Headlines

‘முஸ்லிம்களின் உரிமைகளுக்கு குரல்கொடுக்காத முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும்’ அட்டாளைசேனையின் அன்ஸில்!

-ஊடகப்பிரிவு-  புதிய அரசியலைப்பில் ஒன்று இத்தேர்தலில் பின் வரப்போகின்றது. இதில் எவ்வாறான விடயங்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பது தொடர்பில் 06உபகுழுக்கள் உருவாக்கப்பட்டது அதில் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய இன்னும் பல மு.கா முக்கியஸ்தர்களும் இருந்தார்கள். இச்சீர்திருத்தம் தொடர்பில் 70க்கும் மேற்பட்ட கூட்டங்கள் இடம்பெற்றது எமது நாட்டின் அடிப்படை சட்டங்கள் மாறும் இவ் அரசியலைப்பு திருத்த சட்டத்தில் முஸ்லிம்களின் உரிமைகள் தொடர்பில் பேச இந்த முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த ஒரு நபரும் கலந்துகொள்ளவில்லை கலந்துகொண்டாலும் எதையும் இவர்கள் பேச மாட்டார்கள். என முன்னாள்…

Read More

‘அரச நெல் களஞ்சியத்தில் நிர்ணய விலையை வழங்குங்கள்’ பிரதி அமைச்சர் அமீர் அலி!

-முர்ஷிட் கல்குடா- மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிலையத்தில் நெல்லை வழங்கி, நியாயமான பணத்தினை பெற்றுக் கொள்ள முடியும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதியமைச்ச௫மான அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட நெல் கொள்வனவு செய்யும் நிகழ்வை வவுணதீவில் (29) ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 2017, 2018ம் ஆண்டுக்கான பெரும்போக நெல் அறுவடையை முன்னிட்டு அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு…

Read More

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

-ஊடகப்பிரிவு- 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், இன்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில் ௦7 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பணிப்புரைக்கமைய இந்த விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. பாவனையாளர்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார். மேலும் இந்த விஷேட விலைக்கழிவு இம்மாதம் 07ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்….

Read More

‘மன்னார் மாவட்ட அபிவிருத்தியில் அமைச்சர் ரிஷாட் திறம்படச் செயற்படுகின்றார்’ மன்னாரில் பிரதமர் புகழாரம்!

–ஊடகப்பிரிவு- நாட்டின் ஆட்சியை நாங்கள் வென்றெடுத்ததைப் போன்று, கிராமங்களின் ஆட்சியையும் கைப்பற்றுவதற்கு உதவுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார். மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார் பஸ்தரிப்பு நிலையத்தில் நேற்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், மாகாணசபை உறுப்பினர் அலிக்கான் சரீப், முன்னாள் மாகாணசபை…

Read More

மக்கள் காங்கிரஸ் மகளிர் அணியின் விழிப்பூட்டல் கருத்தரங்கு!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள்  காங்கிரஸின் மகளிரணியூடாக பெண்களுக்கான மருத்துவக்  கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வூட்டல் நிகழ்வு நீா்கொழும்பு சய்பா காடின் ஹொட்டலில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிரணி தேசிய தலைவி டாக்டர். ஹஸ்மியா உதுமாலெப்பை, நீா்கொழும்பு மகளிரணி மற்றும் நீா்கொழும்பு மாநகர சபைத்தோ்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.    

Read More

‘முஸ்லிம் சமூகத்தைப் பாதிக்கும் எந்தவொரு தீர்வுக்கும் ஒருபோதும் இடமளியோம்’ ஓட்டமாவடியில் பிரதமர் முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் சூளுரை!

-சுஐப் எம்.காசிம்- மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக்குவதற்கு முழுப்பங்களிப்பு நல்கிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், வலுவான உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்ட பின்னரே நாங்களும் நல்லாட்சிக்கு ஆதரவளித்து, புதிய அரசைக் கொண்டு வந்தோம். யுத்தத்தின் கோரப்பிடிக்குள் அகப்பட்டு, பல்வேறு துன்பங்களை அனுபவித்த சமூகங்களில், நாங்களும் உள்ளடங்குவோம். எனவே அரசாங்கம் கொண்டுவருகின்ற எந்தவொரு தீர்வும் எங்களை பாதிக்கவும் கூடாது, எங்கள் விருப்புக்கு மாற்றமாகவும் அமையக் கூடாது. அவ்வாறான தீர்வுக்கு நாங்கள் ஆதரவளிக்கமாட்டோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும், அவரது தலைமையிலான அரசியலமைப்பு…

Read More

பள்ளிக்குடியிருப்பு தமிழ் சகோதரர்கள் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- கனிய மணல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் அப்துல் றஸாக் நளீமி தலைமையில், பள்ளிக்குடியிருப்பு தமிழ் சகோதரர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டனர். இதண்போது, பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் பாரிய அபிவிருத்திப் பணிகள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது என்றுஅப்துல் றஸாக் நளீமி தெரிவித்தார்.    

Read More

வவுனியா ஹிஜ்ராபுரத்தில் வேட்பாளர்களை ஆதரித்த கூட்டம்!

–ஊடகப்பிரிவு- வவுனியா மாவட்டத்தின் சாளம்பைக்குளம், இரட்டை வட்டாரத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான கே.எம்.ரஹீம், என்.பி.ஜவாஹிர் ஆகியோரை ஆதரித்து, ஹிஜ்ராபுரத்தில் கூட்டமொன்று இடம்பெற்றது. ஹிஜ்ராபுரம், ஆசியன் ஜிப்ஸம் மோல்டிங் தொழிற்சாலையின் உரிமையாளர் மன்சூர் ஆப்தின் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் முத்து முஹம்மத், ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் நசார், அயல் வட்டார…

Read More

‘மரச்சின்னத்துக்கு அளிக்கும் வாக்குகள் கடலில் கொட்டப்படுவது போன்றதாகும்’ முல்லைத்தீவில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- பதினேழு வருடகாலமாக துன்பங்களிலும், துயரங்களிலும் பங்குபற்றாத, எந்தவிதமான அக்கறையும் கொள்ளாத மு.காவின் மரச் சின்னத்துக்கு அளிக்கப்படும் வாக்குகள், கடலில் கொட்டப்படுவது போன்றதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கரைதுரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து, முல்லைத்தீவில் நேற்று மாலை (30) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது,…

Read More

‘மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை!

-ஊடகப்பிரிவு- மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி அதிகாரங்களை எங்களிடம் ஒப்படைத்தால், அடுத்த நான்கு வருடங்களுக்குள்ளே, இந்த மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களையும், ஊர்களையும் மீளக்கட்டியெழுப்புவோம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மன்னார் மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளிலே ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இன்று (31) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் மேலும்…

Read More

மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மகளிர் அணியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் எதிர்வரும் 31, 01, 02, 03, 04 ஆம் திகதிகளில் அம்பாறை, குருநாகல், திருகோணமலை ஆகிய  இடங்களில் இடம்பெறவுள்ளதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய மகளிர் அணித் தலைவி டாக்டர்.ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார். அந்தவகையில், 31/01/2018 ஆம் திகதி புதன்கிழமை அம்பாறை மாவட்டத்தின்   அக்கரைப்பற்று காலை 8.30 மணி நிந்தவூர் காலை 10.30 மணி சம்மாந்துறை பி.ப 2.00 மணி…

Read More

அரசியலில் மாற்றத்தை விரும்பும் கண்டி மாவட்ட முஸ்லிம்கள்!

-ஊடகப்பிரிவு-   கண்டி மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள், தமது அரசியல் செயற்பாடுகளில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளமையை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு, அவர்கள் வழங்கிய அன்பும் ஆதரவும் வெளிப்படுத்துகின்றது. கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளான ஹாரிஸ்பத்துவ பிரதேச சபை, அக்குரணை பிரதேச சபை, பாத்ததும்பர பிரதேச சபை, உடபலாத்த பிரதேச சபை, உடுநுவர பிரதேச சபை, யட்டிநுவர பிரதேச சபை, பாத்தஹேவாஹெட்ட பிரதேச சபை கம்பளை நகரசபை ஆகியவற்றில், தனித்துக்…

Read More