Main News
ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் களமிறங்க இளைஞர்கள் முண்டியடிப்பு! சிராஸின் அணுகுமுறைக்கு வரவேற்பு…
ஏ.எச்.எம். பூமுதீன் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வில் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அம்பாறை மாவட்டம் வழமை போன்று சூடுபிடித்துள்ளது. கட்சியால் அதிகாரமளிக்கப்பட்டோர் தத்தமது கட்சி வேட்பாளர் தெரிவை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடன், மு.கா முன்னாள் செயலாளர் நாயகம் ஹஸனலி தேர்தல் கூட்டு வைத்து “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” எனும் பெயரில் அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மற்றும் தமிழ் பிரதேச உள்ளுராட்சி சபைகளில் கூட்டமைப்பு போட்டியிடவுள்ளன….
“ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்” கொள்கைப் பிரகடனம்!!!
-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தருமான ஹசன் அலி, பஷீர் சேகுதாவூத் ஆகியோரின் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பும் இணைந்து, உருவாக்கியுள்ள “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின்” கொள்கைப் பிரகடனம் நேற்று (10/ 12/ 2017) கொழும்பு ரேணுகா ஹோட்டலில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் பிரஜைகளான சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் நலனுக்காகவும் ஐக்கியத்திற்காகவும் நாட்டில் ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தவும் உறுதிபூண்டு செயற்படுகின்ற றிசாட் பதியுதீன்…
“அம்பாரை விவசாயிகளின் பசளை தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும்” அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் அமைச்சர் துமிந்த உறுதி!!!
-ஊடகப்பிரிவு- அம்பாரை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பசளை தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கி, அந்தப் பிரதேச விவசாயிகளுக்கு போதியளவு பசளையை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார். விவசாயத்துக்கு தேவையான போதியளவு பசளையை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் துமிந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அம்பாரை மாவட்ட விவசாயிகளின் கமத்தொழில் நடவடிக்கைகளுக்கு தேவையான யூரியா பசளையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையினால், அந்தப் பிரதேச விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடியை…
முஸ்லிம் அரசியலில் புதிய திருப்பம்… அமைச்சர் ரிஷாட், ஹஸன் அலி இணைந்து ”ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” உருவாக்கம்!
சுஐப் எம்.காசிம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் முக்கியஸ்தர்களான பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோரின் தலைமையில் “தூய முஸ்லிம் காங்கிரஸ்”எனும் அணியாக இது கால வரை இயங்கி பின்னர், “ஐக்கிய சாமாதானக் கூட்டமைப்பு”எனும் பெயரில் உருவாக்கப்பட்ட கட்சியும் இணைந்து, “ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு” என்ற பெயரில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கியுள்ளனர். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு முக்கியஸ்தர்கள் இன்று காலை (10)…
வரவு செலவுத் திட்டம் 2018 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தில் இன்று (09) நிறைவேற்றப்பட்டது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ள அதேவேளை, எதிராக 56 வாக்குகள் மாத்திரமே கிடைக்கப்பட்டுள்ளது.
மு.கா முக்கியஸ்தர், முன்னாள் தவிசாளர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைவு!
ஓட்டாமாவடி முன்னாள் பிரதேசசபைத் தவிசாளரும், முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தருமான ஏ.பி.எஸ். ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முன்னிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கை இழந்ததனாலேயே, தாம் அக்கட்சியிலிருந்து வெளியேறியதாக தெரிவித்த ஹமீட், தாம் மரணிக்கும் வரை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான மக்கள் காங்கிரஸின் தவிசாளர் அமீர் அலியுடன் இணைந்து பயணிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
”சில்ப சவிய” 2017..
சுய தொழில் முயற்சியாளர்களுக்கான ”சில்ப சவிய” கண்காட்சியின் இறுதி நிகழ்வினை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் (08) அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் மக்கள் காங்கிரஸின் பிரமுகர்கள், உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்…
உள்ளூரட்சித் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நாடளாவிய சபைகளில் தனித்துப் போட்டியிடுவதா? அல்லது இணைந்து போட்டியிடுவதா? என்பது தொடர்பான கலந்துரையாடல் கட்சித் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்று மாலை (08/ 12/ 2017) இடம்பெற்றது. நாட்டின் பல பாகங்களிலுமுள்ள கட்சியின் முக்கியஸ்தர்கள், அமைப்பாளர்கள், தேர்தலில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் கிளை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்தனர். தனித்துப் போட்டியிடுவதால் ஏற்படும் சாதக பாதகங்கள்…
முன்னாள் எம்.பி முஹம்மட் நௌஷாட் மக்கள் காங்கிரஸில் இணைவு!
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் எம் பியும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான அப்துல் மஜீத் முஹம்மட் நௌஷாட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் முன்னிலையில், மக்கள் காங்கிரஸில் இன்று (08) இணைந்து கொண்டார். இவர் சம்மாந்துறை நகரசபையின் தலைமை வேட்பாளராக இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாவட்ட கலை, பண்பாட்டுப் பெருவிழா!
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையில், வவுனியா மாவட்ட பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலை, பண்பாட்டுப் பெருவிழா-2017 நிகழ்வு வவுனியா, நகரசபை கலாச்சார மண்டபத்தில் அண்மையில் (04) நடைபெற்றது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரதிநிதியாக அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்….
அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியில், புத்தளம் தளவைத்தியசாலைக்கு 18 வைத்தியர்கள் நியமனம்!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன ஆகியோரின் உதவியினால் பல மில்லியன் ரூபாய்கள் பெறுமதியான அபிவிருத்திகளை புத்தளம் தள வைத்தியசாலைக்கு வழங்குவதற்க்கான திட்ட வரைவு செயற்பாடுகள் தற்போது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அந்த வகையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும், பிரதித் தலைவருமான எம்.எச்.எம். நவவியின் அழைப்பின் பேரில், புத்தளம் தள வைத்தியசாலைக்கான திட்ட வரைவு வேலைகளை முன்னெடுக்கும், CECB நிறுவனத்தின்…
மாஞ்சோலை பதுரியா அல்/மினா வித்தியாலய கட்டிடத்திறப்பு நிகழ்வும்.. பரிசளிப்பு விழாவும்!
மட்டக்களப்பு மாவட்ட மத்திய கல்வி வலையத்துக்குட்பட்ட ஓட்டமாவடி – மீராவோடை பதுரியா நகர் அல் / மினா வித்தியாலயத்தின் 07 வது பரிசளிப்பு விழா மற்றும் புதிய மாடிக் கட்டிடத் திறப்பு நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார பிரதி அமைச்சருமான அமீர் அலி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். அதிபர் எல்.ரீ.எம். சாதிக்கீன் தலைமையில் அண்மையில் (04) இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக முன்னாள் பிரதி தவிசாளர் நெளபல், முன்னாள் பிரதிக் கல்விப்…
