரசியல்வாதிகளுமே வீணான அபாண்டங்களை பரப்பி வருவதாக கல்முனை மாநகர முன்னாள் மேயரும் லங்கா அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைவருமான ஷிராஸ் மீரா சாஹிப் அறிக்கையொன்றின் மூலம் உறுதிபட தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து என்னைத் தூரமாக்கி தமது அரசியல் தேவைப்பாடுகளை அடைந்து கொள்ள நினைப்பவர்களே இவ்வாறு…
குர்தீஸ்தான் கொன்சியூளரிடம் அமைச்சர் ரிஷாட் சந்திப்பு
குர்தீஸ்தான், எர்பில் நாட்டின் இலங்கைக்கான கொன்சியூளர் டாக்டர் அஹமட் ஜலால் அவர்களை கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சில் சந்தித்து, பேச்சு நடத்தினார். இரண்டு நாடுகளின் வர்த்தக உறவுகள் மற்றும் பொருளாதார ரீதியிலான பொருளாதார விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். இலங்கையில் கோழிப் பண்ணை வளர்ப்பு, சோளகத்தை அரைக்கும் இயந்திர ஏற்றுமதி தொடர்பில் டாக்டர் அஹமட் அமைச்சருடன் பேச்சு நடத்தினார். இலங்கை தொழிலாளர்கள் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் என கூறிய டாக்டர் தமது நாட்டில் அவர்களுக்கு…
