Headlines

‘உலக வர்த்தக அமைப்பின் செயற்பாடுகள் இலங்கைக்கு முக்கியமானது’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்-

-ஊடகப்பிரிவு- இலங்கை போன்ற சிறிய பொருளாதாரங்களுக்கு பல்துறை வர்த்தக முறைகள் மீதான, உலக வர்த்தக அமைப்பின் தலைமையிலான விதிகள் அதன் உறுப்பினர்கள் மத்தியில் ஒரு நிலையான மட்டத்தை செயற்படுத்துவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது செய்தியில் தெரிவித்திருந்தார். கடந்த டிசம்பர் 10 ஆம்  திகதி முதல் 13 ஆம் திகதி வரை,  ஆர்ஜென்டினா ப்யூனோஸ் ஏர்ஸில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 11 ஆவது உலக…

Read More

‘மு.கா. தலைவர் சோரம் போய் கிடப்பதை, மௌனியாக பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை’ சட்டத்தரணி அன்சில்!

-ஊடகப்பிரிவு- முஸ்லிம் சமூகத்தின் காவலுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை, முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை எதிரிகளிடம் அடகு வைத்தபோது, வாய்மூடி மௌனியாக இருக்க – தன்னால் முடியவில்லை என்று, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட முன்னாள் உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில் தெரிவித்துள்ளார். அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் பாலமுனை வட்டாரத்தில், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பாக மயில் சின்னத்தில் அன்சில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில், அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே…

Read More

“கல்முனை மாநகரம் இம்முறை மக்கள் காங்கிரஸ் வசம். மக்கள் மீது பூரண நம்பிக்கை உண்டு” ஜவாத்!

-ஊடகப்பிரிவு- பல்லாண்டு காலமாக வினை திறன் அற்றவர்களிடம் சிக்கி சீரழிந்து வீழ்ச்சி அடைந்திருக்கும் கல்முனை மாநகரத்தை, வினை திறன் உள்ளவர்களின் கைகளில் கொடுத்து அழகுற பார்க்க வேண்டும் என்று ஆதங்கப்பட்டு கொண்டிருக்கும் மக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்களித்து, கல்முனை மாநகரத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் மனம் உவந்து தருவார்கள் என்று கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஜவாத் தெரிவித்தார். இவர் கடந்த வாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து…

Read More

‘யாழ் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ் தலைமைகள் முன்வர வேண்டும்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

  -ஊடகப்பிரிவு- 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா கடந்த சனிக்கிழமை (23) யாழ் உஸ்மானியாக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக  சபாநாயகர் கரு ஜயசூரிய கலந்துகொண்டார். இங்கு உரையாற்றிய அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியதாவது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை கொண்டாடுங்கள் என்று எங்கும் சொல்லவில்லை. முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மிகவும் எளிமையாக வாழ்ந்து காட்டியிருக்கின்றார்கள் என்றும், எல்லோருக்கும் முன்மாதிரியாகவும் அருட்கொடையாகவும் அல்லாஹ் நபிகளாரை அனுப்பி மாக்களாக…

Read More

அம்பன்பொல லங்கா சதொச திறப்பு விழா!

-ஊடகப்பிரிவு-  குருநாகல் அம்பன்பொல பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட லங்கா சதொச கிளை இன்று (24) திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வேண்டுகோளுக்கிணங்க,  முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நசீர் மற்றும் சதொச நிறுவனத்தின் உயரதிகாரிகள் பலரின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.        

Read More

தேசிய மீலாத் விழா நிகழ்வு 2017!

-ஊடகப்பிரிவு- 2017ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று (23) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், கல்விமான்கள் என…

Read More

குருநாகல் மாவட்ட மு.கா முக்கியஸ்தர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

  -ஊடகப்பிரிவு- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், மத்திய குழு உறுப்பினரும், முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளியுமான இக்பால் ஷெரீப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகரசபை தலைமை வேட்பாளரும்,  குருநாகல் மாவட்ட இளைஞர் இணைப்பாளருமான அசார்தீன் மொய்னுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்ட அவர் கூறியதாவது, மறைந்த பெருந்தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பின்னர், இன்றைய காலகட்டத்தில், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய சேவைத் தலைவனாவும்,…

Read More

ஐ.நா வாக்கெடுப்பில் பலஸ்தீனுக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கை அரசுக்கு அமைச்சர் ரிஷாட் நன்றி தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- பலஸ்தீன மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனத்தை ஆதரித்து அமெரிக்காவுக்கு எதிராக, இலங்கை வாக்களித்திருந்ததை வரவேற்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிழக்கு ஜெருசலத்தை, பலஸ்தீன் நாட்டின் தலைநகராக ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி, இன்று (22) கொழும்பு நகர மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது, ஜெருசலத்தை இஸ்ரேலின் தலைநகராக, அமெரிக்கா கடந்த 5 ஆம் திகதி வெளியிட்ட…

Read More

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைப்பு..சதொச உட்பட ஏனைய சுப்பர் மார்க்கட்களிலும் ஒரே விலையில்.. அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

– ஊடகப்பிரிவு- கூடுதலாக கோரிக்கையுள்ள நாட்டரிசி பல விலைகளில் விற்பனை செய்யப்படுவதனால், அதனை கட்டுப்பாட்டு விலைக்கு கொண்டு வர வேண்டுமென கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார். அண்மையில் நடாத்தப்பட்ட வாழ்க்கைச் செலவு குழு கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, உள்நாட்டில் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோவின் ஆகக்கூடிய விலை ரூபா.74 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது லங்கா சதொசவில் ஒரு கிலோ நாட்டரிசி ரூபா. 70 க்கு விற்பனை…

Read More

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் போட்டியிடும் மாவட்டங்களும், விபரங்களும்!

-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள 06 மாவட்டங்களில் தனித்தும், 07 மாவட்டங்களில் ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தும் போட்டியிடுகின்றது. வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அநுராதபுரம், புத்தளம், கொழும்பு ஆகிய மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை…

Read More

“இலங்கையின் கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்” அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- “நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை கைத்தறித்துறை ஒரு பின்னடைவை எதிர்கொண்டதுடன் வீழ்ச்சியை சந்தித்தது. இருப்பினும், பல அரசு முயற்சியாளர்கள் வெற்றிகரமாக இந்த துறைகளை புதுப்பித்துள்ளன. இன்று, பல இலங்கை கைத்தறி தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் சம்பாதித்து வருகின்றனர். இலங்கையின் கைத்தறித் துறையை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவும் முன்னெடுத்து வருகின்றனர்.  எனது அமைச்சும் இந்த துறையை ஊக்குவிப்பதற்காகவும், கைத்தறி தயாரிப்பாளர்களுக்கு ஆதரவளிக்கவும்…

Read More

13 மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்புமனு தாக்கல்!

-ஊடகப்பிரிவு- வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம், கொழும்பு ஆகிய 07 மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து யானை சின்னத்திலும், அம்பாறை, குருநாகல், கம்பஹா,  களுத்துறை, திருகோணமலை, கண்டி ஆகிய 06 மாவட்டங்களில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில் தனித்துப் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை அந்தந்த மாவட்ட செயலகங்களில் இன்று (21) தாக்கல் செய்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் ஐக்கிய தேசிய…

Read More