Main News
நமது சமூகத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அக்கிரமங்களை தடுக்க, அனைவரும் மக்கள் காங்கிரஸின் கீழ் இணைய வேண்டும்” டாக்டர்.ஹஸ்மியா!
-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிருக்கான கூட்டங்கள் குருநாகல், குளியாப்பிட்டிய பிரதேசத்திசத்தின் பல்வேறு இடங்களில் மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசியத் தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை ஊடாக, அப்பிரதேச வேட்பாளர்கள் மற்றும் குருநாகல் மாவட்ட மக்கள் காங்கிரஸின் அமைப்பாளரின் ஒத்துழைப்போடு இடம்பெற்றது. இந்தக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய டாக்டர். ஹஸ்மியா கூறியதாவது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்துக்கு வாக்களிப்பதனூடாக நமது சமூகத்துக்காக குரல் கொடுக்கும், ஒட்டு மொத்த முஸ்லிம்களின் ஒரே தலைவரும், அமைச்சருமான…
மு.கா வின் மூத்த போராளிகள் மக்கள் காங்கிரஸில் இணைவு!
-ஊடகப்பிரிவு- மூதூர் பிரதேச சபைத் தேர்தலில், நெய்தல் நகர் வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மூதூரில் இடம்பெற்ற (03) தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த போராளிகள் சுமார் 20 பேர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்தக் குரலாக மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திகழ்வதாலும், மூதூர்…
‘கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனியான பிரதேச சபைகளை அமைத்துத் தாருங்கள்’ அமீர் அலி எம்.பி பிரதமரிடம் கோரிக்கை!
-முர்ஷித் கல்குடா- கோறளைப்பற்று மத்தி மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவுகளுக்கு தனித் தனியான பிரதேச சபைகளை அமைத்து தருமாறு மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வேட்பாளர் எம்.எப்.எம்.ஜஃபர் தலைமையில் வாழைச்சேனையில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க…
“வாழவைத்த புத்தளம் மண்ணை நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை” புத்தளம் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!
-சுஐப் எம்.காசிம் – அகதிகளாக ஓடோடி வந்து தஞ்சமடைந்த வடக்கு முஸ்லிம்களை வாழ வைத்த புத்தளம் மண்ணையும், அந்த மக்களையும் நாங்கள் ஒருபோதும் ஆள வரவில்லை என்றும், இந்த பிரதேசத்தை வளங்கொழிக்கும் பூமியாக மாற்ற அத்தனை நடவடிக்கைகளையும், உதவிகளையும் மேற்கொள்வோம் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளம் நகரசபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று மாலை…
‘கிழக்கு மாகாணத்தில் மு.கா வின் சாம்ராஜ்ஜியம் சரிந்து காணப்படுகின்றது’ பிரதி அமைச்சர் அமீர் அலி!
-முர்ஷித் கல்குடா- தம்பாளை பிரதேசத்திற்கு கடமைப்பட்ட ரவூப் ஹக்கீம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இருந்து கொண்டு, குடிநீரை வழங்காமல் இன்னும் பத்து வருடத்திற்கு இழுத்தடிப்பு செய்து கொண்டிருப்பார். தம்பாளையை சிங்கப்பூராக்குவேன் என்று சொல்லுவார், சில முஸ்லிம் பகுதிகளுக்கு செல்வதற்கு கடவுச் சீட்டு எடுத்துச் செல்ல வேண்டுமா என்ற பயம் வருகின்றது கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாம்ராஜ்ஜியம் சரிந்து காணப்படுகின்ற சங்கதி உங்களுக்கு தெரியுமா? இவர்களோடு பல வருடங்களாக இருந்தவர்கள்…
அரச தொழில் வழங்குவதற்கு மு.கா வினர், பொதுமக்களிடம் பணம் பெறவில்லை என்று கூறமுடியுமா? அன்சில் கேள்வி!
– றிசாத் ஏ காதர் – முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அதிகாரம் பெற்றவர்கள், அரச தொழில்வழங்குவதற்காக, பொதுமக்களிடம் பணம் பெறவில்லை என்றுகூறமுடியுமா? என அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள்தவிசாளரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தலில் ஐக்கியமக்கள் கூட்டமைப்பு சார்பாக போட்டியிடும் தலைமை வேட்பாளருமானசட்டத்தரணி எம்.ஏ. அன்சில் கேள்வியெழுப்பினார். பாலமுனையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார். அங்கு சட்டத்தரணி அன்சில் மேலும் கூறுகையில், முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்களை மக்களுக்கு மத்தியில் விலைபேசி வியாபாரம் செய்தபோது, அதற்கெதிராக நாங்கள் பேசினோம். இவற்றையெல்லாம் செய்தவர்களை மேடைகளில் ஏற்றி, மாலையணிவிக்கின்ற வேலையை செய்கின்றவர்களாக உலமாக்கள் இன்று மாறியிருக்கின்றார்கள். நீங்கள் யாருக்கு வாக்களிக்களிக்கிறீர்கள் என்பதனை தெரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் என்பது அஷ்ரபுடைய கட்சியாக இருந்தால், இந்தக் கட்சியினுடைய அதிகாரங்களை கொண்டு பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டிருக்கக் கூடாது. அஷ்ரபுடைய காலத்தில் அதிகாரங்களினூடாக கிடைக்கப்பெற்ற வரப்பிரசாதங்கள் எப்படி மக்களின் காலடிக்கு கொண்டு செல்லப்பட்டதோ அப்படி கொண்டு செல்லப்பட்டிருக்கவேண்டும். …
‘புத்தளத்தில் உள்ளூர் முஸ்லிம்களையும், அகதி முஸ்லிம்களையும் மோதவிட்டு வாக்குகளைச் சூறையாட மு.கா முயற்சி’ அமைச்சர் ரிஷாட் குற்றச்சாட்டு!
-ஊடகப்பிரிவு- புத்தளத்தில் இடம்பெயர்ந்து வாழும் அகதி முஸ்லிம்களையும், உள்ளூர் மக்களையும் மோதவிட்டு, அதன்மூலம் வாக்குகளைச் சுவீகரித்து இழந்த செல்வாக்கையும், அரசியல் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, சதி வேலைகளில் மரக்கட்சிக்காரர்கள் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும், இவ்விரண்டு சாராரும் இதற்குப் பலியாகிவிடக் கூடாது என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். புத்தளத்தில், ஹுசைனியாபுரம் (உளுக்காப்பள்ளம்), ஹிதாயத் நகர் (கரிக்கட்டை), நான்காம் கட்டை, தில்லையடி சதாமியாபுரம், கரம்பை, ரத்மல்யாய ஆகிய இடங்களில், மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ளூராட்சி சபைத்…
‘அமைச்சர் ரிஷாத்துக்கு ஆணை வழங்குவதன் மூலமே மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னெடுக்க முடியும்’ சேகு இஸ்ஸதீன்!
-ஊடகப்பிரிவு- அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயற்படுவதனால்தான் இறைவன் அவருக்கு கிழக்கு மாகாண மக்களையும் காப்பாற்றக் கூடிய சக்திளை வழங்கியுள்ளான் என முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அக்கறைப்பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து பட்டியடிப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றுகையில், வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்…
‘வாழைச்சேனை பிரதேச சபைக்கு முஸ்லிம்கள் ஏழு ஆசனம் பெற்றால் யாரும் தனியான ஆட்சி அமைக்க முடியாது’ பிரதி அமைச்சர் அமீர் அலி!
-முர்ஷிட் கல்குடா- வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட நான்கு முஸ்லிம் வட்டாரத்தின் மூலம் ஏழு உறுப்பினர்களை நாங்கள் பெறுவோமாக இருந்தால் யாரும் தனியாக ஆட்சி அமைக்க முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர். பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் செம்மண்ணோடை வேட்பாளர் எம்.எச்.எம்.ஹக்கீமை ஆதரித்து செம்மண்ணோடையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு…
வவுனியா மதவுவைத்தகுளத் தேர்தல் காரியாலயத் திறப்பு விழா மற்றும் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!
-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா கந்தபுரம் இரட்டை வட்டாரத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுகின்ற வரதராஜ் துரைராஜ் மற்றும் வே. ஜீவராஜ் ஆகியோரை ஆதரித்து, மதவுவைத்தகுளத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தேர்தல் காரியாலயமும் திறந்து வைக்கப்பட்டது. வேட்பாளர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன், மக்கள் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான முத்து முஹம்மட், பாஸ்டர்…
‘முஸ்லிம்களின் இருப்பைக் கருத்திற்கொண்டு மு.கா இத்தேர்தலில் வாபஸ் வாங்கி விலகுவதே, இதுவரை காலமும் அக்கட்சி செய்த அநியாயங்களுக்கு பிராயச்சித்தமாகும்’ – முபாறக் அப்துல் மஜீத்!
-முபாறக் அப்துல் மஜீத்- கல்முனை உள்ளூராட்சி சபையை 94ம் ஆண்டு முதல் ஆட்சி செய்தும் இன்று வரை கல்முனையையும் நாசமாக்கி கல்முனை சாய்ந்தமருது பிரதேசங்களையும் பிரித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், கல்முனையின் எதிர் கால நன்மையையும், முஸ்லிம்களின் இருப்பையும் கருத்திற்கொண்டு இத்தேர்தலில் வாபஸ் வாங்கி புதிய முஸ்லிம் கட்சியொன்றுக்கு அனைத்து முஸ்லிம்களும் வாக்களிக்க வழி விடுவதே இது வரை காலமும் அக்கட்சி கல்முனைக்கு செய்த அநியாயங்களுக்கு பிரயச்சித்தமாகும். இன்றுள்ள நிலையில் கல்முனை மாநகர சபையை முஸ்லிம்…
‘முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆள்பவர்கள் சம்பந்தன், சுமந்திரன்’ கே.எம்.ஜவாத்!
-முர்ஷிட் கல்குடா- ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை ஆள்பவர்கள், தீர்மானிப்பவர்கள் நாங்கள் அல்ல. இதனை தீர்மானிப்பவர்கள் சம்பந்தனும், சுமந்திரனும் தான் என முன்னாள் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கே.எம்.ஜவாத் தெரிவித்தார். வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் போட்டியிடும் செம்மண்ணோடை வேட்பாளர் எம்.எச்.எம்.ஹக்கீமினை ஆதரித்து செம்மண்ணோடையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்….
