Headlines

தேசிய மீலாத் விழா நிகழ்வு 2017!





-ஊடகப்பிரிவு-

2017ஆம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று (23) யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சபாநாயகர் கரு ஜெயசூரிய, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.எம் ஹலீம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், கல்விமான்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்

இதன்போது, சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் அமைச்சர் எம்.எச்.எம். ஹலீம் ஆகியோரின் தலைமையில், தேசிய மீலாத் விழாவின் ஞாபகார்த்தமாக நினைவு முத்திரை ஒன்றும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது.

ரூபா 15 பெறுமதியான இம்முத்திரையில், யாழ்ப்பாணம் முகமதியா ஜும்ஆ பள்ளிவாசலின் முகத்தோற்றம் (புதுப்பள்ளி) அச்சிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *