Headlines

‘ஏமாற்றப்பட்டு வரும் சமூகத்துக்கு கைகொடுத்து உதவுவதற்காகவே களத்தில் இறங்கியுள்ளோம்’ கண்டியில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

-சுஐப் எம்.காசிம்- வடக்கு, கிழக்கை மையாமகக் கொண்டு அரசியல் செய்து வந்த மக்கள் காங்கிரஸ், இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் அதற்கு வெளியே போட்டியிடுவது தமது கட்சியை வலுப்படுத்துவதற்காகவோ அல்லது அதிகாரங்களை பலப்படுத்துவதற்காகவோ அல்ல என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கண்டியில் இன்று (28) பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்…

Read More

‘அபிவிருத்திப் பணிகளை மக்களின் காலடிக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்போம்’ குருநாகலில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

-ஊடகப்பிரிவு- குருநாகல் மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உள்ளடங்கிய, கட்சியின் முக்கியஸ்தர்கள் நேற்று (27) சனிக்கிழமை முழுநாள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டனர். குருநாகல் மாவட்டத்தின் குருநாகல் மாநகர சபை, குளியாப்பிட்டிய பிரதேச சபை, ரிதீகம பிரதேச சபை, நாரம்மல பிரதேச சபை, பொல்கஹவெல பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி சபைகளில் மக்கள் காங்கிரஸ், தனது மயில் சின்னத்தில்…

Read More

‘வன்னி சிறுபான்மை முஸ்லிம்களை பின்பற்றி மக்கள் பிரதிநிதித்துவத்தை உருவாக்குங்கள்’ நாரம்மலயில் அமைச்சர் ரிஷாட்!

-ஊடகப்பிரிவு- வன்னி மாவட்டத்தில் ஜீவமரணப் போராட்டம் நடாத்தி வரும் சிறுபான்மை முஸ்லிம்கள் ஐக்கியத்துடன் செயற்படுவதனாலேயே மக்கள் பிரதிநிதிதுவங்களை இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர் என்றும், குருநாகல் மாவட்ட முஸ்லிம்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் எதிர்காலத்தில் பிரதிநிதித்துவங்களை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நாரம்மல பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களான பைசர் மற்றும் மபாஸ் ஆகியோரை ஆதரித்து, நாரம்மல, பொல்கஹயாயவில் இன்று (27)…

Read More

மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு அமைச்சர் ரிஷாட் கண்டனம்!

-ஊடகப்பிரிவு- காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமை ஒரு மிலேச்சத்தனமான செயலென்றும், இந்த நாசகார செயலில் ஈடுபட்டோரைக் கைது செய்ய உடன் நடவடிக்கை எடுக்குமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளரும், ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜவ்பர் கானின் கட்சிக் காரியாலயம் இன்று அதிகாலை (27) தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்தே, அமைச்சர் இவ்வாறான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளர். இந்தச்…

Read More

அட்டாளைச்சேனை மக்களை ஏமாற்றும் ஹக்கீமின் யுக்தி.. நசீர் நியமனம் குறித்து அ.இ.ம.கா!

-ஊடகப்பிரிவு- அகில இலங்கை மக்கள் காங்கிரஸு க்கு கிழக்கில் அதிகரித்து வரும் மக்கள் அலை காரணமாகவே, அட்டாளைச்சேனைக்கு எம்.பி. பதவியை கொடுக்க வேண்டிய கட்டாய நிலை  மு.கா தலைவர்  ஹக்கீமுக்கு ஏற்பட்டது. இதற்காகவேண்டி அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கும் அதன் தலைவர் ரிஷாத் பதியுதீனுக்கும் அட்டாளைச்சேனை மக்கள் நன்றி கூறவேண்டுமென கட்சி விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உள்ளுராட்சி தேர்தல் பிரசாரம் சூடுப்பிடித்து வரும் நிலையில் மு.கா.வின் கோட்டைகளில் அகில இலங்கை மக்கள்…

Read More

குருநாகல் மாவட்டத்தில் மக்கள் காங்கிரஸின் மாபெரும் பொதுக்கூட்டம்!

-ஊடகப்பிரிவு- எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பல்வேறு பிரதேசங்களில் நாளை (27/ 01/ 2018) தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. இந்தக் கூட்டங்களில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன்  மற்றும் விஷேட அதிதியாக முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், சதொச நிறுவனத்தின் பிரதித் தலைவருமான எம்.என்.நஸீர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அந்தவகையில், நாரம்மல, பொல்கஹயாய காலை 10.00…

Read More

‘தமிழர்களையும், முஸ்லிம்களையும் மோதச் செய்யும் இனவாதிகளின் திட்டத்துக்கு பலிக்கடாவாகாதீர்கள்’ மாந்தையில் அமைச்சர் ரிஷாட் உருக்கமான கோரிக்கை!

  -ஊடகப்பிரிவு- தமிழர்களையும், முஸ்லிம்களையும் முட்டிமோதச் செய்து, பிரச்சினைகளை உருவாக்குவதற்காக இனவாதிகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளுக்கு இரண்டு சமூகமும் சோரம்போய்விடக் கூடாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். மாந்தை மேற்கு பிரதேச சபையில் சொர்ணபுரி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, வடமாகாண மஜ்லிஸுஸ் ஷூரா தலைவர் மௌலவி அஷ்ரப் முபாரக் (ரஷாதி) தலைமையில், சொர்ணபுரியில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்….

Read More

மு.கா ஒலுவில் அமைப்பளர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

-ஊடகப்பிரிவு- ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகாலப் போராளியும், ஒலுவில் அமைப்பாளராகவும் செயற்பட்ட அலியார் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார். மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவர் ஜெமீல் முன்னிலையில் இணைந்துகொண்ட அவர், இந்தத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வெற்றிக்காக உழைப்பதாகவும், மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.

Read More

‘கல்முனை மாநகரசபை தேர்தல் முடிவுகள் முஸ்லிம் அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்’ வேட்பாளர் ஏ.எம்.றியாஸ்!

-ஊடகப்பிரிவு-  கல்முனை மாநகர சபைக்கான தேர்தலின் முடிவுகளில் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முடிவை எடுக்கும் பொறுப்பு உங்கள் கைகளில் திணிக்கப்பட்டுள்ளது என்று வேட்பாளர் ஏ.எம்.றியாஸ் பெஸ்டர் தெரிவித்துள்ளார். கல்முனை மாநகர சபைத் தேர்தலில்  12 ஆம் வட்டாரத்தில் மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எம்.றியாஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தொடர் ஏமாற்றத்தினால் செல்வாக்கு இழந்து போயுள்ள துரோகிகளின் கட்சியால் திட்டமிட்டு விரிக்கப்பட்டுள்ள சதி வலையிலிருந்து தப்பித்துக்கொள்ளவேண்டிய…

Read More

தனிக்கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் என்ன? வவுனியாவில் அமைச்சர் ரிஷாட் விளக்கம்

-ஊடகப்பிரிவு- வடக்கு கிழக்கிலும், வடக்கு கிழக்குக்கு வெளியேயும் அதிக எண்ணிக்கையிலும், அதிக விகிதாசாரத்திலும் முஸ்லிம்கள் வாழும் இடங்களில் சமூக நன்மை கருதி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதோடு, நாட்டில் மொத்தமாக 15 மாவட்டங்களில் தேர்தலில் களமிறங்கியிருப்பதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கூறினார். வவுனியா நகரசபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களான அப்துல் பாரி, லரீப் ஆகியோரை ஆதரித்து பட்டாணிச்சூரில்…

Read More

ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் சேகு பங்கேற்பு!

-ஊடகப்பிரிவு- அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பட்டியடிப்பிட்டியில் இன்று மாலை 07.00 மணிக்கு இடம்பெறும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் பங்கேற்கவுள்ளார். ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் சேகு இஸ்ஸதீன் இணைந்தவுடன் பங்கேற்கும், முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இதுவாகும். இந்தக் கூட்டத்தில் பிரபல அறிவிப்பாளரும், மக்கள் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளருமான எ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களும் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

அழிவுகளுக்கு அப்பாலான அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ள ஒன்றிணையுங்கள் -தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா-

  -ஊடகப்பிரிவு- நானாட்டான் பிரதேச மக்கள் அபிவிருத்தியுடன் இணையும் சக்திகளுடன் பயணிப்பதை விடுத்து எதையும் பெற்றுத்தர முடியாதவர்களுடன்  இருப்பதற்கான காரணம் அவர்களுக்கே புரியாமலுள்ளது எனவும் தற்போது அவர்கள்  அபிவிருத்தியின் ஒளியினை நோக்க ஆரம்பித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் கைத்தொழில், வர்த்தக அமைச்சரின் இணைப்பு செயலாளர் இர்ஷாத் றஹ்மத்துல்லா கூறினார். மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச சபைக்கு ஜக்கிய தேசிய முன்னணியில் இலகடிப்பிட்டி வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்…..

Read More