Headlines

‘அமைச்சர் ரிஷாத்துக்கு ஆணை வழங்குவதன் மூலமே மக்கள் சார்ந்த பிரச்சினைகளை முன்னெடுக்க முடியும்’ சேகு இஸ்ஸதீன்!





-ஊடகப்பிரிவு-

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயற்படுவதனால்தான் இறைவன் அவருக்கு கிழக்கு மாகாண மக்களையும் காப்பாற்றக் கூடிய சக்திளை வழங்கியுள்ளான் என முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அக்கறைப்பற்று பிரதேச சபைக்காக போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து பட்டியடிப்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றுகையில், வட மாகாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் விரட்டப்பட்ட போது அவர்களுள் ஒருவராகச் சென்ற அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அம்மக்களோடு ஒன்றைக் கலந்து அந்த மக்களுக்காக குரல் கொடுத்து வந்தார். மக்கள் நலன் சார் விடயங்களுக்காக அவர் குரல் கொடுத்து வந்தார். மக்கள் நலன் சார் விடயங்களுக்காக அவர் குரல் கொடுத்து செயற்படுவதனால் அவரை இறைவன் உயர் அந்தஸ்துக்கு இட்டுச் சென்றான்.
வட மாகாணத்தில் பூர்வீகம் தொட்டு தமது நிலங்களில் ஒற்றுமையாக வாழ்ந்த மக்கள் நாட்டின் 17 மாவட்டங்களில் சிதறி வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு அல்லல்பட்டு வாழ்ந்து வரும் மக்களை மீளவும் வட மாகாணத்தில் குடியமர்த்துவதற்காக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குரல்கொடுத்து வருகிறார்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கள நிலைவரத்தினை எடுத்து நோக்குகின்ற போது கிழக்கு மாகாணம் முழுவதும் மயிலின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலும் உள்ள கணிசமான சபைகளை மயில் கட்சி கைப்பற்றுவதற்கான சாத்தியங்களே அதிகம் உள்ளன.

குறுகிய காலத்தினுள் அதிகளவான செல்வாக்கினைக் கொண்ட கட்சியாக பரிணாமம் பெற்றுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கட்சிக்கு மக்கள் தமது ஆணையை மேலும் வழங்க வேண்டும். அப்போது தான் நமது மக்கள் சார்ந்த விடயங்களை அவரால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *