Headlines

மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் ஆதரவாளர்களுக்கான ஒன்றுகூடல்!





-முர்ஷிட் முஹம்மத்-

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் ஆதரவாளர்களுக்கான ஒன்றுகூடல், மக்கள் காங்கிரஸின் தேசிய சுகாதாரத்துறை பொறுப்பாளரும், நிந்தவூர் பிரதேச அமைப்பாளருமான டாக்டர். பரீட் தலைமையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிந்தவூர் மக்கள் பணிமனையான, முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எம்.முஸ்தபாவின் இல்லத்தில் இன்று மாலை (18)  நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் நிந்தவூர், வன்னியார் நகர வேட்பாளரும், பொறியியலாளருமான பாக்கீர் ஹூசைன், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஸ்வர் (JP) உள்ளடங்கலாக, பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சமகால அரசியல் நிலவரங்கள், உள்ளூராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கான உபாயங்கள் மற்றும் கட்சியின் ஊர் மத்தியகுழுக் கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டன.

இந்நிகழ்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினரான பஸ்மீர் ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *