Headlines

குமார் குணரட்னம் கைது தொடர்பில் பிரதமருக்குக் கடிதம்

முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழுத் தலைவர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அக்கட்சி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், குமார் குணரட்னத்தின் அரசியல் உரிமை குறித்து பேச்சுவார்த்தை நடத்த சந்தர்ப்பம் வழங்குமாறும் கோராப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் சேனாதீர குணதிலக்கவின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில், உயிர் அச்சுறுத்தல் காரணமாகவே கடந்த காலங்களில்…

Read More

க.பொ.த. (சா/த) பரீட்சை 664,537 பேர் விண்ணப்பம்

எதிர்­வரும் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள கல்விப் பொதுத் ­த­ரா­தர (சாதா­ரண தரப்) பரீட்­சைக்கு ஆறு இலட்­சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்­ற­வுள்­ள­தாக பரீட்­சைகள் ஆணை­யாளர் டபிள்யூ.எம்.ஜே.புஸ்­ப­கு­மார தெரி­வித்தார். இவர்களுள் நான்கு இலட்­சத்து 3 ஆயிரத்து 442 பேர் பாட­சாலை விண்­ணப்­ப­தா­ரிகள் எனவும் இரண்டு இலட்­சத்து 60 ஆயிரத்து 895 பேர் தனியார் பரீட்­சார்த்­திகள் எனவும் பரீட்­சைகள் ஆணை­யாளர் மேலும் தெரி­வித்தார். இம்­முறை 4,670 பரீட்சை மத்­திய நிலை­யங்களை அமைக்க எதிர்­பார்க்­கப்­பட்­டுள்­ள­தோடு கடந்த வருடம்…

Read More

வெலே சுதாவின் சகோதரிக்கு விளக்கமறியல் நீடிப்பு

சர்வதேச போதைப்பொருள் வர்த்தகர் வெலே சுதாவின் சகோதரியை எதிர்வரும் 23  ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஒரு தாயின் கண்ணீர்

புதிய காத்தான்குடி 01 அஷ்_ஷஹீட் மஃறூப் வீதியில் வசிக்கும் முஹம்மட் ஜெம்ஸாத் வயது 17 என்பவர் நுரைஈரல் சுவாச நோயினால் பாதிக்கப் பட்டு இருபது நாற்களாக மட் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வெலிசலை (நூரைஈரல்) வைத்தியசாலைக்கு அனுப்ப்பட்டு அங்கு சுமார் 10 நாட்களின் பின்னர் அவரைப் பரிசோதனை செய்த செய்த வைத்தியர் உடனடியாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கான செலவுகள் 10 இலட்சங்களாகுமென்றும் 6 இலட்சம் ரூபாய்கள் உடனடியாக ஏட்பாடு செய்யுமாறு…

Read More

நாளை மதுபானசாலைகள் பூட்டு

தீபாவளியை முன்னிட்டு நாளைய தினம் நுவரெலியா மாட்டத்தில்  உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

வாகன விபத்தில் 06 வயது சிறுமி பலி

முச்சக்கர வண்டி விபத்தில் ஆறு வயதுடைய சிறுமி உயிரிழந்துள்ளார். பழைய காலி வீதி மொரட்டுவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியொன்று எதிர் திசைக்கு திரும்பும் போது முச்சக்கர வண்டியில் இருந்து சிறுமி வெளியே விழுந்துள்ளார். இதன் போது முச்சக்கர வண்டி சிறுமியின் மீது விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடுமையான காயங்களுக்குள்ளான சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி சாரதியை பொலிஸார்…

Read More

சோபித தேரரின் உடலுக்கு மக்கள் அஞ்சலி

மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித தேரரின் உடல் இன்று மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இதன்படி இன்று காலை 09.00 மணிமுதல் 12ம் திகதி நண்பகல் 12.00 மணிவரை கோட்டை நாக விகாரையில் அன்னாரின் உடலுக்கு பொது மக்கள் இறுதி மரியாதை செலுத்த முடியும்.

Read More

சிங்கள மொழி அல்குர்ஆன் வெளியீட்டில், பொலிஸ் அதிகாரிகள் கேட்ட சிந்திக்கத் தூண்டும் கேள்விகள்

-அஸ்ரப் ஏ சமத்- பி.ஜே. நேற்று  (8) இந்த நிகழ்வுக்கான வரவை இறுதி நேரத்தில் பாதுகாப்பு செயலாளா் ஊடாக சில *************** மற்றும் , சில முகவரி இல்லாத லெட்டா பெட் கொண்ட இஸ்லாமிய இயக்கங்கள் தடுத்துள்ளனா். இந் நிகழ்வு இந்த நாட்டில் வாழும் சிங்கள சமுகத்திற்கு சிங்கள மொழி மெயாப்பை வழங்கும் நிகழ்வு இதனை சில காழ்ப்புணா்ச்சி கொண்டு இந்த குர்ஆண் சிங்கள மக்களிடம் செல்லக் கூடாது எனத் தடுத்துள்ளாா்கள். ஆனால் மாசா அல்லாஹ் இந்த…

Read More

P.J. க்கு போர்க்கொடி தூக்குவதிலுள்ள பயங்கர ஆபத்துக்கள்..!

-ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்- தமிழ் நாடு தவ்ஹீது ஜமாத்தின் ஸ்தாபகர் மௌலவி ஜெய்னுலாப்தீன் அவர்களது இலங்கை வருகை குறித்து ஊடகங்களில் பூதாகரமாக வெளியிடப்படுகின்ற ஆதரவானதும் எதிரானதுமான வாதப் பிரதிவாதங்கள் கவலை தருகின்றது. தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடுகள் இல்லாவிட்டாலும் சர்வதேச அளவில் அஹ்லுஸ்ஸுன்னா அறிஞர்கள் மத்தியில் நிலவுகின்ற கருத்து வேறுபாடுகள் போன்றே அவரது சில நிலைப்பாடுகளையும் நான் காண்கின்றேன், அவரது சில கருத்துக்கள் மிகைப்படுத்தப்பட்ட திரிபுகளுக்கும் உள்ளாகியுள்ளன. இலங்கையில் உள்ள பிரபலமான இஸ்லாமிய அமைப்பு ஒன்று தமது…

Read More

பீ.ஜே. விவகாரம், ACJU க‌டித‌த்தில் ஒரு ஊழிய‌ர் கையொப்ப‌மிட்டது ஏன்..?

தென்னிந்திய‌ த‌வ்ஹீத் புர‌ட்சியாள‌ர் பீ ஜே இல‌ங்கை வ‌ருவ‌தில் இல‌ங்கை முஸ்லிம்க‌ள் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும் என‌ ஜ‌மிய்ய‌த்துல் உலமாவின் க‌டித‌ த‌லைப்பில் மௌல‌வி அல்லாத‌ ஒரு ஊழிய‌ர் கையொப்ப‌மிட்டு அறிக்கை வெளியிட்டிருப்ப‌து உல‌மாக்க‌ளை அவ‌மான‌ப்ப‌டுத்தும் செய‌ல் என‌ உல‌மா க‌ட்சி தெரிவித்துள்ள‌து. மேற்ப‌டி அறிக்கையில் ஜ‌மிய்ய‌த்துல் உல‌மாவின் நிர்வாக‌த்தில்  ச‌ம்ப‌ள‌த்துக்கு ப‌ணி புரியும் ஆத‌ம் அலி என்ப‌வ‌ர் கையொப்பமிட்டுள்ளார். மிக‌ முக்கிய‌மான‌ இந்த‌ விட‌ய‌த்தில் உல‌மா ச‌பையின் த‌லைவ‌ரோ, செய‌லாள‌ரோ, ப‌த்வாக்குழுவோ அல்ல‌து ஒரு மௌல‌வியாவ‌து…

Read More

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

மத்திய மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 9ம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 10ம் திகதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாண அமைச்சர் எம். ரமேஸ்வரன் இதனை அறிவித்துள்ளார். எவ்வாறெனினும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மாணவர்களுக்கு பரீட்சைகள் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

மலையக ரயில் சேவை பாதிப்பு

பண்டாரவளை மற்றும் ஹீல்ஓயாவுக்கிடையிலான ரயில் பாதையின் மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து பண்டாரவளை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக  ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் மலையகத்தில் சீரற்ற காலநிலை நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More