Main News
காத்தான்குடி சுதந்திரக் கட்சி முக்கிய பிரமுகர்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் இணைவு!
-ஊடகப்பிரிவு- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அணியிலிருந்து நீண்ட காலமாக பலமிக்க பிரமுகர்களாய் திகழ்ந்த பலர் இன்று காலை (20) அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டனர். மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி நகர சபை தலைமை வேட்பாளரும், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் முன்னிலையில் இணைந்து கொண்ட இவர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் காத்தான்குடி நகரசபையில் தனித்து, தனது மயில் சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.
மு.கா முதன்மை வேட்பாளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!
-ஊடகப்பிரிவு- கல்பிட்டி பிரதேச சபையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதான வேட்பாளராக களமிறங்க இருந்த கடையாமோட்டை வட்டாரத்தை சேர்ந்த, முஹம்மத் பைசல் இன்று (20) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். இவர் எதிர்வரும் உள்ளுராட்சி சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக, கல்பிட்டி பிரதேச சபை தேர்தலில் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நவவி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்பிட்டி அமைப்பாளர்…
‘எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் இலக்கத்திற்கு வாக்களிக்கின்ற தேர்தலல்ல. ஒரு வட்டாரத்தில் போட்டியிடுகின்ற ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தலாகும்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!
-முர்ஷித் வாழைச்சேனை- எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் இலக்கத்திற்கு வாக்களிக்கின்ற தேர்தல் அல்ல. ஒரு வட்டாரத்தில் போட்டியிடுகின்ற ஒருவரைத் தெரிவு செய்வதற்காக அவர் சார்ந்த சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்கின்ற தேர்தலாகும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சரிப் அலி ஆசிரியர் அமைப்பின் ஏற்பாட்டில், றோஸ் முன்பள்ளியின் 23 வது மாணவர் தரமுயர்த்தல் விழா, கடந்த ஞாயிற்றுக்கிழமை (17) செம்மண் ஓடை அல்/ஹம்றா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. அதில் பிரதம…
களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டி!
-ஊடகப்பிரிவு- களுத்துறை மாவட்டத்தில் உள்ள களுத்துறை நகரசபை மற்றும் பேருவளை பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுகின்றது. களுத்துறை நகரசபைக்கான வேட்புமனுவை கட்சியின் முதன்மை வேட்பாளரும், அதிகாரமளிக்கப்பட்ட முகவருமான எஸ்.எம்.ஹிஷாம், களுத்துறை மாவட்டத்தில் இன்று (20) தாக்கல் செய்தார். நாளை காலை (21) பேருவளை பிரதெச சபைக்கான வேட்புமனுவை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தாக்கல் செய்யவுள்ளது. இதே வேளை, கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு மாநகர சபை, அத்தனகல்ல…
ஒப்பீட்டளவில் அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக பாகிஸ்தான் அரிசி காணப்படுகின்றது!
–ஊடகப்பிரிவு- பல நாடுகளிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற அரிசிக்கான இறக்குமதி வரி கிலோவொன்றிற்கு 25 சதம் விதிக்கப்படுகின்ற போதிலும், பாகிஸ்தானிலிருந்து வரும் அரிசி மட்டும் கிலோவொன்றிற்கு 50 ரூபா வரி விதிக்கப்படுகிறது. இது ஒப்பீட்டளவில் அதிக இறக்குமதி வரிக்கு உட்பட்டதாக உள்ளமை எமக்கு கவலையை தருகின்றது என, பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதம தலைமை நிறைவேற்று அதிகாரி ரபீக் சுலேமான் தெரிவித்தார். கடந்த வாரம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள கைத்தொழில், வர்த்தக அமைச்சின்…
சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார்!
-ஊடகப்பிரிவு- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகளில் ஒருவரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், சாஹித்திய மண்டல விருது பெற்ற கவிஞருமான, காத்தான்குடியைச் சேர்ந்த அல்ஹாஜ் ரீ.எல்.ஜவ்பர்கான் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான, அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். இவர் தலைவர் அஷ்ரபுடன் இணைந்து, முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியவர். கடந்த 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்டதுடன், 2011 நகர சபைத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளராக போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
“டயஸ் போராவின் கீழ் இயங்கும் ஹக்கீமுடன் இணைந்திருக்க முடியாது” ரிஷாட் பதியுதீனுடன் இணைந்தார் ஜவாத்!
-ஏ.எச்.சித்தீக் காரியப்பர்- கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஜவாத் மு.காவிலிருந்து வெளியேறி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். “டயஸ் போராவின் கீழ் இயங்கும் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்துடன் தொடர்ந்தும் இணைந்து என்னால் செயற்பட முடியாது. இதுவே நான் கட்சியிலிருந்து விலகுவதற்கான காரணம் ஆகும்” என அவர் தெரிவித்தார். “கல்முனையில் இப்போதுள்ள சூழ்நிலைக்கும், எதிர்கால சூழ்நிலைக்கும் ஏற்ற ஒருவராக, நான் அமைச்சர் ரிஷாத்…
சாய்ந்தமருது சுயேச்சை குழுவை ஆதரிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முடிவு! மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவர் ஜெமீல் அறிவிப்பு!
-ஊடகப்பிரிவு- சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வென்றெடுப்பதற்கான போராட்டத்தின் ஓர் அங்கமாக, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலினால் களமிறக்கப்படவுள்ள பொது சுயேச்சை குழுவுக்கு, தான் ஆதரவு வழங்க தீர்மானித்திருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் இப்பிரதேசத்தில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட மாட்டார்கள் எனவும், அக்கட்சியின் பிரதித் தலைவரும், இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார். தனது இந்த நிலைப்பாடு தொடர்பாக, அவர் சாய்ந்தமருது…
மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் ஆதரவாளர்களுக்கான ஒன்றுகூடல்!
-முர்ஷிட் முஹம்மத்- எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் ஆதரவாளர்களுக்கான ஒன்றுகூடல், மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரத்துறை பொறுப்பாளரும், நிந்தவூர் பிரதேச அமைப்பாளருமான டாக்டர். பரீட் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் மக்கள் பணிமனையான, முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எம்.முஸ்தபாவின் இல்லத்தில் இன்று மாலை (18) நடைபெற்றது. இந்நிகழ்வில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் நிந்தவூர், வன்னியார் நகர வேட்பாளரும், பொறியியலாளருமான பாக்கீர் ஹூசைன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்…
கொழும்பு மாநகரசபையில் போட்டியிடுவதற்காக மேல்மாகாணசபை உறுப்பினர் பாயிஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறார்
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாணசபை உறுப்பினரும் அக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதம அமைப்பாளருமான மொஹமட் பாயிஸ் தனது மாகாணசபை உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக தெரிவித்தார் . உள்ளூராட்சி தேர்தலில் கொழும்பு மாநகரசபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமை வேட்பாளராக போட்டியிடும் நோக்கிலேயே தாம் இந்த முடிவை எடுத்தாக அவர் தெரிவித்தார். , அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கொழும்பு மாநகரசபையில் தனித்து, தனது மயில் சின்னத்தில்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பெப்ரவரி 10 நடைபெறும்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 10 ஆம் திகதி (2018) நடைபெறுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.
தேர்தல் தினம் 21 அறிவிக்கப்படும்!
மீதமிருக்கின்ற 248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்பு மனுக்களை கோரல், இன்று (18) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரையிலும் இடம்பெறும். இறுதித் தினமான 21 ஆம் திகதியன்றே, தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
