Headlines

துர்நாற்றம் வீசும் மிதக்கும் சந்தை

புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கருகில் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை பஸ்தியன் மாவத்தை பஸ் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் ஊடாக மனிங் சந்தைக்கு வரும் பொதுமக்களே இந்த துர்நாற்றத்தினால் பல்வேறு அளெகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மிதக்கும் சந்தை அமைந்துள்ள வாவி பகுதியானது பல நாட்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதாலேயே இவ்வாறு துர்நாற்றம் வீசுவதாக இங்கு வசிக்கும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இதன்காரணமாக பல்வேறு  தேவைகளுக்காக தலைநகரிற்கு வருவோரும் இதனால்…

Read More

ஆசிரியை ஒருவரை தாக்கிய அதிபர் கைது

ஆசிரியை ஒருவரை தும்பு தடியினால் தாக்கிய அதிபரை பொலிஸார் நேற்று (4) கைது செய்துள்ளனர். விடுமுறை கோரி அதிபரின் அலுவலகத்திற்கு சென்ற ஆசிரியையை அதிபர் தாக்கியுள்ளார். பாணந்துறை மஹானம வித்தியாலயத்தின் அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த ஆசிரியையின் பிள்ளையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமக்கு விடுமுறை வழங்குமாறு அதிபரிடம் கோரிய போது, அதற்கு மறுப்பு தெரிவித்து தும்பு தடியினால் அதிபர் தாக்கியதாக ஆசிரியை பொலிஸில் புகார் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More

போர்ட் சிட்டிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொழும்பில் நிர்மாணிக்கப்படவிருக்கும் போர்ட் சிட்டிக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (4) மாலை நான்கு மணியளவில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்த திட்டத்தினை எதிர்க்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த போர்ட் சிட்டி திட்டத்தினை உடனே இடைநிறுத்துமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் 9 அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இதன் ஏற்பாட்டாளர் சுஜீவ சாம்கர தெரிவித்துள்ளார்.

Read More

வர்த்­த­கர்கள் தொடர்­பாக பொது­மக்கள் முறையிடலாம்

தமிழ் – சிங்­களப் புத்­தாண்டு காலத்தில் பாவ­னை­யா­ளர்­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீதி மற்றும் அவர்­களை ஏமாற்றும் வர்த்­த­கர்­களை மடக்கிப் பிடிக்க பாவ­னை­யாளர் விவ­கா­ரங்­க­ளுக்­கான அதி­கா­ர­சபை ஏப்ரல் 11 ஆம் திகதி வரை சுற்­றி­வ­ளைப்­பு­களை மேற்­கொண்டு வரு­கின்­றது. இதன்­படி மொத்த, சில்­ல­றை­க­டைகள் மற்றும் களஞ்­சி­ய­சா­லை­களில் சோதனை நடத்­தவும் அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளனர். பாவ­னை­யா­ளர்­களை  பண்­டிகைக் காலத்தில் ஏமாற்றும் வர்த்­த­கர்கள் அதிக விலைக்கு பொருட்­களை விற்­பனை செய்யும் வர்த்­த­கர்கள் தொடர்­பாக பொது­மக்கள் 011-2399149, 011–7755481 – 3  ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு…

Read More

யால தேசிய பூங்காவில் உள்நுழையும் வாகனங்களுக்கு புதிய விதி

பாடசாலை விடுமுறையில் குறிப்பிடத்தக்க சுற்றுலா பயணிகள் யால தேசிய பூங்காவை பார்வையிட வருவதை முன்னிட்டு யால தேசிய பூங்காவில் உள்நுழையும் வாகனங்களுக்கு புதிய நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக வனவிலங்கு திணைக்கள இயக்குனர் ஜெனரல் சுமித் பிலபிடிய தெரிவித்துள்ளார். வன விலங்கு மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சபாரி ஜீப் வண்டி சாரதிகள் மற்றும் அவர்களின் சங்கத்திடமும் கலந்துரையாடி இந்த நிபந்தனைகளை விதிக்கவுள்ளதாக எனவே சபாரி ஜீப் வண்டிகள் இந்த மாதம் 10…

Read More

வெலேசுதாவுக்கு மீண்டும் விளக்கமறியல்

பல கோணங்களிலும் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் குறித்து, பண மோசடி குற்றச்சாட்டின் பெயரில் சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் வெலே சுதா உட்பட எட்டுப் பேருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 18ம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் கிஹான் பிளபிடிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அவர்களுக்கு எதிரான வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்படுவதோடு,அதுவரையில் 14நாட்களுக்கு ஒருதரம் நீதிமன்றில் ஆஜராக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்னும், ஹெரோயின் போதைப்பொருள் வியாபாரத்தில்…

Read More

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவை தனியாரிடம்!

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை தனியார்த்துறையினருக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்து வருவதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திட்டமானது ரயில்வே துறையினரை தனியார் மயப்படுத்துவதற்கான ஆரம்பம் என சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ் பீ விதானகே தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவைத்துறையில் ஏராளமான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை கையளிக்க ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தீர்மானித்துள்ளதாக…

Read More

இன்று முதல் சி.சி.டி.வி கெமராக்கள் அமுல்

105 சி.சி.டி.வி கெமராக்களை பயன்படுத்தி கொழும்பு நகர பாதைகளில் சட்டத்தை மீறும் நபர்களை கைது செய்ய இன்று (4) முதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. மேலும்  இது தொடர்பாக பொலிஸ் ரோந்து வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கெமரா பதிவுகளையும் பயன்படுத்தவுள்ளதாக பொலிஸ்  ஊடகப் பிரிவு காரியாலம் தெரிவித்துள்ளது.

Read More

கப்பலொன்றில் பெருமளவு போதைப்பொருள் மீட்பு

தெற்குக் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 101 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக  இலங்கை கடற்படையினர்  தெரிவித்துள்ளனர்.

Read More

கொட்டகலையில் பாரிய விபத்து

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயங்களுக்குள்ளான 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று காலை 7.30 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் மேபீல்ட் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற கார் ஒன்றுடன் கொட்டகலையிலிருந்து ஹட்டன் குடாஓயா பகுதிக்கு சென்ற லொறி ஒன்று நேர்க்கு நேர் மோதியுள்ளது.

Read More

பிள்ளையானுக்கு பிணை மறுப்பு.!

முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 28.4.2016 ஆம் திகதிக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தினால் ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த 25.5.2005 ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் ஆராதனையில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசங்கத்தின் படுகொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் பிள்ளையான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மலையகத்தில் பரிசோதனை

உலக டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரேயா நகரத்தில் இன்று காலை லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் லிந்துலை பொலிஸார் உள்ளிட்ட சுகாதார தாதிமார்கள் கிராம சேவகர்கள் உட்பட நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகள் அடங்கலாக பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது உணவகங்கள் மற்றும் கடைத்தொகுதிகள், மதுபானசாலைகள், பாடசாலைகள் என பல்வேறுபட்ட இடங்கள் டெங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் டெங்கு பரவும் சூழலைக் கொண்ட வீடுகள் மற்றும் கடைத்தொகுதிகளுக்கு சிவப்பு பத்திரிகை…

Read More