Main News
“தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்யும் கேவலமான அரசியல் கலாச்சாரத்துக்கு முடிவுகட்ட முன்வாருங்கள்” அம்பாரை முஸ்லிம்களுக்கு அமைச்சர் ரிஷாட் அழைப்பு!
-சுஐப் எம்.காசிம்- முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்க வந்த கட்சியானது, தலைகளை எண்ணி மொத்த வியாபாரம் செய்து, சமுதாயத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கும் துரதிஷ்ட நிலைக்கு, இந்தக் குட்டித் தேர்தலின் மூலம் முடிவு கட்ட முன்வாருங்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கூறினார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு மற்றும் தூய முஸ்லிம் காங்கிரஸ், சிவில் அமைப்புக்கள் இணைந்து உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில், அம்பாரை…
மக்கள் காங்கிரஸின் அம்பாரை மாவட்ட வேட்பாளர்களுடனான சந்திப்பில் அமைச்சர் ரிஷாட்!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு மற்றும் கொள்கை விளக்க நிகழ்வும் அம்பாரை மொன்டி ஹோட்டலில் இன்று (01) இடம்பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்றூப், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி மற்றும் மக்கள்…
மு.கா வின் ஆரம்பகாலப் போராளி மக்கள் காங்கிரஸில் இணைவு!
-ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளியும், முன்னாள் நகரசபை வேட்பாளருமான ஏ.ஜி.எம்.ஜபருள்ளாஹ் (நாசர்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸுடன் இணைந்துகொண்ட அவர் கூறியதாவது, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சுமார் 25 வருடங்கள் இணைந்து செயற்பட்டுள்ளேன். மு.கா தலைவரினால் மக்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் நீரில் எழுதப்படும் பொய்யான வாக்குறுதிகளாகவே இருக்கின்றது. எனவே, தொடர்ந்தும் எம்மால் மக்களை ஏமாற்றி, எமது ஆதரவாளர்களின் வாக்குகளை மு.காவுக்கு வழங்கத் தயார் இல்லை என்றும் கூறினார்….
மக்கள் காங்கிரஸின் மடவளை காரியாலயம் திறப்பு நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முஸ்லிம் சமூகத்தின் இன்றைய குரலுமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இயங்கும் “அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்” எதிர்வரும் 2018 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிட களமிறங்கியுள்ளதை யாவரும் அறிவர். இந்நிலையில் கண்டி மாவட்டத்தின் மடவளை மடிகே, குன்னேபான மடிகே, பிஹில்ல தெனிய ஆகிய பகுதிகளில் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரான அரசியல் அனுபவசாலியும், சமூக சேவகருமான…
மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பில் பிரதி அமைச்சர் அமீர் அலி!
-ஊடகப்பிரிவு- ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ் கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் மருதமுனை வேட்பாளர்களுடனான சந்திப்பொன்று இன்று (30) இடம்பெற்றது. மருதமுனை அல்ஹாஜ் நெய்னா முஹம்மத் (JP) அவர்களின் காரியாலயத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்த்துரையாடலில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மருதமுனை மத்திய குழுத் தலைவர் கலீல் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்களும் பங்கேற்றிருந்தனர்.
மன்னார் புதிய ஆயருக்கு அமைச்சர் ரிஷாட் வாழ்த்து தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தின் புதிய ஆயராக கலாநிதி, மரியாதைக்குரிய பிடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்ணாண்டோ அவர்கள் கடமையேற்கும் நிகழ்வு, மன்னார் சென் செபஸ்தியன் ஆலயத்தில் இன்று (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன, புதிய ஆயருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
திக்கும்புர லங்கா சதொச அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் சந்திம வீரக்கொடி, அமைச்சர் ரிஷாட்டுக்கு நன்றி தெரிவிப்பு!
-ஊடகப்பிரிவு- எனது வேண்டுகோளை உடன் ஏற்று, திக்கும்புர மக்களுக்காக லங்கா சதொச கிளையை அமைத்துத் தந்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். காலி மாவட்டத்தின் திக்கும்புர பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வில் (29) பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் சந்திம வீரக்கொடி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, எனது தொகுதியான திக்கும்புர…
அம்பதென்ன லங்கா சதொச திறப்பு நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- கண்டி மாவட்டத்தின் அம்பதென்ன பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை இன்று காலை (29) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க இடம்பெற்ற இந்நிகழ்வில், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, லங்கா சதொச கிளையை திறந்து வைத்தார். அத்துடன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட இணைப்பாளரும், லக்ஸல நிறுவனத்தின் பணிப்பாளருமான ரியாஸ் இஸ்ஸதீன்,…
எலபடகம லங்கா சதொச கிளை அங்குரார்ப்பண நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- குருநாகல், எலபடகமையில் புதிதாக அமைந்துள்ள லங்கா சதொச நிறுவனத்தின் கிளை இன்று (29) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க, மாகாணசபை உறுப்பினர் அஸங்க பெரேரா, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலவி, சதொச நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் எரங்க ஏக்கநாயக்க மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. …
பிரதி அமைச்சர் அமீர் அலியின் வாழ்த்து செய்தி!
முர்ஷித் கல்குடா இன்று வெளியாகியுள்ள க.பொ.த.உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்றுள்ள மற்றும் தகுதி பெறாதா மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவ மாணவியர்களை பாராட்டுவதுடன், அவர்களை கற்பித்த ஆசான்கள் அவர்களுக்கு கல்வி கற்பதில் ஒத்தாசையாக இருந்த பெற்றோர்கள் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் எனது மனமார்ந்த…
வில்பத்துக் காடுகளை அமைச்சர் ரிஷாட் அழித்ததாக பொய்ப்பிரச்சாரம். மீள் குடியேறிய மக்களை விரட்டியடிக்க இனவாதிகள் திட்டம்: வடக்கு முஸ்லிம் கூட்டமைப்பு கண்டனம்!
கணக்காளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பாக வடக்கு முஸ்லிம்கள் அமைப்பு கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வில்பத்து வனத்தை முஸ்லிம்களும் அமைச்சர் றிஷாட்டும் அழித்து வருவதாக இனவாதிகளினால் பல வருடங்களாக முன்னெடுத்துவரும் பொய்ப்பிரச்சாரங்களை மீண்டும் ஆரம்பித்துள்ளனர். 3 தசாப்தங்களுக்கு மேலாக அகதி என்ற முத்திரையோடு தமது இருப்பிடத்தை இழந்து ஓலைக்குடிசையில் வெயிலிலும், மழையிலும் பல சொல்லொனாத்துயரங்களோடு வாழ்ந்த மக்கள் யுத்தத்தின் பின்னர் மீண்டும் தமது சொந்த பிரதேசங்களுக்கு மீள்குடியேறப் புறப்பட்ட காலம் முதல் அவர்களுக்கு எதிரான இனவாதிகளினதும்…
இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் புதிய உயரதிகாரிகளின் கடமை பொறுப்பேற்றல் நிகழ்வு!
-ஊடகப்பிரிவு- கைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான இலங்கை கனிய மணல் நிறுவனத்தின் புதிய தலைவர் திருமதி. இந்திக்கா ரணதுங்க(LLB), முகாமைத்துவப் பணிப்பாளர் றுஷ்தி ஹபீப்(LLB), நிறைவேற்று அதிகாரி தேஷபந்து அப்துல் றஷாக்(நழிமி) ஆகியோர் இன்று (28) தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதுடன், நிறுவனத்தின் அதிகாரிகளுகளுடனான தமது முதலாவது கலந்துரையாடலையும் மேற்கொண்டனர்.
