Headlines

அதிவேக பாதை போக்குவரத்து பாதிப்பு.!

தெற்கு அதிவேக பாதையின் கொடகம நுழைவுச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தின்போது, அதி சக்தி வாய்ந்த மின் கம்பம் ஒன்று பாதை நடுவில் உடைந்து விழுந்துள்ளது. அதிக வேகத்துடன் வந்த மோட்டார் வண்டி மின் கம்பத்தில் மோதியதனால் கம்பம் இரண்டாக உடைந்து பாதையில் விழுந்துள்ளது. இதனால், பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் ஒரு பக்கமாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசத்தின் மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Read More

மரக்கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது..!!

பலாங்கொடை, கிரிமெட்டிதென்ன பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாங்கொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 134 வெள்ளைச் சந்தன மரக்கட்டைகளுடன் மேலும் பல பெறுமதியான மரக்கட்டைகளும் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட லொறியும் பொலிஸரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read More

ரயில் சேவைகள் இன்று மாலை வழமைக்குத் திரும்பும்

பேலியகொடை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தினால் ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மூன்று பிரதான பாதைகளில் ஒரு பதையில் மாத்திரம் ரயில் சேவைகள் இடம்பெறுவதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்தார். இன்று (8) காலை கெண்டனர் ஒன்று அந்த வழியாக சென்று கொண்டிருந்த ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக சேவையில் ஈடுபடும் அனைத்து ரயில்களும் தாமதாமாகவே புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த…

Read More

இன்றுமுதல் ஆசன முன்பதிவுக்கு தடை.!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று (8) முதல்   புத்தாண்டு காலம் நிறைவடையும் வரையில் பஸ்களில் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ள முடியாது எனவும் இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களின் வசதிகருதியே இந்த சேவை இடம்பெறவுள்ளதாகவும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இச் சேவையை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். 50 மேலதிக ரயில் சேவைகளும் 3482 மேலதிக இ.போ.ச. பஸ் சேவைகளும் நடத்தப்பட…

Read More

இலங்கையிலும் : ஆபத்தான புகையிரத பயணம்

இந்தியாவையடுத்து இலங்கையிலும் புகையிரத பயணிகள் புகையிரதத்தில் எங்கு இடமுள்ளதோ அங்கும் அமர்ந்து பயணத்தை மேற்கொண்டுள்ள காட்சி பதிவாகியுள்ளது. களனி – பியகம வீதியின் களுபாலத்தின் கீழ் கொள்கலன் பாரவூர்தியொன்று விபத்துக்குள்ளானதால் புகையிரத சேவைகள் தாமதமாகின. குறித்த விபத்தினால் இரு புகையிரத பாதைகள் சேதமடைந்து, பிரதான புகையிரத சேவைகளின்   போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டன. இதனால் புகையிர நிலையத்தில் புகையிரதத்திற்காக காத்து நின்றவர்கள்  வேறு புகையிரதங்களில் ஏறி பயணத்தை தொடர்ந்ததை அவதானிக்க முடிந்தது. இதேவேளை, இந்தியா, பங்களாதேஷ் போன்ற…

Read More

பாரவூர்தி இறுகியதில் கொழும்பில் போக்குவரத்து ஸ்தம்பிதம்

பேலியகொட  கலு பாலத்தின் அருகில் பாரவூர்தியொன்று இறுகியமையினால் அப்பகுதி வழியேயான போக்குவரத்து பெரும் பாதிப்பபுக்குள்ளாகியுள்ளதாக செய்திகள்தெரிவித்தார். மேலும், குறித்த பாரவூர்தி விபத்து காரணமாக ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்காரணமாக ரயில சேவைகளும் தாமதமடையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் பொதுமக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன் சாரதிகளும் தங்களது வாகனங்களை சீராக ஓரங்கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனடிப்படையில், அவ்விடத்திற்கு சென்ற பொலிஸார் லொறியை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Read More

ரயில் சேவைகள் பாதிப்பு.!

வனவாசல பகுதியில் நேற்றிரவு (7) கெண்டனர் வாகனம்  ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அந்த வழியாக செல்லும் ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. விபத்து காரணமாக ரயில் பாதைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனை திருத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Read More

அக்கரப்பத்தனை தோட்ட குடியிருப்பில் தீ

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட அக்கரப்பத்தனை டொரிங்டன் தோட்ட கல்மதுரை பிரிவின் குடியிருப்பில்  இன்று காலை 7.00 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் வீட்டு பகுதியில்  தீ பரவியுள்ளது. இதனால் அவ்வீட்டில் உபகரணங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள், சீருடை என அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேவேளை இது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஸ்தலத்திற்கு விரைந்த…

Read More

முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 8 ஆம் திகதி விடுமுறை

இவ்வாண்டின் முதலாம் தவணை பாடசாலை விடுமுறைக்காக சகல முஸ்லிம் பாடசாலைகளையும் இம் மாதம் 8ஆம் திகதி மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் ஒரே தினத்தில் விடு முறை வழங்க வேண்டும் என்ற முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் விடுத்த விஷேட வேண்டு கோளின் பிரகாரம்,…

Read More

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கூடுதல் அதிகாரம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனுமதி பத்திரம் இன்றி பயணிக்கும் பயணிகள் பஸ் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அவ் வீதிகளில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (5) கொழும்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்தர தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், எதிர்காலத்தில் அனுமதிப்பத்திரமின்றி பயணிக்கும் பஸ்களுக்கு எதிராகவும் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் பஸ்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்வதற்கு நெடுஞ்சாலைகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அதிகாரம்…

Read More

மலையகத்தில் கடும் வறட்சி

நாட்டில் நிலவிவரும் கடுமையான வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக மலையகத்தின் பல பிரதேசங்களிலும் காணப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைய ஆரம்பித்துள்ளது. கொஸ்லந்தை உள்ளிட்ட பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வற்றிப்போகும் நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 658 அடி உயரமானதும் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய உயரமாக தியலும நீர் வீழ்ச்சியின் நீர்மட்டமும் பெருமளவில் குறைவடைந்துள்ளது. மலைகத்தை அண்டிய பிரதேசங்களில் அண்மைய நாட்களாக போதியவு மழை வீழ்ச்சி கிடைக்காமையினால் மேற்படி நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைய ஆரம்பித்திருக்கும் நிலையில் மலையக மக்கள் நீர்த்தட்டுப்பாட்டை எதிர்கொள்ள…

Read More